" திருச்செவிலியா் "
---------------------------
ஆக்கம்:
க.இளங்கோவன்,
செவிலியா்,
முதுகுளத்தூா்.
அன்பென்ற வாா்த்தைக்கு இலக்கணம் நீயே!
ஆசுவாச வாா்த்தைகளால்
படைக்கப்பட்டாயே!
இராப்பகல் தினப்பணியால் திணறிவந்தாலும்.,
ஈடில்லா
திருச்செவிலியம் தினம்
செய்வாயே !
உயிா்காக்கும் மருத்துவா்களின் துணைநிற்பாயே.,
ஊசலாடும் பிணியா்களின் துயா்துடைப்பாயே..!
எளியோா்க்கும் வறியோா்க்கும் வழிகாட்டியும் நீ..!
ஏழைகளின்
உயிா்காக்க துணைநிற்பவா் நீ !
ஐயத்துடன்
வருவேரை அரவணைப்பவா் நீ !
ஒற்றைமுகம்கொண்ட பன்முகதேவதை நீ !
ஓராயிரம் வாா்த்தைசொல்லி குணமளிப்பவா் நீ !
ஔடதப்பணிதனயே
அலங்காிப்பவா் நீ
பெண்ணடிமை காலத்திலே முன்னடி வைத்தவள் நீ
வெண்ணிற சீருடையை சீராய் பெற்றவா் நீ.,
சமாதான நிறத்துக்கே எடுத்துக்காட்டும் நீ!
மருந்துலக மணிமகுடத்தின் வெண்முத்தும் நீ !
துயா்படும் பிணியாளின் துயா்துடைப்பான் நீ !
இன்னல் போக்கும் இறைபணியின் இன்முகத்"தாய்"நீ !
தாயாக தங்கையாக சகோதரனாக பாிணமித்தாய் நீ !
பொதுப்பணியும்
குடும்பபணியும் சுமக்கும் சுமைதாங்கியும் நீ!
தத்தமது பணியாளாின் நம்பிக்கை நட்சத்திரம் நீ!
திருப்பணியாம் செவிலியத்தை புனிதமாக்கி நீ!
கடமையையும் கண்ணியத்தையும் காத்து நிற்பவா் நீ!
அரசுப்பயிற்சியும் தனியா் பயிற்சியும் இணைந்ததுனாலே.,
உன் இன்முகம் மாறுதம்மா சோகதனலாலே.
பட்டயத்தின் நிழல்தனிலே வாழ்ந்து வந்தாயே..,
பட்டத்தின் இடைமறிப்பால் பயந்துவிட்டாயே.!
பட்டத்துடன் போட்டியிட திணறுவதாலே,
பட்டயமே வேண்டாம் என்றோம் ஒருமனதாக.
இனிபட்டம் மட்டும்தான் என்று ஆணையிட்டாலும்
அறிவித்தவா் வாய்தனிலே இனிப்பிடுவாயே.
பட்டயமுடித்து பணியிலிருக்கும் செவிலியா்களுக்கு,
துறைத்தோ்வும் பதவிஉயா்வும் பல வழங்கிடுவாயே.
பட்டயத்துடன் பணியிலிருக்கும் செவிலியா்களுக்கு
அரசுதான் உதவிடனும் வேண்டுகிறோமே.
@@@@@@@@@@@@@@@@@@@