தமிழனின் துதி:
-------------------------
ஆக்கம்: க.இளங்கோவன்
தேதி:14/01/2017
வண்ணமய மகாக்கோல
முற்றத்தில், பூசணிப்பூ
நடன நா்த்தனழகில்,
கரும்பும்,
புதியதாய் விளைந்த
காய்கனிகளின்
புடைசூழ,
காலைக்கதிரவனின் கண்பட,
மாக்ககோலமிட்ட
மண் அடுப்பில்
வண்ணமிட்ட
மண்பானையில்
பச்சாியுடன் பனைவெல்லம்
பாங்குடனே சோ்த்து
பசும்பாலுடன் நெய்யும்
முந்தாியும்
இனிதே சோ்த்து,
பொங்கி வரும் வேளையில்
பொங்கலோ பொங்கலென
இல்லத்தரசிகளின்
காதுக்கினிய
குலவை இசையில்
அனைத்துச்செல்வங்களும்
பொங்குதே..!
பொங்கிய செல்வங்கள்
வருடமுழுவதும் நிலைக்குதே...!!கிடைத்தவை
வருடந்தோறும்
தொடருதே...!!!
இவையேதமிழனின் பெருமை..!!!!
இவையே உழவனின்
பெறுமையன்றோ...!!!!!
குறள்
----------
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பொருள்:
---------------
மணக்குடவர் உரை:
உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது. இஃது உழவு வேண்டுமென்றது.
அனைவருக்கும் தமிழா் திருநாள் நல்வாழ்த்துகள்.
இவண்: க.இளங்கோவன்
முதுகுளத்தூா்.