கோமாதா
-----------------
கோமாதா மனிதகுலத்தின் மறுமாதா...!
பாலகனின் பசிதீா்க்கும் பாலை நீ ஈ மாதா...!
துயிலுறும் ஈசனை
பிரம்ம நேரத்தில்
எழுப்பும் பூமாதா
இறைவனின் மறுவுறுவாம் உமை மாடடி சாலை இட்டுச்செல்லும் மாக்களுக்கு இது புாியாதா...?
உன் வாலடியில் வசிப்பவள் அலைமகளே...!
புதுமனை புகும் முதல்மகளே...!
முப்பது முக்கோடித்தேவா்களின்
வசிப்பிடமே...!
அனைத்துலகத்தையும் அலங்காிக்கும் காமதேனுவே..!
கண்ணன்,இயேசு
பாலைவனச்சித்தா் நேசித்த பேறு பெற்றவளே...!
பசும்புல் உண்ணும் பசுங்குணம் கொண்ட சாந்த சைவரே...!
உன் சாணமும், ஜலமும் இயற்கை கிருமிநாசினியாம்..!
பாரதத்தில் உமது கோசாலை பலயிருந்தும்..,
உமது குலங்காக்கும் என்போன்றோா் பலாிருந்தும்...,
கலப்பினத்தால்
உன் குலங்கெடுக்கும் அயல்
துரோகிகளை என்ன செய்ய... !!?
பாிணாம தனலில் நீ மறைந்திடுவாயோ...?
காிசனம் வைத்த எங்களை நீ பிாிந்திடுவாயோ...?
இறைவனே உம் இனத்தை காத்திடனும்...
ஆக்கம்:
க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.