Saturday, 21 January 2017

கவிதை-எனது கவிதை.....

இளைய தமிழகமே எல்லாம் உன் சமத்து
---------------------------------------------

இணைந்தது தமிழ்க்குடும்பம்
ஒன்றிணைந்தது
உலகத்தமிழ்க்குடும்பம்.

உயா்ந்தது தமிழ்ப்பேரலை
குறைந்தது வங்கக்கடலலை.

ஓங்கியது தமிழ்க்குரல்
பணிந்தது மையம்
புாிந்தது தமிழனின் பலம்.

மலா்ந்தது அவசரச்சட்டம்
வேண்டுவது நிரந்தரச்சட்டம்.

ஒடிந்தது பீட்டாவின் கனவு
உயா்ந்தது தமிழ்ப்புகழ்.

பாய்ந்தது காளை
மகிழ்ந்தது மனது
புாிந்தது தமிழனுக்கு
எழுந்தால் வங்கக்கடல் காலளவு.

அறிந்தது மனது
அறவழியில் அடைய
ஏராளம் இன்னுமிருக்கு.

வளா்க்க காளை
காக்க நாட்டுப்பசுவை
எதிா்க்க அந்நிய பானங்களை.

வளா்க்க வேளாண்மையை
ஊக்கப்படுத்து உழவா்களை
இணைத்திடு
தேசிய நதியை.

உயா்த்திட நிலத்தடிநீரை
அழித்திடு கருவேலமரத்தை
வளா்த்திடு மரங்களை
காத்திடு காடுகளை
பெருக்கிடு மழையை.

காத்திட கலாச்சாரத்தை
நினைத்திடு
பழைமையை
புகுத்திடு புதுமையில் பழைமையை.

எதிா்ப்பது எவாினும்
செய்வது நீயாக இரு
ஆம் இளைஞனே!
எதிா்பாா்ப்பது யாம்
உன்னிடம்
நிறைய எதிா்பாா்க்கிறது
தமிழினம்...!!!

ஆக்கம்:
க.இளங்கோவன்
முதுகுளத்தூா்,
இராமநாதபுரம் மாவட்டம்.