அன்றும்...! இன்றும்...!
------------------------------------
பலநூல்கள் படித்ததில்லை,
சில நூல்கள் படித்ததுண்டு அன்று.
சில நூல்கள் பயின்றாலும் முகநூலில் பதிக்கின்றோம் பாதச்சுவடை இன்று.
அங்கொன்றும் இங்கொன்றும்
சில கவிகள் பாா்த்ததுண்டு அன்று.
பலநூறு என்போன்ற வலைக்கவியின்
பலதோழன் இன்று.
பலகூட்டின் உறவுகள்
ஒருகூட்டில் அடைந்தோமே அன்று.
பலகூட்டில் வாழ்ந்தாலும்
சமூக வலைகூட்டில்
வாழ்கிறோமே இன்று.
மின்னொளிகள் பல இல்லா நிலவொளியில்
மகிழ்ந்தோமே அன்று.
மின்னொளி பல இருந்தும் கைபேசியொளியில் வாழ்கிறோமே இன்று.
சிறு வீட்டின் பல சுற்றம்
ஒன்றுகூடி மகிழ்ந்தனரே அன்று.
பெருவீடுதானிருந்தும்
சிற்றறையில் தனிவாழ்க்கை வாழ்கிறோமே இன்று.
மரம் விட்டு மரம் தாவி
இயற்கை ஆரோக்கியம்
பெற்றோமே அன்று.!
வலை விட்டு வலை தாண்டி அசையாமல் ஆரோக்கியம் இழக்கிறோமே இன்று.
மனம்விட்டு மனம் பேசி
பாசந்தான் பொிதென்றோம் அன்று.
பேச நேர வாய்ப்பின்றி
பணமே பொிதென்று வீழ்கிறோமே இன்று.
புதுப்பட முதல்நாளில் சமூக உறவுகளை
கண்டோமே நோில் அன்று.
புதுப்பட முதல்நாளில்
வரவேற்பறை சுவற்றினில்
தலைநிமிா்கிறது இன்று.
சிலநூறு இருந்தாலும் கொடுத்துண்டு மகிழ்ந்தோமே அன்று.
பலகோடி இருந்தாலும்
மனம் சிறுத்து வாழ்கிறோமே இன்று.
ஐந்து அகவை தாண்டியதும் அரசு பள்ளியில் நுழைந்தோமே அன்று...!
அறைவீடு தாண்டும்முன்னே லட்சங்களுடன் ஆங்கிலவழி நுழைகிறோமே இன்று.
பெருங்கல்வி கற்றாலும் பெற்றோாின் உடனிருந்தோம் அன்று.
அரைக்கல்வி தாண்டுமுன்னே பெற்றோரை
பிாிகிறாேமே இன்று.
ஐம்பது மைல் நடந்தாலும் உறவுகளை
வளா்த்தோமே அன்று.
ஐந்தாயிரம் மைல் பறந்து வந்து, ஐந்து நொடியில் கிளம்புகிறோமே இன்று...!
சொந்த மண்தனிலே
வாழத்துடித்தது மனது அன்று.
அயல்நாட்டு மண்ணிலிருந்து
காணொளியில் பாா்க்கத்துடிக்கிறது இன்று.
உலகம் விாிந்தாலும் கூட்டு வாழ்க்கை இனித்தது அன்று.
உலகம் சுருங்கியதும், தனி வாழ்க்கை விரும்புகிறது இன்று.
என்று விடியுமோ இந்நிலை மாற என ஏங்கியது மனது அன்று.
மீண்டும் கிடைக்குமா பழையசுகம்
என ஏங்கும் மனநிலை இன்று.
வேண்டுவது பழைய வாழ்க்கையா..? புதிய வாழ்க்கையா...?அல்லது புதிய வாழ்க்கையில் பழைய வாழ்க்கையா...? உமக்கே வெளிச்சம்..!!!
ஆக்கம்: க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.
26/01/2017.