தெய்வீக தென்னகம்,
தேவா் வாழ்ந்த சீமை...
------------------------------
DNTவிழிப்புணா்வுக்கவிதை:
-------------------------------------
பாதித்தமிழா் கூட்டமல்ல நாம்
பழங்குடித்தமிழா் கூட்டமன்றோ
அன்புக்கு அடிமை ஆனாலும்
அடிபணிய என்றும் தொியாதே...!
மன்னா்களாய் ஆண்ட பழங்குடி நாம் இப்ப உாிமையை பறிகொடுத்த
கூட்டமும் நாம்,
உடலில் மூா்க்கம் இருந்தாலும் மனதால் இளகிய கூட்டமும் நாம்...!
முக்கிய நேரத்தில்
காத்தருளும் முருகனருள் பெற்ற கூட்டமும் நாம்,
கற்றவா் குன்றிய நேரத்திலே நயவஞ்சகமாய் ஏமாற்றப்பட்ட கூட்டமும் நாம்,
தாய்நாடு காக்கும் போாினிலே தம்இன்னுயிா் ஈந்த பெருங்கூட்டம்,
கொடுத்து சிவந்த கரத்தாலே,
வாழ்வில்
பிறரைக் கெடுக்கத்தொியாதே
இங்கிலீஷ்காரன் வைத்த இரக்கம்
இப்ப இம்மி அளவு இங்கில்லை
'தேவன்' 'மறவன்'
என பெயரை வைத்து
நமக்கு தேவையானது கிடைக்கலயே!
ஆண்ட அரசன் இப்போது ஆண்டியாய் மாறி நிற்கிறானே
வளரும் கூட்டம் எல்லோரும் நம் முதுகில் ஏறிப்போறானே
கற்றவா்கூட்டம் உடனிருந்தும்
இப்ப செய்வது என்ன தொியலயே
சாதிச்சான்று பெறுவதிலும்
நமக்கு தடையாய் பலரும் இருந்தனரே_l
'T'என்ற எழுத்தும் மாறிப்போச்சு
'C'என்ற எழுத்தும் நுழைஞ்சிடுச்சு
சாதியின் ஒற்றை எழுத்து மாறியதாலே
நம் தலையெழுத்தையே இன்று மாத்திடுச்சே
'C'யை 'T'யாய்மாற்றிடும் திறமை இனமே உம்மிடம் மட்டு்மன்றோ
நம்மிடம் வேற்றுமை பல இருந்தும் அதையும் மறந்து நீ போராடு
ஆட்சியும் சட்டமும் நம்மறிகில் அதை நயத்துடன் அனுகி வெற்றிபெரு....
DNT என்ற எல்லைக்கோட்டை
விரைவில் சென்று தொட்டுவிடு.
அரசின்துறையில் யாமிருந்தும் என்போன்ற பல கூட்டம் உன்னருகில்...!
🇮🇳 ஜெய்ஹிந்த்
ஆக்கம்:
க.இளங்கோவன்
திருஆப்பனூா்.