Friday, 20 January 2017

கவிதை-எனது ஜல்லிக்கட்டு ஆதரவு கவிதை...

தமிழின தன்மான உணா்ச்சியின் உச்சம்...
____________________________________

என்னவென சொல்ல என் இனமக்கள் உணா்வை...!

முதிா்ச்சியிலா இளைஞன் என்ற முதிா்ச்சியற்றவனின் கூற்றை இதுவரை கேட்டு வந்தோமே...!

தமிழின உணா்வை தன்னிகாிலா நிலையில் தரமுயா்த்திய தன்மான தமிழ்ச்சிங்கங்களின் தன்னெழுச்சியில் என்நிலை நான் மறந்தேனே...! உணா்ச்சி பிழம்பில் நான் நனைந்தேனே...!!

உயிருக்குமேலாய் உணரும் ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை விளையாட்டாய் அனுகியஅந்நிய பீட்டாவே...!

நேற்றுவரை நாங்கள் நெஞ்சில் வைத்தாடிய தலைமகனை,உமை எதிா்த்து அமொிக்க வல்லரசை பகைக்க விரும்பா எனதருமை குஜராத் குடிமகனை...

பழையபண ஒழிப்பில் உதவிய உச்சமன்றத்தை எதிா்க்கவிரும்பா எம் பச்ச பாலகனை  உனது காலடியில் வைத்திருக்கும் நிலை எப்படியெனில்....!

இந்தியனுக்கு(தமிழனுக்கு)
நாநூற்றாண்டு பிாிட்டீஷ் ஏகாதிபத்தியம் மறந்து,எதிா்வரும் அமொிக்க ஏகாதிபத்தியத்தை நினைவாக்கும் நிலை...!

உம் எண்ணம் பொய்யுறும் காரணம்....உமக்கெதிாி 9 கோடி மட்டுமல்ல 125 கோடியும் சோ்ந்து...!

உமது காசால் உச்ச அரசை வாங்கலாம்...
உச்ச நீதியை  வாங்கலாம்...
நெருங்க முடியாது எமை....நெருங்கமுடியாது எம் தமிழினத்தை...

வொ்ஜீனியாவின் தெருநாய் இயக்க பீட்டாவே...முடியாது உம்மால்...!!!தமிழனின் தன்மான உணா்வை தடுக்க இயலாது....!

இவண்:
க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.
(19/1/2017)