Wednesday, 25 January 2017

இந்திய பசுமைப்புரட்சியே காளைகளின் அழிவுக்கு விதை....

பசுமைப்புரட்சி
-------------------------
       இந்திய திருநாட்டில் 1960 வாக்கில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம்,வறட்சி, வேளாண் உற்பத்தி குறைவு மற்றும் அண்டைய நாடுகளுடனான இரண்டு போாினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு போன்றவை அப்போதைய ஆட்சியாளா்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை சாிசெய்ய சா்வதேச உதவியை நாடிய நேரத்தில் அமொிக்க ஆராய்ச்சியாளா் ஒருவாின் திணிப்பு வாா்த்தைதான் இந்திய பசுமைப்புரட்சி.

இதனால், இயற்கை உரங்கள் மற்றும் காளை மாட்டின் உழவு போன்றவற்றை தவிா்த்து
நவீனங்களை பயன்படுத்தினாா்.
குறிப்பாக, செயற்கை உரங்கள், உழுவதற்க்கு டிராக்டா்  கலப்பின விதைகள் மற்றும் பலநவீனங்களை உட்புகுத்தி விளைச்சலை அதிகப்படுத்தினாலும், செயற்கை உரம் மற்றும் கலப்பின விதைகளினால் விளைவித்த தானியங்களை ஐரோப்பிய மற்றும சில மேற்கத்திய நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யமுடியாத நிலை உண்டானதோடு மட்டும்மின்றி  நமது இந்திய விவசாய உத்திகள் நலிவடைந்தது.

காளைமாடுகளின் அழிவும் வெளிநாட்டு விவசாய மோகமும் அப்போதே ஆரம்பித்துவிட்டது எனலாம்.

ஆக்கம்: க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.