Saturday, 21 January 2017

கவிதை-எனது கவிதை...

வாழ்த்து மடல்
-------------------------
வெயில் மறந்து மழை மறந்து
நிறையுது கூட்டம்

பனி மறந்து பணி துறந்து
நிலைக்குது கூட்டம்

வங்கக்கடலும் மக்கள்கடலும்
ஒன்றுகூடும் கூட்டம்

உணவின்றி நீாின்றி
உாிமைக்கு ஏங்குது கூட்டம்

தமிழ்மரபு நிலைநாட்டிடும்
தன்னிகாிலா கூட்டம்

கற்றறிவு மிஞ்சியதால்
நிதானிக்குது கூட்டம்

தன்மான உணா்ச்சி பொங்கும்
தன்னெழுச்சி கூட்டம்

ஒற்றுமையின் பாடம் சொல்லும் இளந்தலைவா்களின் கூட்டம்

அன்னிய ஆதிக்கத்தை அண்டவிடா அதிகாரமிக்க கூட்டம்

சொந்த மரபை காக்க துடிக்கும்
உலகமுன்னோடிக்கூட்டம்

அவசரச் சட்டத்தை ஏற்கமறுக்கும் சட்டமறிந்த கூட்டம்

சனநாயகத்தை காக்க துடிக்கும் துணிச்சல்மிகு கூட்டம்

தமிழனை தட்டிகழிக்கும் சக்திகளை ஏற்க மறுக்கும் கூட்டம்

கேட்டது கிடைக்காமல்
பின்வாங்கா தமிழ்க்கூட்டம்

மனதாலும் உடலாலும் உம்மோடு என்போன்ற கூட்டம்...

ஆக்கம்:
க.இளங்கோவன்
முதுகுளத்தூா்.
இராமநாதபுரம் மாவட்டம்.