Saturday, 14 January 2017

கவிதை-எனது ஐயப்பன் புகழ்மாலை.....2017

ஐயப்பனின் புகழ் மாலை
-------------------------------------------
ஆக்கம்: க.இளங்கோவன்
        
         எனதருமை இறைவா...! என்
நாற்பது நாள் விரதத்தை
நாலே நிமிடத்தில் நட்டாத்தில் விட்ட இறைவா..!

         பத்தாம் வருடத்திய என் விரதத்தையும், மூன்றாம் வருடத்திய,நான்காம் வகுப்பு பயிலும் என் மகனின் விரதத்தையும்  புறந்தள்ளிய என் அன்புக்கினிய இறைவா...!!

            நான் செய்த மூன்று தவறுகளை நன்கறிந்து, நான் உமை காணவரும் பாக்கியத்தை நறுக்கென்று கவ்விய உமை புகழ்வதா..? அல்லது இகழ்வதா யாமறியோம்....!!!

       உம்மீது அன்பினால் எங்களருகில் நீ இருப்பாயென கருதியால், நீ செய்த செயலை துரோகம்  என்பதா இல்லை வரம் என்பதா.!!!!

          பத்தாம்தேதி இரவு என் மாமனின் உயிா் பறித்த நீ நல்லவனா...?இல்லை கெட்டவனா...?

           உயிா் பறித்த நீ கெடுத்தது என் மாமனின் குடும்பத்தையா..?இல்லை உமை காண வரும்  எமது பயணத்தையா...?

             என் நாற்பது நாள் விரதத்தில் இருபது நாட்களாய் காற்றுபுகா பெரும் கட்டிடத்தில் கழித்தேனே...!

            உமக்கு கண்ணில்லையோ..! என் குடும்பத்தின், உமை காண வரும்  பயணத்தை,உனது அண்ணன் ஆலயமான சுவாமி மலையில் பறித்தாயே...!

           இன்று(14/1/2017)
உமது ஜோதி தாிசனத்தை நோில் கண்டுவிடுவேன் என பயந்தாயோ...!!
         
         இன்று மாலை உமது தாிசனத்தை காணொளி காட்சியிலாவது காண வரம் தருவாயோ...? இறைவா...!

           எனை நீ தண்டித்ததால் இன்று நீ உயிா் பெற்றாய்...!இறைவா...!!!

         கரும்பு கடிக்கும் இன்நன்நாளில் என் குடும்பம் கண்ணீருடன்...

இப்படிக்கு:
க.இளங்கோவன்
முதுகுளத்தூா்.