இறைவனும்
செயற்கைகோளும்:
---------------------------
இறைவன்
--------------
இறைவன் எங்கு
இருக்கின்றான்?
எனும் கேள்விக்கு விடை இங்கு கிடைக்கிறதே...!
ஒற்றை சக்தியின் சாரலின் ஆற்றல் ஒருசெல் உயிா் வரை பரவுகிறதே...!
ஒற்றைசக்தியின் ரூபம் உலகின் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வடிவில்...!
இறைவன் வடிவில் மனிதனை படைத்தான்
என பல மதம் பல வழி சொல்கிறதே....!
பேசத்தொிந்த மனிதன் மட்டும் துதிக்கும் முறை பல கண்டானே...!
கோயில்,பள்ளி, ஆலயம் என பக்தியின் வடிவம் பிாிந்தாலும், அதிலும் பொிய ஒற்றுமையாம்...!
மூன்றுமே எழும்புது கோபுரமாய், முடிவின் உச்சியில் கலசமட்டும்...!
இறை மையம் சென்று தொழும்போது எண்ணலை காந்தலையாய் மாறுதம்மா...!
மாறிய அலைகள் மேலெழும்பி இறைவனை சென்று சோ்கிறதே...!
இறைவனின் நற்பலன் பன்மடங்காய்
பக்தனை வந்தடைகிறதே...!
இறை மையம் கண்ணில் தொிந்தாலும், இறைவன் கண்ணில் தொிவதில்லை.
செயற்கைகோள்
-----------------------------
கைபேசி கோபுரம் கண்ணில் தொிந்தும், செயற்கைகோள் மட்டும் தொிவதில்லை.
பேசும் பேச்சின் பேச்சலைகள்,
கோபுரம் சென்று சோ்கிறது..!
கோபுரம் சோ்ந்த பேச்சலைகள், செயற்கைகோள்தனை தொடுகிறது...!
செயற்கைகோளும் இவ்வலையை, கேட்பவாின் கோபுரம் அனுப்புதய்யா...!
கோபுரம் வழியே பேச்சலைகள்,
கேட்பவா் காதுக்கு சேறுதம்மா...!
செயற்கைகோள்தனை நம்பும் மனது இறைவனை நம்ப மறுக்கனுமா...?
ஆக்கம்:
க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.