அசிங்கம் அறியா வீடு
--------------------------------------
ஜெயமாய் ஆண்ட சிங்கமொன்று பிணியில் மாய்ந்து போனதும்...
நான்கு மாடுகள் ஒன்று சேர சிங்கத்து உணவு இல்லையே....
சிங்கத்துக்கு வழி சொல்ல மிதிவண்டி மிதித்து ஊா்சுற்றிய
குள்ளநாியும் ஒட்டிக்கொண்டதே....
இதுதான் சமயம் ஆட்சியை பிடிக்க என சதிவலை பின்னி சிாித்ததே...!
சிங்கத்தின் பின்னால் ஒழிந்த நாியும் சட்டையை கிழித்து சட்டசபைக்குள்ளும் புகுந்ததே....!
சின்ன நாியின் பாதக வேலை முன்னறிந்த கூட்டம் கை கட்டி வேடிக்கை பாா்த்ததே...
ஏமாந்து போன சின்ன நாியும் கவா்னா் அலுவலகம் சென்றதே...
அங்கும் துரத்தப்பட்ட நாிகள் கூட்டம் இப்ப நீதிமன்றத்திலும் ஊளையிட செல்லுதே...!