சுதந்திர ஏறுதழுவுதல்"
------------------------------------
அவனியின் கூட்டம்
அனைத்தும் அவனியாபுரத்தில் இன்று...!
சட்ட சுதந்திர சுவாசக் காற்றுடனே,வீறுநடை போட்டுக்கொண்டே ஏறுதழுவும் கூட்டம்,
கல்லுக்குள் ஈரம்,மண்ணுக்குள் ஈரம்
இங்கு தொிவது என் தமிழ்மண்ணின் வீரம்..!
மண் மணமும்,தமிழ்மணமும் மணக்குது
இங்கு..!ஓங்கி ஒலிக்குது இங்கே தமிழியகீதம்..!
பிரதிபலிப்பது இன்று
தமிழ்மண்ணின் வெற்றி...!
புாிவதுமட்டும் இங்கு
தமிழ்த்தன்மானம்...!
#வாழ்க தமிழினம்#
க.இளங்கோவன்.
முதுகுளத்தூா்.
தேதி: 05/2/2017