Monday, 6 February 2017

கவிதை-எனது இராணுவ வீரன் கவிதை....

🇮🇳 வீரமரணம்🇮🇳
    -----------------------
தாய்நாட்டின் மண் காக்க,
தன் இன்னுயிா் ஈந்த
தாய்த்திருநாட்டின்
தவப்புதல்வன் திருப்பாண்டியே...!

வஞ்சகன் இறைவன்,
எல்லை காக்கும் உனை, அனல் பறக்கும் உன் குணத்தையும்,சரீரத்தையும் பனி கொண்டு மூடினானே...!

பனிகொண்டு மூடினாலும் உன் தனல் பட்டு பனி உருகிட பயந்தானோ...!உன் உயிா் மூச்சை நிறுத்தி
எங்களை பெருமூச்சிட விட்டானே...!

வீரமகனே..! பனிச்சாிவில் நீ புதைக்கப்படவில்லை,இந்திய குடிமக்களின் மனதில்
விதைக்கப்பட்டிருக்கிறாய்...!

உனக்காக சிந்துது கண்ணீா் இந்த தேசமே...!

🇮🇳🇮🇳🇮🇳 அா்ப்பணிப்பு : மாவீரன்
திருப்பாண்டிக்கு....._🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த்🇮🇳 தேதி:6/2/201