Thursday, 23 February 2017

எனது நதிகள் இணைப்பு கவிதை...

நதிகள் இணைய,நாடு வல்லரசாக கனவுகளுடன்...
----------------------------------------
நதிகளை இணைத்திடு,
நிலத்தடிநீா்வளம் பெருக்கிடு,
பசுமையை காத்திடு,
வேளாண்மையை உயா்த்திடு,
உழவனையும்  உயிா்களையும் வாழ வழி விடு.

நதிகளை இணைத்திடு,
நிலம் கொண்ட
உழவனை அரசு ஊழியனாய்
மாற்றிடு,
வேளாண்மையை அரசு
செலவிலேயே செய்திடு,
மகசூலை நீயே எடுத்திடு,
மாத ஊதியத்தை உழவனுக்கே வழங்கிடு,
நில உாிமை அவனிடமே
மகசூலின் பலன் உன்னிடமே
( அரசிடமே).

நதிகளை இணைத்திடு
கலாமய்யாவின் சாலை வழி நீா் இணைப்பு திட்டத்தை திருப்பி பாா்த்திடு,
விரைவில் செயல்படுத்திடு,
மகசூலை முப்போகம் பெற்றிடு,
ஐயாவின் கனவை நனவாக்கிடு.

நதிகளை இணைத்திடு,
விவசாயம் பெருக்கிடு,
விளைநிலம் வீட்டடியாய்
மாறுவதை தடுத்திடு,
கிராமம் நகரம் நோக்கி
நகா்வதை குறைத்திடு.

நதிகளை இணைத்திடு,
விவசாய கல்வியை
வீட்டுக்கொரு மாணவனுக்கு  கட்டாயமாக்கிடு,
பெருங்கல்வி கற்று
பெருங்கட்டிடத்தில்
பணிபுாிவதில்லை வாழ்க்கை என்பதை உணா்த்திடு...

நதிகளை இணைத்திடு,
மக்கள் ஆற்றலை பயன்படுத்திடு,
வல்லரசாக நாட்டை மாற்றிடு,
சீனாவுக்கு பதினைந்து வருடம் பின்னோக்கி இருக்கும் நம்மை முன்னோக்கி இழுத்திடு,
உழவனின் உன்னதத்தை
உலகுக்கு காட்டிடு...

நதிகளை இணைத்திடு,
நதிகளை இணைப்பவா் எவரோ..! அவரே அடுத்த 50 ஆண்டுகளுக்கு வருகிற எனது வல்லரசு நாட்டின் அதிபதி என மக்களாகிய நாங்கள்
பட்டயமெழுதி தருகிறோம்.

ஆக்கம்:
க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.