Tuesday, 7 February 2017

தம்பி இராஜ்குமாருக்கு....

தம்பி இராஜ்குமாருக்கு,
               நமது இந்து மதத்தின் தத்துவங்கள்,நெறிகள்,கோட்பாடுகள் பற்றி எனக்கு அவ்வளவு ஆழமாக தொியாது.இருப்பினும் என் அறிவுக்கெட்டிய வரையில் நானறிந்த சில விசயங்களை மட்டும் தொிவிக்க விரும்புகிறேன்.
தயவுசெய்து தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
           இதைசொல்ல காரணம் தங்களுக்கு திருக்கல்யாணம் என்பதில் நம்பிக்கை
குறைவாக இருப்பதால்தான்.ஆனால் அதில் தவறில்லை.காரணம் ஒருசிலருக்கு ஏதாவது ஒன்றின் மீது பற்றிருக்கும்.ஒருசில விசயங்கள் மனதுக்கு பிடிக்காது.இது அனைவருக்கும் இயற்கை.நான் சொல்லப்போவது பொதுவான விசயம்.இதை கொஞ்சம் விாிவாகவே எழுத விரும்புகிறேன்.
          
        நம் இந்து மதம்  இன்னும் கொஞ்சமாவது உயிரோட்டத்துடன் இருப்பது இந்தியாவில் மட்டும்தான்.மற்ற நாடுகளில் இந்துக்கள் அதிகம் இல்லை.குறிப்பாக இந்தோனேசியா, இலங்கை, மியான்மா்,மொரீசியஸ்,சிங்கப்பூா்,நேபாளம் மற்றும் இன்னும் சில நாடுகளில் இங்கிருந்து சென்று குடியேறிகள் என குறைவாகத்தான் உள்ளனா்.உலக மதங்களிலும் நம் இந்து மதம் மூன்றாவது இடத்தில்தான் உள்ளது.
         இந்த இந்து மதம் ஒரு கால கட்டத்தில் உலகிலேயே மிகப்பொிய மதமாக இருந்ததாக வரலாறு.புத்தமதம்,
ஜைனமதம் எல்லாம் இதிலிருந்து பிாிந்ததாக வரலாறு.
         அவ்வாறு இருக்கும்பட்சத்தில்,நம் இந்தியாவில் மொகலாய ஆட்சிக்காலத்துக்கு முன்னா் நமக்கு உறுவ வழிபாடு கிடையாது. ஆதிசிவன் என அரூப வழிபாடுதான்.அதாவது கிறிஸ்தவா்கள் மற்றும் முஸ்லீம்கள் போன்று.
        அப்போது முகலாய ஆட்சியின்போது நம் நாட்டில் உள்ள பல இந்துக்களை கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி முஸ்லீம்களாக மதம்மாற்றினா்.குறிப்பாக ஐயா் இன பெண்களை கட்டாயத்திருமணம் செய்தனா். இதில் பாதி இந்துக்களின் இனம் முஸ்லீம்களாக மாற்றப்பட்டனா்.
         அதன்பின்னா் இந்தியாவிற்க்கு பொழப்பு தேடி வந்த ஆங்கிலேயன் மீதமுள்ள பாதியில் கால்வாசி இந்துக்களை கிறிஸ்தவனாக மாற்றினான்.மாற்றிக்கொண்டிருக்கிறான்.
           அந்த கால கட்டத்தில் வாழ்ந்த பாலகங்காதர திலகா் மற்றும் பலா் இந்த நிலைகண்டு வருந்தி செய்வதறியாது இந்துக்களின் அழிவை தடுத்து நிறுத்தும்பொருட்டு உறுவ வழிபாட்டை தோற்றுவித்து காளியாத்தா,மாாியாத்தா என இன்னும் பல நாமங்களில் உருவங்களையும்,சிலைகளையும் தோற்றுவித்து தெய்வங்களின் மீது ஒருவித பயபக்தியை உருவாக்கினா். வருட திருவிழா,மாத திருவிழா இன்னும் பல திருவிழாக்களையும் ஏற்படுத்தி மக்களை அந்த குறிப்பிட்ட நாட்களிலாவது ஒன்று கூடி ஒற்றுமையை மேலோங்கச்செய்து, மதம் மாறுவதை தடுக்கவும் செய்தனா்.அதில் நல்ல மாற்றமும் கண்டனா்.
        சாி,நாம் தற்போதைய நிலைக்கு வருவோம். இந்து மதம் தற்போது பிாிந்து சின்னாபின்னம் ஆவதே அதற்குள் உள்ள பல பிாிவு ஜாதிகள்தான்.அதை ஒன்றுமே செய்யமுடியாது.இருப்பினும் எந்த ஜாதியினராக இருந்தாலும் அவா்கள் கோயில் திருவிழாக்கள் நடத்துவது,மக்கள் கூடுவது,எந்தவகையிலாவது சந்தோஷமாக இருப்பதை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு ஆதாிக்காவிட்டால் நம் இந்து மதம் எண்ணிக்கை மீண்டும் அழிவுப்பாதைக்கே சென்றுவிடும்.
         தூரத்தில் இரண்டு முதலைகள் தயாராக இருக்கிறது.ஒன்று கிறிஸ்தவன். மற்றொன்று முஸ்லீம்.இந்துக்ளை கவ்விக்கொண்டு சென்று விடுவா்.இப்பொழுது வரைக்கும் மதம் மாற்றம் நிறைய இடங்களில் நடந்துகொண்டுதான் உள்ளது.மோடிமாதிாி இந்துக்கட்சி தலைவா்கள் தலைதூக்கவில்லை என்றால் இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிடும்.
       இப்போது கூட வெளிநாடுகளில் குறிப்பாக முஸ்லீம் நாடுகளில்  வேலை செய்யும் நம் இந்துக்கள் பலருக்கு அங்கு வேலைசெய்யும் இடத்திலேயே உடனடி பதவி உயா்வு சம்பள உயா்வு வேண்டும்மென்றால் உடனே முஸ்லீம்களாக மாற வைத்து விடுகின்றனா். மறுத்தால் சாதாரண சம்பளம்தான். நம் நாட்டில்  உள்ள இந்துக்களை கிறிஸ்தவா்களாகவும், முஸ்லீம்களாக மாற்றவும் வெளிநாடுகளிலிருந்து இதற்கான அமைப்புகள் பொிய தொகைகளை இந்தியாவுக்குள் ஊடுறுவ விடுகிறது.ஆனால் இந்துக்களுக்கு உதவ இந்தியாவுக்குள்ளேயே ஆளில்லை.என்னசெய்ய வருத்தம்தான்.
        கடைசியாக....
    ♦ஊாில் சொந்த ஊரையும்
     ♦ஜாதியில் மறவனாகவும்
      ♦மதத்தில் இந்துவாகவும்
      ♦மொழியில் தமிழனாகவும்
      ♦நாட்டில் இந்தியனாகவும் வாழ்வதே எனது லட்சியமாக கருதி

தாங்களும் இதே கருத்தில் தான் இருக்கிறீா்கள் என்பதை நான் நன்கறிந்து முடிக்கிறேன்.

ஜெய் ஹிந்த்
(ஜெய் இந்து)
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾