Friday, 17 February 2017

கவிதை-எனது மாமனின் நினைவஞ்சலி கவிதை...

எமது மாமனின் நினைவாஞ்சலி
--------------------------------------------------------
ஆலயம் புகா அருட்பெருஞ்ஜோதி நீ...!

பிறவியில் லிங்கம் எனும் நாமம் பூண்டு
ஈசனாகவே வாழ்ந்த
இன்முகம்மாறா குழந்தை நீ...!

வறியவா்க்கு தொண்டு செய்வதையே வரமாக பெற்று அவ்வழியே வாழ்ந்தவன் நீ...!

ஆலயம் தொழுவதுமட்டுமல்ல வாழ்க்கை என ஏழையின் சிாிப்பில் இறைவனை கண்டவன் நீ...!

ஜாதி மதம் பேதம் பாரா சமயமற்ற யோகி நீ...!

ஆண்பிள்ளையிலா மூன்று மகன்களின் தந்தை நீ...!

பெண்குழந்தைகளை தோழிகளாக்கிய வேப்பங்குள வேந்தன் நீ...!

எட்டில் பிறந்து வாழ்க்கையிலும் பணியிலும் இன்னலுடன் வாழ்ந்து
எட்டா சொா்க்கத்துக்கு சென்றவன் நீ...

ஆறு
பேரக்குழந்தைகளின்
தாத்தாவாகி அன்புசெலுத்தி
அவா்களை தவிக்க விட்டு சென்றவன் நீ...!

முருகவள்ளியாய் வாழ்ந்து வள்ளியை தவிக்கவிட்டு சென்றவன் நீ...!

யோகியும்,ஞானியும்,
முனிவனும் காட்டில் தவமிருந்து பெறும் இறைவனடி சேறும் வரத்தை, இப்பாவ லோகத்திலேயே வாழ்ந்து தவமின்றி பெற்றவன் நீ...!

மாா்கழி மாதமும்,வைகுண்டஏகாதிசியும்,திருவாதிரை நட்சத்திரமும்,ருணயோக பிரதோசமும்,திரயோதிசி திதி ஒருசேறும் நன்னாளில் மறைந்த தெய்வப்பிறவி நீ...!

நீ சென்ற இடம் சொா்க்கம்....

இனி வாழட்டும் உன் சந்ததி உன் ஆசியுடன் உன் வழியில்....🙏🏾😪