[10/4, 6:38 PM] +91 87547 57473: நண்பர் திரு.அருள்குமார் அவர்களின் Facebook பதிவிலிருந்து உங்களுக்காக...
[10/4, 6:39 PM] +91 87547 57473: For Taminadu Government Nurses ...
செவிலிய சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கிறேன்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மேற்கானும் தலைப்பில் நமது செவிலிய சகோதர சகோதரிகளுக்கு தகவலை பரிமாறிகொள்ளும் பொருட்டு இந்த பதிவு.
August இரண்டாம் வாரம் முதல் Post-B.sc(Nsg) ற்காக செவிலிய கல்லூரிக்கு வந்தமையால் சங்க செயல்பாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு நேரடியாக செயல்படாத சூழ்நிலையில் உள்ளேன்.
நமது முன்னாள் சங்க செயலாளர் திருமதி.லீலாவதி அம்மையார் அவர்கள் தாம் பணி ஓய்வு பெறும் நாட்கள் நெருங்குவதை ஒட்டி மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஏறத்தாழ ஓர் ஆண்டிற்கும் முன்னரே மாநில சங்க நிர்வாகத்திற்கு தேர்தல் நடத்த ஆவண செய்ய நிர்வாகிகளுக்கு உத்திரவிட வேண்டும் என்று நமது மரியாதைக்குரிய. மக்கள் நலவாழ்வு செயலர்
சங்க நிர்வாகத்தை மேற்பார்வையிடும் மரியாதைக்குரிய.பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை செயலரிடமும்
D.M.S &D.M.E. இயக்ககங்களில் உயரதிகாரிகளை நேரில் சந்தித்து எழுத்து பூர்வமாக புகார் அளித்திருந்தேன்.
எப்படியோ ஒரு வழியாக தேர்தல் அறிவிப்பு வந்ததது.
ஏறத்தாழ 10,674 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்திற்கு 5 பதவிகளுக்கு 15 பேர் போட்டியிட்டனர்.
நமது சங்க பொதுக்குழு கூட்டம் கூட்ட வேண்டும் எனில் ஒரு மாதத்திற்கு முன்பாக எழுத்துபூர்வமாக அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்துபூர்வமாக தகவல் அளிக்க வேண்டும்.
வாக்களிக்க உள்ள உறுப்பினர்களின் பட்டியலை மற்றும் தேர்தல் அறிவிப்பாணையை அந்தந்த மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி தகவல் பலகையில் அனைத்து செவிலியர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஒட்டபட வேண்டும்.
இவையெல்லாம் தேர்தலுக்கு முன்னரே திருமதி.லீலாவதி அம்மையாரிடத்தில் பலமுறை வலியுறுத்தபட்டது.
எனக்கு சரிவர பதில் இல்லை.
கடைசி கட்டமாக உயர்நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல்.
சென்னை உயர்நீதிமன்றம் நமது வழக்கில் இதுவரை 3 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தேர்தல் நடத்த இரண்டு வாரம் தடை என்ற உத்திரவிற்கு சங்க நிர்வாகிகள் சார்பில் தேர்தல் நடத்த அனுமதி கோரினர்.
நீதிமன்றம் கோரிக்கையை ஏற்று கொண்டு தேர்தல் நடத்த மட்டுமே அனுமதி வழங்கி முடிவுகளை வெளியிட தடை விதித்தது.
கோடைகால விடுமுறைக்கு பின்னர் நீதிமன்றத்தில் இரு தரப்பிலும் பல கட்ட விவாதங்கள் ஆவணங்கள் அடிப்படையிலும் மற்ற மாநில உயர்நீதிமன்ற வழக்குகள் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி விவாத நிறைவில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று ஆணித்தரமாக தெரிகின்றது
சங்க தேர்தல் விதிமீறல்கள் எல்லை மீறி போயுள்ளது என்று குறிப்பிட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கபட்டது.
தேர்தல் முடிவுகளை வெளியிட கோரிய திருமதி.லீலாவதி அம்மையார் அவர்களின் மனுவும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் திருமதி.வளர்மதி அம்மையார் உள்ளிட்டோரின் மனுவினை நிராகரித்து தள்ளுபடி செய்ததது.
சங்க நிர்வாகம் முடங்க கூடாது என்பதற்காக
சங்க நிர்வாகத்தை தற்சமய நிர்வாகிகள் கவனித்து கொள்ள வேண்டும் என்றும் உத்திரவிட்டது.
தேர்தல் வழக்காக மட்டுமில்லாமல் நமது செவிலிய சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்த்தில் உள்ள 3000 சதுர அடி நிலத்தை அரசு வழிகாட்டு மதிப்பு RS.9,75,000 என்றிருந்தும் அதனை Rs.4,00,000 (4 laks only) மட்டுமே அப்போதைய மாவட்ட செயலாலரும் தற்சமயம் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் திருமதி.வளர்மதி அம்மையார் உள்ளிட்டோர் விற்பனை செய்துள்ளனர்.
அந்த குற்றசாட்டும் இதில் முக்கியமனதாக உள்ளது.
இது புறம்..
மற்றொன்று.
செவிலிய கண்காணிப்பாளர் பதவி உயர்வு.
தொகுப்பூதிய செவிலியர்களின் பணிநிரந்தரம்.
கடந்த பல வருடங்களாக செவிலிய கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு கருத்துரு பெறப்பட்டு D.M.S இயக்கக அளவிலேயே பதவி உயர்வு அளிக்கபட்டு வந்தது.
பதவியின் தரம் பொருட்டு அதனை அரசு நிர்வாகத்திற்கு அனுப்பி அதன் ஒப்புதல் பெற்ற பின்னரே பதவி உயர்வு வழங்குதல் வேண்டும் என்ற நிர்வாக சீர்திருத்த நடைமுறையின் காரணமாக இவ்வளவு தாமதம்.
இந்ந நிர்வாக சீர்திருத்தம் அனைத்து துறையை சார்ந்தவர்களுக்கும் தான்.
தேர்தல் சம்பந்தமான வழக்கிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
ஆனால் தேர்தலில் போட்டியிட்ட சிலர் தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்ற நோக்கில் என் மீது உள்ள தனிப்பிட்ட கோபத்தை இதனை சரியான தருணமாக பயன்படுத்தி கொண்டனர்.
இந்த மாதத்திற்குள் பதவி உயர்வு கலந்தாய்வு இருக்க வாய்ப்பு உள்ளதாக உறுதிபடுத்தா தகவல்.
தெரிந்தால் தெரிவிக்கபடும்.
தொகுப்பூதிய செவிலியர்களுக்கான பணிநிரந்தரம்.
தற்சமயம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரத்திற்கு குறிப்பிட தக்க எண்ணிக்கையளவில் அதிகமாக பணியிடங்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது.
அதற்கு பொதுநலன் கொண்ட செவிலிய சங்கத்தலைமை அமைந்து அர்ப்பணிப்புனர்வோடு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
எனக்கும் எனது நண்பர் ஏழுமலை உள்ளிட்டோருக்கு கடவுள் வாய்ப்பு கொடுத்தார்.
எங்களது 2005 Batch ற்கு அரசு பணி கிடைத்ததை போல் மற்ற நமது இளைய செவிலிய சகோதர சகோதரிகளுக்கும் கிடைக்க பெற வேண்டும் என்ற நோக்கில் பல சிரமங்களையும் கஷ்டங்களையும் தாங்கி கொண்டு அரசு பயிற்சி செவிலியர்கள் 2006,2007,2008,2009 $10 Batch வரை அந்தந்த குறிப்பிட்ட Batch வரும்போது அவர்களில் ஒருவனாக ஒப்படைத்து கொண்டு பணிபுரிந்துள்ளேன்.
அதற்கான பயண செலவினங்களையும் சில நேரங்களில் cellphone top up இராண்டையும் பெற்றிருப்பேனே தவிர அவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்த்து சங்க செயல்பாடுகளில், அரசு பயிற்சி செவிலியருக்கத்தான் அரசு பணி கிடைக்க பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எதையும் எதிர்பார்த்து நான் செயல்பட்டதில்லை.
அதற்கு சாட்சியாக 2006 ம் ஆண்டு முதல் சகோதரர்கள் முறையே திரு.கீதாகிருஷ்ணண்
திரு.பாரிவள்ளல்
திரு.பரமசிவம்
திரு.அழகர்ராஜா
திரு.ரமேஷ்
திரு.யோகராஜ் ஆகியோரே அதற்கு சாட்சி.
ஆனால் எத்தனை எதிர்றையான விமர்சனங்கள் இது குறித்து.
சில நேரங்களில் நமது பேட்ச்சோடு அமைதியாக இருந்திருக்கலாமே என்று கூட நினைக்க வைத்தது அத்தகைய விமர்சனங்கள்.
இனிவரும் காலங்களில் சங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பொதுநல வழக்கே தேர்தல் வழக்கு.
நமது செவிலிய சங்க தேர்தல் வழக்கை மேற்கோள்காட்டி INTERNATIONAL Level லில் செயல்படும் Theosophical society க்கு தீர்ப்பு வழங்கபட்டுள்ளதை நமது செவிலிய சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கிறேன்.
இதனை கடந்த மாத CURRENT TAMILNADU CASES என்ற இதழில் வெளிவந்துள்ளது.
அதன் நகல் இங்கே.
செவிலியர்கள் நிர்வாக ரீதியில் தன்னிறைவை அடைய அனைவரும் முயற்சிப்போம்.uiuo