Monday, 26 October 2015

தஞ்சாவூா் செவிலியா் சங்க இடத்தின் வரலாறு


அன்பு செவிலிய சமூகமே,தஞ்சாவூா், நமது சங்க நிலம் பற்றி: 1964 ஆண்டு தஞ்சாவூரை தலைமை இடமாக கொண்டு (இப்போது 3 மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது)நமது சங்கத்தின் கிளைசங்கம், நமது சங்கத்துக்கு ஒரு கட்டிடம் கட்டவேண்டும் என்று, தலைமை சங்கத்துடன் பேசி 3000 சதுரஅடி வாங்கபட்டு அதை பழைய தஞ்சாவூர் சங்கத்தால் நிர்வகிக்கவிடப்பட்டது. இதில் திடீர் என்று உயர் மின்னழத்த கோபுரங்கள் (Transformer) மின்சாரத் துறையால் பதிக்கபட்டது. இந்த இடம் முக்கோண அமைப்பு கொண்டது.இதன் நடுவில் எந்த கட்டிடமும் கட்ட முடியாது. அதற்கான முயற்ச்சியும் எடுக்கப்பட்டு தோல்வி கண்டது நம் சங்கம்.2006 ல் சில சமூக விரோதிகள் அதை அபகரிக்க நினைத்தனர். இதனால் 2006 முடிவில், நமது சங்கம் பொதுகுழு, மற்றும் செயற்குழுவை கூட்டி, நிலத்தை விற்று, சென்னையில் சங்கக் கட்டிடம் கட்ட நினைத்து டெண்டர் விட்டது. யாரும் டெண்டர் கேட்கவில்லை. அதனால் மீண்டும் பொதுக்குழு கூடி, நமது நமது செவிலியர் ஒருவருக்கே விற்க முடிவுசெய்து அரசு வழிகாட்டும் மதிப்பிலிருந்து 10 ரூபாய் குறைத்துகொண்டு விற்பனை செய்யபட்டது. கிடைத்த பணத்தில் பழைய தஞ்சாவூர் 3 மாவட்டமாக பிரிக்கப் பட்டதால்  அந்த 3 மாவட்டத்துக்கும் தலா ரூ.30000 தந்துவிட்டு மீதிபணத்தை,நமது சங்க கட்டிட நிதிக்காக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடு ஏதும் நடக்க வில்லை என்பதே உண்மையான உண்மை.நிலம் விற்பனை ஆனது 2007ல் தான். இதற்கான ஆவணங்கள், நிலத்தின் வரைபடம், பொதுக்குழுவின் தீர்மானங்கள் மேலும் பல விரைவில் நமது GNT ல் வெளிவரும்.நன்றி திரு. முருகேசன் மாஸ்டா் அவா்கள்.