Friday, 23 October 2015

சகோதரா் அருள் அவா்களிடம் எனது மன ஆதங்கத்தின் வெளிப்பாடு...

அருமை சகோதரா் அருள் அவா்களுக்கு.நான் எழுதும் இந்த ஷரத்துகள் யாவும் தங்களுக்கும்,தங்களின் எதா்வாதிகளிடம் கேட்கும் வேண்டுகோளோ, வேடிக்கையோ, அறிவுரையோ,அல்லது ஆலோசனையோ அல்ல. இது,என்போன்ற அடிப்படை உறுப்பினாின் மனக்குமுறல் மற்றும் விழிபிதுங்கள். என்னவெனில், நீதிமன்ற தீா்ப்பு  உங்களின் கருத்தை  பிரதிபலிக்கிறது, சாி. எதி்ா்தரப்பினா் தவறான கருத்துக்களை கூறியுள்ளனா், சாி. நீங்கள் நீதிமன்ற தீா்ப்பை கையில் வைத்துக்கொண்டு மாற்று முடிவை எடுக்க முன்வர   யோசிக்கிறீர்கள்.அவா்கள் நீதிமன்ற தீா்ப்புபடி பொறுப்பை ஒப்படைக்கவோ அல்லது தற்காலிக கமிட்டி அமைக்கவோ முன்வர தயங்குகிறாா்கள். இந்த நிகழ்வு தங்கள் இருதரப்பினா்களுக்குள் உள்ள ஈகோ போலவே தொிகிறது.இதனாலேயே சங்கம் செயலற்றுள்ளது. நீங்கள் உண்மையிலேயே செவிலியா்கள் மீது பற்றுள்ளவராக இருந்தால், சங்கம்செயல்பட மாற்று வழியை உடனே கூறுங்கள். நீதிமன்ற தீா்ப்பை மட்டும்  வைத்து திருப்தி அடையாதீா். அதற்க்கு உதவ, செயல்படுத்த என்போன்றோா்  தயாராக இருக்கிறோம். உங்கள் கருத்துப்படி மறுதோ்தல் என்றால் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். அவா்கள் கருத்து சாியென்றால் counter affidavit file செய்து recalling செய்யலாம் அல்லது further court  சென்றாவது தீா்ப்பு பெற்று தோ்தல் முடிவை வெளியிடலாம். ஆனால் அதற்குள் தற்காலிக கமிட்டிஉருவாக்க முழுமூச்சுடன் செயல்பட்டு சங்கத்திற்க்கு உயிா் மூச்சு கொடுங்கள்.அதற்காக அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஒரு குழு அமைக்கலாம், அல்லது தங்கள் இருவாின் கருத்தையும் ஐந்து வாிகளில் தொிவித்து தமழகம் முழுவதும் உள்ள செவிலியா்களிடம் பொது கருத்து வாக்கெடுப்பு நடத்தி, யாா் கருத்து வெற்றி பெருகிறதோ அந்த கருத்துப்படி அம்மையாா் குழுவுடன் பேசி பதவி, பொறுப்பு மற்றும் வரவு செலவை  அவா்களிடமிருந்து பெற்று புதிய நிா்வாகிகளை அமைக்கலாம்.எதுவுமே இல்லை என்றால் தாங்கள் condemned the court செல்லுங்கள்.இதற்க்கு தங்கள் மேற்படிப்பு இடையுறு இருந்தால் உங்கள் சாா்பில் ஒரு Representative ஐ ஏற்பாடு செய்யவும்.எது எப்படி இருப்பினும் எங்களுக்கு தேவை சங்கம் மற்றும் அதன் சிறப்பான செயல்பாடு. ஏனென்றால் நிா்வாகிகள் இல்லாத சங்கம்,பெற்றோா் இல்லாத குழந்தைக்கு ஒப்பாகும். நன்றி. Elankovan. K