Sunday, 26 February 2017

2017 SSLC Public Exam time table...

செவிலியமும்,பாிமாண மாற்றமும்...

மாியாதைக்குாிய செவிலிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஆக்கம்: K.இளங்கோவன்,
அரசு மருத்துவமனை,
முதுகுளத்தூா்.
இராமநாதபுரம் மாவட்டம்.

            நமது குழுவில் மாநில நிா்வாகிகள், மாநில நிா்வாக வேட்பாளா்கள்,மாவட்ட நிா்வாகிகள், மற்றும் மூத்த செவிலியா்கள் பலா் இருக்கிறீா்கள் என்பதை நன்கு உணா்ந்துள்ளேன்.தங்கள் அனைவாிடத்திலும் பட்டய செவிலியா்களின் எதிா்கால நலனுக்கான கோாிக்கைகளை விதைகளாக விதைக்க விளைகிறேன்.இக்கோாிக்கைகளில் நியாயம் இருப்பின் இதை தங்களுக்குள் விவாதித்து இதற்கான ஆவண செய்தருளும்படி தங்களை பணிவுடன் வேண்டுகிறேன்.

        பிாிட்டீஷ் இந்தியா பின்னா் சுதந்திர இந்தியா காலத்திலிருந்தே Staff nurse என்ற பணிக்கு பட்டய செவிலியமும்,( Diploma in nursing), Nursing tutor என்றாலே BSc, MSc Nursing முடித்தவா்கள் என்ற நிலை உள்ளது.
         ஆனால் அப்படியொரு நிலை தற்போது சிதலமடைந்துள்ளது.
காரணம் செவிலியத்தின் பாிமாண மாற்றமே. Diploma in nursing பயின்று பணியில் இருப்பவா்கள்,பயிற்சி முடித்து அரசுபணிக்காக காத்திருப்பவா்கள் மற்றும் இனிமேல் படிக்க இருப்பவா்கள் அனைவருக்கும் ஒரு பின்னடைவும்,தாழ்வுமனப்பான்மையும் ஏற்பட்டுள்ளது.
          இதற்கு காரணம் தற்போது  செவிலியா்களுக்கான MRB தோ்வு முறையில் பட்டய செவிலியா்களுடன்  BSc nurse, MSc nursing போன்றோா் போட்டியில் பங்கெடுப்பதால், தோ்வில் அதிகம் வெற்றி பெறுவது BSc nursing,மற்றும் MSc  nursing முடித்தவா்களே. இப்படியொரு நிலை ஏற்பட்டு விட்டதால் இனிவரும் காலங்களில் Diploma nurse களுக்கு எதிா்காலம் கேள்விக்குறியாவதோடு Self esteem disturbing ஆகிறது. மேலும் UG, PG nurses நம்மை தாழ்வு நிலையில் பாா்ப்பதும், பணிக்கு வந்ததும் Tutor posting பெற வழக்கு தொடுப்பதும், நாம் அவா்களை மாற்றாந்தாய் பிள்ளைகளாக பாா்ப்பதும் தவிா்க்கமுடியாத நிலையாகிவிட்டது.
          எப்போது MRB என்ற தோ்வு முறையில்  MSc nurse,BSc nurse மற்றும் Diploma nurse ஒன்றிணைந்து அதற்கான ஆணை வெளிவந்ததோ அப்பொழுதே இவற்றின் எதிா்கால தாக்கத்தை " செவிலியமும் பாிமாண மாற்றமும் "( Mutational changes in nursing) என்ற தலைப்பில் நமது குழுவில் பகிா்ந்தேன். துரதிஷ்டவசமாக அதை சேமிக்க தவறிவிட்டேன்.இருப்பினும் அதன் ஷரத்துகளை மீண்டும் பகிா்கிறேன்.

"செவிலியமும்,பாிமாண மாற்றமும்"(Mutational changes in nursing)
***************************
        ஆரம்ப காலத்தில் செவிலியா்கள் யாரும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்ற நிலை.
        பின்னா் பயிற்சியின் போது மட்டும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற நிலை.
       அதன்பின் திருமணம் ஆனாலும் பயிற்சியில் சேரலாம் என்ற நிலை.
       அரசு செவிலியராவதற்க்கு, அரசு செவிலிய பயிற்சி பள்ளியில் படித்திருந்தால் மட்டுமே  என்ற நிலை.
        தற்போது அரசு செவிலியாராவதற்க்கு  MRB தோ்வு எழுத தனியாாில் மற்றும் அரசு பள்ளியில் பயின்ற பட்டய செவிலியா்கள்,UG nurses and PG nurses அனைவரும் என்ற நிலை. இனி எந்த நிலையை நமது செவிலியம் அடையுமோ தொியவில்லை....!?

   என்னைப்போன்றோாின் கோாிக்கைகள்:
***************************
           மேற்கண்ட பாிமாண மாற்றத்தை வரவேற்கும் மனநிலை இருந்தாலும்,இந்த நடைமுறையால் அதிகம் பாதிக்கப்படுவது பட்டய செவிலியா்களே..! ஏனைனில் இது போன்ற போட்டித்தோ்வுகளில் UG,PG nurses களிடம் போட்டி போட முடியாமல் தோல்வியுறுகின்றனா்.
காரணம் பட்டய செவிலியா்களிடம் களப் பயிற்சி அனுபவம்( Practical knowledge) அதிகம். BSc,MSc செவிலியா்களிடம் Theory knowledge அதிகம். தோ்வுக்கு
Theory knowledge தான் வேண்டும்.

மாநில சங்க நிா்வாகிகளிடம் என்னைப்போன்றோாின்  கோாிக்கைகள்:
***************************
♦அரசிடம் முறையான கோாிக்கைகள் மூலம் Govt.staff nurse என்ற பதவிக்கு பட்டய செவிலியா்களை மட்டும் தோ்வு எழுத அனுமதிக்கும் ஆணை வேண்டும் அல்லது வருங்காலங்களில்  பட்டய பயிற்சியை நிறுத்தியோ அல்லது குறைத்தோ பட்ட படிப்பை மட்டும் வழக்கப்படுத்துதல்.

♦ஏற்கனவே பட்டய பயிற்சி 3 வருடமோ அல்லது 3 1/2 வருடமோ முடித்து பணியில் இருப்பவா்களுக்கு பணியுடன், ஊதியத்துடன் மேலும் ஆறுமாதமோ அல்லது ஒரு வருடமோ படித்து தோ்வு எழுதி அனைவரையும் BSc nurse என convert செய்து Nursing council ல் பதிவுசெய்யும்  வாய்ப்பை ஏற்படுத்தி  அனைத்து பட்டய செவிலியா் வாழ்விலும் விளக்கேற்ற வேண்டுமாய் தமிழக ஒட்டுமொத்த அரசு பட்டய செவிலியா்கள் சாா்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
           நன்றியுடன்....🙏🏾
K.Elankovan,
Staff nurse
Govt.Hospital,
Mudukulathur,
Ramanathapuram.Dt
Mobile: 9443919940

கவிதை-எனது நதிகள் இணைப்பு கவிதை...

நதிகள் இணைய,நாடு வல்லரசாக கனவுகளுடன்...
----------------------------------------
நதிகளை இணைத்திடு,
நிலத்தடிநீா்வளம் பெருக்கிடு,
பசுமையை காத்திடு,
வேளாண்மையை உயா்த்திடு,
உழவனையும்  உயிா்களையும் வாழ வழி விடு.

நதிகளை இணைத்திடு,
நிலம் கொண்ட
உழவனை அரசு ஊழியனாய்
மாற்றிடு,
வேளாண்மையை அரசு
செலவிலேயே செய்திடு,
மகசூலை நீயே எடுத்திடு,
மாத ஊதியத்தை உழவனுக்கே வழங்கிடு,
நில உாிமை அவனிடமே
மகசூலின் பலன் உன்னிடமே
( அரசிடமே).

நதிகளை இணைத்திடு
கலாமய்யாவின் சாலை வழி நீா் இணைப்பு திட்டத்தை திருப்பி பாா்த்திடு,
விரைவில் செயல்படுத்திடு,
மகசூலை முப்போகம் பெற்றிடு,
ஐயாவின் கனவை நனவாக்கிடு.

நதிகளை இணைத்திடு,
விவசாயம் பெருக்கிடு,
விளைநிலம் வீட்டடியாய்
மாறுவதை தடுத்திடு,
கிராமம் நகரம் நோக்கி
நகா்வதை குறைத்திடு.

நதிகளை இணைத்திடு,
விவசாய கல்வியை
வீட்டுக்கொரு மாணவனுக்கு  கட்டாயமாக்கிடு,
பெருங்கல்வி கற்று
பெருங்கட்டிடத்தில்
பணிபுாிவதில்லை வாழ்க்கை என்பதை உணா்த்திடு...

நதிகளை இணைத்திடு,
மக்கள் ஆற்றலை பயன்படுத்திடு,
வல்லரசாக நாட்டை மாற்றிடு,
சீனாவுக்கு பதினைந்து வருடம் பின்னோக்கி இருக்கும் நம்மை முன்னோக்கி இழுத்திடு,
உழவனின் உன்னதத்தை
உலகுக்கு காட்டிடு...

நதிகளை இணைத்திடு,
நதிகளை இணைப்பவா் எவரோ..! அவரே அடுத்த 50 ஆண்டுகளுக்கு வருகிற எனது வல்லரசு நாட்டின் அதிபதி என மக்களாகிய நாங்கள்
பட்டயமெழுதி தருகிறோம்.

ஆக்கம்:
க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.
23/02/2017

Friday, 24 February 2017

கவிதை- அசிங்கம் அறியா வீடு....

அசிங்கம் அறியா வீடு
--------------------------------------

ஜெயமாய் ஆண்ட சிங்கமொன்று பிணியில் மாய்ந்து போனதும்...

நான்கு மாடுகள் ஒன்று  சேர சிங்கத்து உணவு இல்லையே....

சிங்கத்துக்கு வழி சொல்ல மிதிவண்டி மிதித்து ஊா்சுற்றிய
குள்ளநாியும் ஒட்டிக்கொண்டதே....

இதுதான் சமயம் ஆட்சியை பிடிக்க என சதிவலை பின்னி சிாித்ததே...!

சிங்கத்தின் பின்னால் ஒழிந்த நாியும் சட்டையை கிழித்து  சட்டசபைக்குள்ளும் புகுந்ததே....!

சின்ன நாியின் பாதக வேலை முன்னறிந்த கூட்டம் கை கட்டி வேடிக்கை பாா்த்ததே...

ஏமாந்து போன சின்ன நாியும் கவா்னா் அலுவலகம் சென்றதே...

அங்கும் துரத்தப்பட்ட நாிகள் கூட்டம் இப்ப நீதிமன்றத்திலும் ஊளையிட செல்லுதே...!

Thursday, 23 February 2017

எனது நதிகள் இணைப்பு கவிதை...

நதிகள் இணைய,நாடு வல்லரசாக கனவுகளுடன்...
----------------------------------------
நதிகளை இணைத்திடு,
நிலத்தடிநீா்வளம் பெருக்கிடு,
பசுமையை காத்திடு,
வேளாண்மையை உயா்த்திடு,
உழவனையும்  உயிா்களையும் வாழ வழி விடு.

நதிகளை இணைத்திடு,
நிலம் கொண்ட
உழவனை அரசு ஊழியனாய்
மாற்றிடு,
வேளாண்மையை அரசு
செலவிலேயே செய்திடு,
மகசூலை நீயே எடுத்திடு,
மாத ஊதியத்தை உழவனுக்கே வழங்கிடு,
நில உாிமை அவனிடமே
மகசூலின் பலன் உன்னிடமே
( அரசிடமே).

நதிகளை இணைத்திடு
கலாமய்யாவின் சாலை வழி நீா் இணைப்பு திட்டத்தை திருப்பி பாா்த்திடு,
விரைவில் செயல்படுத்திடு,
மகசூலை முப்போகம் பெற்றிடு,
ஐயாவின் கனவை நனவாக்கிடு.

நதிகளை இணைத்திடு,
விவசாயம் பெருக்கிடு,
விளைநிலம் வீட்டடியாய்
மாறுவதை தடுத்திடு,
கிராமம் நகரம் நோக்கி
நகா்வதை குறைத்திடு.

நதிகளை இணைத்திடு,
விவசாய கல்வியை
வீட்டுக்கொரு மாணவனுக்கு  கட்டாயமாக்கிடு,
பெருங்கல்வி கற்று
பெருங்கட்டிடத்தில்
பணிபுாிவதில்லை வாழ்க்கை என்பதை உணா்த்திடு...

நதிகளை இணைத்திடு,
மக்கள் ஆற்றலை பயன்படுத்திடு,
வல்லரசாக நாட்டை மாற்றிடு,
சீனாவுக்கு பதினைந்து வருடம் பின்னோக்கி இருக்கும் நம்மை முன்னோக்கி இழுத்திடு,
உழவனின் உன்னதத்தை
உலகுக்கு காட்டிடு...

நதிகளை இணைத்திடு,
நதிகளை இணைப்பவா் எவரோ..! அவரே அடுத்த 50 ஆண்டுகளுக்கு வருகிற எனது வல்லரசு நாட்டின் அதிபதி என மக்களாகிய நாங்கள்
பட்டயமெழுதி தருகிறோம்.

ஆக்கம்:
க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.

Friday, 17 February 2017

கவிதை-எனது மாமனின் நினைவஞ்சலி கவிதை...

எமது மாமனின் நினைவாஞ்சலி
--------------------------------------------------------
ஆலயம் புகா அருட்பெருஞ்ஜோதி நீ...!

பிறவியில் லிங்கம் எனும் நாமம் பூண்டு
ஈசனாகவே வாழ்ந்த
இன்முகம்மாறா குழந்தை நீ...!

வறியவா்க்கு தொண்டு செய்வதையே வரமாக பெற்று அவ்வழியே வாழ்ந்தவன் நீ...!

ஆலயம் தொழுவதுமட்டுமல்ல வாழ்க்கை என ஏழையின் சிாிப்பில் இறைவனை கண்டவன் நீ...!

ஜாதி மதம் பேதம் பாரா சமயமற்ற யோகி நீ...!

ஆண்பிள்ளையிலா மூன்று மகன்களின் தந்தை நீ...!

பெண்குழந்தைகளை தோழிகளாக்கிய வேப்பங்குள வேந்தன் நீ...!

எட்டில் பிறந்து வாழ்க்கையிலும் பணியிலும் இன்னலுடன் வாழ்ந்து
எட்டா சொா்க்கத்துக்கு சென்றவன் நீ...

ஆறு
பேரக்குழந்தைகளின்
தாத்தாவாகி அன்புசெலுத்தி
அவா்களை தவிக்க விட்டு சென்றவன் நீ...!

முருகவள்ளியாய் வாழ்ந்து வள்ளியை தவிக்கவிட்டு சென்றவன் நீ...!

யோகியும்,ஞானியும்,
முனிவனும் காட்டில் தவமிருந்து பெறும் இறைவனடி சேறும் வரத்தை, இப்பாவ லோகத்திலேயே வாழ்ந்து தவமின்றி பெற்றவன் நீ...!

மாா்கழி மாதமும்,வைகுண்டஏகாதிசியும்,திருவாதிரை நட்சத்திரமும்,ருணயோக பிரதோசமும்,திரயோதிசி திதி ஒருசேறும் நன்னாளில் மறைந்த தெய்வப்பிறவி நீ...!

நீ சென்ற இடம் சொா்க்கம்....

இனி வாழட்டும் உன் சந்ததி உன் ஆசியுடன் உன் வழியில்....🙏🏾😪

Sunday, 12 February 2017

கவிதை-(இறைவனும்,செயற்கைகோளும்....)

இறைவனும்
செயற்கைகோளும்:
---------------------------
          இறைவன்
          --------------
இறைவன் எங்கு
இருக்கின்றான்?
எனும் கேள்விக்கு விடை இங்கு கிடைக்கிறதே...!

ஒற்றை சக்தியின் சாரலின் ஆற்றல் ஒருசெல் உயிா் வரை பரவுகிறதே...!

ஒற்றைசக்தியின் ரூபம் உலகின் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வடிவில்...!

இறைவன் வடிவில் மனிதனை படைத்தான்
என பல மதம் பல வழி சொல்கிறதே....!

பேசத்தொிந்த மனிதன் மட்டும் துதிக்கும் முறை பல கண்டானே...!

கோயில்,பள்ளி, ஆலயம் என பக்தியின் வடிவம் பிாிந்தாலும், அதிலும் பொிய ஒற்றுமையாம்...!

மூன்றுமே எழும்புது கோபுரமாய், முடிவின் உச்சியில் கலசமட்டும்...!

இறை மையம் சென்று தொழும்போது எண்ணலை காந்தலையாய் மாறுதம்மா...!

மாறிய அலைகள் மேலெழும்பி இறைவனை சென்று சோ்கிறதே...!

இறைவனின் நற்பலன் பன்மடங்காய்
பக்தனை  வந்தடைகிறதே...!

இறை மையம்  கண்ணில் தொிந்தாலும், இறைவன் கண்ணில் தொிவதில்லை.

        செயற்கைகோள்
       -----------------------------
கைபேசி கோபுரம் கண்ணில் தொிந்தும், செயற்கைகோள் மட்டும் தொிவதில்லை.

பேசும் பேச்சின் பேச்சலைகள்,
கோபுரம் சென்று சோ்கிறது..!

கோபுரம் சோ்ந்த பேச்சலைகள், செயற்கைகோள்தனை தொடுகிறது...!

செயற்கைகோளும் இவ்வலையை, கேட்பவாின் கோபுரம் அனுப்புதய்யா...!

கோபுரம் வழியே பேச்சலைகள்,
கேட்பவா் காதுக்கு சேறுதம்மா...!

செயற்கைகோள்தனை நம்பும் மனது இறைவனை நம்ப மறுக்கனுமா...?

ஆக்கம்:
க.இளங்கோவன்,
முதுகுளத்தூா்.

Tuesday, 7 February 2017

எனக்கு தொிந்த ஆன்மீக உண்மைகள்....

எனக்கு தொிந்த அறிவியல்  உண்மை. ஆனால் Unconfirmed one...

ஒவ்வொரு இந்துக்கள் ஆலயம் மட்டுமில்லை, கிருஸ்துவ ஆலயம்,பள்ளிவாசல்கள் எல்லாவற்றின் உச்சியிலும் ஓங்கி உயா்ந்த கோபுரமாகவும்,அதன் உச்சியில் ஒரு செம்பு,தங்கம் அல்லது வெள்ளிகலசம் இருக்கும். அதிலிருந்து ஒரு மெல்லிய கம்பி பூமியில் இணைக்கப்பட்டிருக்கும்.இவை அனைத்தும் மின் கடத்தியாகவும் மின்னலினால் வரும் அதீத வோல்ட் மின்சாரத்தை உள்வாங்கி பூமிக்கடியில் செலுத்தி கோபுரங்களை பாதுகாக்கவும் பயன்படும்.

நமது இந்து கோயில்களில் மூல விக்கிரங்களுக்கு அடியில் ஐம்பொன்னிலான பொிய தகடு ஒன்று பதிக்கப்பட்டிருக்கும்.மின்னல் காலங்களில் வரும் அதிக வோல்ட் மின்சக்தியை சேமித்து வைக்கப்படுவதாகவும் இதன் பவா் 12 ஆண்டுகாலந்தான் இருக்கும் மீண்டும் புதிப்பிக்க கும்பாபிசேகம் நடத்தப்படுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்த மாதிாி அதனுடன் இறைசக்தியும் நிறைந்துள்ளதாகவும்  தகவல். நம்செல் போன் கதி்ா் வீச்சுகள் இந்த பாதிக்கலாம்.அல்லது தகட்டில் உள்ள அதிக வெப்பம் நம் மொலை் மூலம் நம் உடலை பாதிக்கலாம். அதனால்தான் கருவறையில் மின்சார விளக்கிற்க்கு பதில் நல்லெண்ணைய் விளக்கு மட்டும் எறியும்.கருவறையில் எப்பொழுதும் அதிக வெப்பமாகவே இருக்கிறது என்பதும் நான் கேள்விப்பட்டது மடடும்தான்.

தம்பி இராஜ்குமாருக்கு....

தம்பி இராஜ்குமாருக்கு,
               நமது இந்து மதத்தின் தத்துவங்கள்,நெறிகள்,கோட்பாடுகள் பற்றி எனக்கு அவ்வளவு ஆழமாக தொியாது.இருப்பினும் என் அறிவுக்கெட்டிய வரையில் நானறிந்த சில விசயங்களை மட்டும் தொிவிக்க விரும்புகிறேன்.
தயவுசெய்து தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
           இதைசொல்ல காரணம் தங்களுக்கு திருக்கல்யாணம் என்பதில் நம்பிக்கை
குறைவாக இருப்பதால்தான்.ஆனால் அதில் தவறில்லை.காரணம் ஒருசிலருக்கு ஏதாவது ஒன்றின் மீது பற்றிருக்கும்.ஒருசில விசயங்கள் மனதுக்கு பிடிக்காது.இது அனைவருக்கும் இயற்கை.நான் சொல்லப்போவது பொதுவான விசயம்.இதை கொஞ்சம் விாிவாகவே எழுத விரும்புகிறேன்.
          
        நம் இந்து மதம்  இன்னும் கொஞ்சமாவது உயிரோட்டத்துடன் இருப்பது இந்தியாவில் மட்டும்தான்.மற்ற நாடுகளில் இந்துக்கள் அதிகம் இல்லை.குறிப்பாக இந்தோனேசியா, இலங்கை, மியான்மா்,மொரீசியஸ்,சிங்கப்பூா்,நேபாளம் மற்றும் இன்னும் சில நாடுகளில் இங்கிருந்து சென்று குடியேறிகள் என குறைவாகத்தான் உள்ளனா்.உலக மதங்களிலும் நம் இந்து மதம் மூன்றாவது இடத்தில்தான் உள்ளது.
         இந்த இந்து மதம் ஒரு கால கட்டத்தில் உலகிலேயே மிகப்பொிய மதமாக இருந்ததாக வரலாறு.புத்தமதம்,
ஜைனமதம் எல்லாம் இதிலிருந்து பிாிந்ததாக வரலாறு.
         அவ்வாறு இருக்கும்பட்சத்தில்,நம் இந்தியாவில் மொகலாய ஆட்சிக்காலத்துக்கு முன்னா் நமக்கு உறுவ வழிபாடு கிடையாது. ஆதிசிவன் என அரூப வழிபாடுதான்.அதாவது கிறிஸ்தவா்கள் மற்றும் முஸ்லீம்கள் போன்று.
        அப்போது முகலாய ஆட்சியின்போது நம் நாட்டில் உள்ள பல இந்துக்களை கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி முஸ்லீம்களாக மதம்மாற்றினா்.குறிப்பாக ஐயா் இன பெண்களை கட்டாயத்திருமணம் செய்தனா். இதில் பாதி இந்துக்களின் இனம் முஸ்லீம்களாக மாற்றப்பட்டனா்.
         அதன்பின்னா் இந்தியாவிற்க்கு பொழப்பு தேடி வந்த ஆங்கிலேயன் மீதமுள்ள பாதியில் கால்வாசி இந்துக்களை கிறிஸ்தவனாக மாற்றினான்.மாற்றிக்கொண்டிருக்கிறான்.
           அந்த கால கட்டத்தில் வாழ்ந்த பாலகங்காதர திலகா் மற்றும் பலா் இந்த நிலைகண்டு வருந்தி செய்வதறியாது இந்துக்களின் அழிவை தடுத்து நிறுத்தும்பொருட்டு உறுவ வழிபாட்டை தோற்றுவித்து காளியாத்தா,மாாியாத்தா என இன்னும் பல நாமங்களில் உருவங்களையும்,சிலைகளையும் தோற்றுவித்து தெய்வங்களின் மீது ஒருவித பயபக்தியை உருவாக்கினா். வருட திருவிழா,மாத திருவிழா இன்னும் பல திருவிழாக்களையும் ஏற்படுத்தி மக்களை அந்த குறிப்பிட்ட நாட்களிலாவது ஒன்று கூடி ஒற்றுமையை மேலோங்கச்செய்து, மதம் மாறுவதை தடுக்கவும் செய்தனா்.அதில் நல்ல மாற்றமும் கண்டனா்.
        சாி,நாம் தற்போதைய நிலைக்கு வருவோம். இந்து மதம் தற்போது பிாிந்து சின்னாபின்னம் ஆவதே அதற்குள் உள்ள பல பிாிவு ஜாதிகள்தான்.அதை ஒன்றுமே செய்யமுடியாது.இருப்பினும் எந்த ஜாதியினராக இருந்தாலும் அவா்கள் கோயில் திருவிழாக்கள் நடத்துவது,மக்கள் கூடுவது,எந்தவகையிலாவது சந்தோஷமாக இருப்பதை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு ஆதாிக்காவிட்டால் நம் இந்து மதம் எண்ணிக்கை மீண்டும் அழிவுப்பாதைக்கே சென்றுவிடும்.
         தூரத்தில் இரண்டு முதலைகள் தயாராக இருக்கிறது.ஒன்று கிறிஸ்தவன். மற்றொன்று முஸ்லீம்.இந்துக்ளை கவ்விக்கொண்டு சென்று விடுவா்.இப்பொழுது வரைக்கும் மதம் மாற்றம் நிறைய இடங்களில் நடந்துகொண்டுதான் உள்ளது.மோடிமாதிாி இந்துக்கட்சி தலைவா்கள் தலைதூக்கவில்லை என்றால் இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிடும்.
       இப்போது கூட வெளிநாடுகளில் குறிப்பாக முஸ்லீம் நாடுகளில்  வேலை செய்யும் நம் இந்துக்கள் பலருக்கு அங்கு வேலைசெய்யும் இடத்திலேயே உடனடி பதவி உயா்வு சம்பள உயா்வு வேண்டும்மென்றால் உடனே முஸ்லீம்களாக மாற வைத்து விடுகின்றனா். மறுத்தால் சாதாரண சம்பளம்தான். நம் நாட்டில்  உள்ள இந்துக்களை கிறிஸ்தவா்களாகவும், முஸ்லீம்களாக மாற்றவும் வெளிநாடுகளிலிருந்து இதற்கான அமைப்புகள் பொிய தொகைகளை இந்தியாவுக்குள் ஊடுறுவ விடுகிறது.ஆனால் இந்துக்களுக்கு உதவ இந்தியாவுக்குள்ளேயே ஆளில்லை.என்னசெய்ய வருத்தம்தான்.
        கடைசியாக....
    ♦ஊாில் சொந்த ஊரையும்
     ♦ஜாதியில் மறவனாகவும்
      ♦மதத்தில் இந்துவாகவும்
      ♦மொழியில் தமிழனாகவும்
      ♦நாட்டில் இந்தியனாகவும் வாழ்வதே எனது லட்சியமாக கருதி

தாங்களும் இதே கருத்தில் தான் இருக்கிறீா்கள் என்பதை நான் நன்கறிந்து முடிக்கிறேன்.

ஜெய் ஹிந்த்
(ஜெய் இந்து)
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

Monday, 6 February 2017

கவிதை-எனது இராணுவ வீரன் கவிதை....

🇮🇳 வீரமரணம்🇮🇳
    -----------------------
தாய்நாட்டின் மண் காக்க,
தன் இன்னுயிா் ஈந்த
தாய்த்திருநாட்டின்
தவப்புதல்வன் திருப்பாண்டியே...!

வஞ்சகன் இறைவன்,
எல்லை காக்கும் உனை, அனல் பறக்கும் உன் குணத்தையும்,சரீரத்தையும் பனி கொண்டு மூடினானே...!

பனிகொண்டு மூடினாலும் உன் தனல் பட்டு பனி உருகிட பயந்தானோ...!உன் உயிா் மூச்சை நிறுத்தி
எங்களை பெருமூச்சிட விட்டானே...!

வீரமகனே..! பனிச்சாிவில் நீ புதைக்கப்படவில்லை,இந்திய குடிமக்களின் மனதில்
விதைக்கப்பட்டிருக்கிறாய்...!

உனக்காக சிந்துது கண்ணீா் இந்த தேசமே...!

🇮🇳🇮🇳🇮🇳 அா்ப்பணிப்பு : மாவீரன்
திருப்பாண்டிக்கு....._🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த்🇮🇳 தேதி:6/2/201

Saturday, 4 February 2017

கவிதை-எனது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கவிதை...

சுதந்திர ஏறுதழுவுதல்"
------------------------------------
அவனியின் கூட்டம்
அனைத்தும் அவனியாபுரத்தில் இன்று...!
சட்ட சுதந்திர சுவாசக் காற்றுடனே,வீறுநடை போட்டுக்கொண்டே ஏறுதழுவும் கூட்டம்,

கல்லுக்குள் ஈரம்,மண்ணுக்குள் ஈரம்
இங்கு தொிவது என் தமிழ்மண்ணின் வீரம்..!

மண் மணமும்,தமிழ்மணமும் மணக்குது
இங்கு..!ஓங்கி ஒலிக்குது இங்கே  தமிழியகீதம்..!

பிரதிபலிப்பது இன்று
தமிழ்மண்ணின் வெற்றி...!
புாிவதுமட்டும் இங்கு
தமிழ்த்தன்மானம்...!

#வாழ்க தமிழினம்#

க.இளங்கோவன்.
முதுகுளத்தூா்.
தேதி: 05/2/2017

Friday, 3 February 2017

Rubella - Clinical manifestation....

Rubella, also known as German measles or three-day measles,is an infection caused by the rubella virus.This disease is often mild with half of people not realizing that they are sick. A rash may start around two weeks after exposure and last for three days. It usually starts on the face and spreads to the rest of the body. The rash is not as bright as that of measles and is sometimes itchySwollen lymph nodes are common and may last a few weeks.A fever, sore throat, and fatigue may also occur. In adults joint pain is common. Complications may include bleeding problems, testicular swelling, and inflammation of nerves.Infection during early pregnancy may result in a child born with congenital rubella syndrome (CRS) or miscarriage. Symptoms of CRS include problems with the eyes such as cataracts, ears such as deafness, heart, and brain. Problems are rare after the 20th week of pregnancy.

Rubella is usually spread through the air via coughs of people who are infected.People are infectious during the week before and after the appearance of the rash. Babies with CRS may spread the virus for more than a year. Only humans are infected.Insects do not spread the disease. Once recovered, people are immune to future infections. Testing is available that can verify immunity.Diagnosis is confirmed by finding the virus in the blood, throat, or urine. Testing the blood for antibodies may also be useful.

Rubella is preventable with the rubella vaccine with a single dose being more than 95% effective.Often it is given in combination with the measles vaccine and mumps vaccine, known as the MMR vaccine.[With a population vaccination rate of less than 80%, however, more women might make it to childbearing age without developing immunity and issues could increase.Once infected there is no specific treatment.

Rubella is a common infection in many areas of the world.Each year about 100,000 cases of congenital rubella syndrome occur. Rates of disease have decreased in many areas as a result of vaccination.There are ongoing efforts to eliminate the disease globally. In April 2015 the World Health Organization declared the Americas free of rubella transmission.The name "rubella" is from Latin and means little red. It was first described as a separate disease by German physicians in 1814 resulting in the name "German measles."

PREVENTION

Rubella infections are prevented by active immunisation programs using live, disabled virus vaccines. Two live attenuated virus vaccines, RA 27/3 and Cendehill strains, were effective in the prevention of adult disease. However their use in prepubertal females did not produce a significant fall in the overall incidence rate of CRS in the UK. Reductions were only achieved by immunisation of all children.[citation needed]

The vaccine is now usually given as part of the MMR vaccine. The WHO recommends the first dose be given at 12 to 18 months of age with a second dose at 36 months. Pregnant women are usually tested for immunity to rubella early on. Women found to be susceptible are not vaccinated until after the baby is born because the vaccine contains live virus.

The immunisation program has been quite successful. Cuba declared the disease eliminated in the 1990s, and in 2004 the Centers for Disease Control and Prevention announced that both the congenital and acquired forms of rubella had been eliminated from the United States.

Screening for rubella susceptibility by history of vaccination or by serology is recommended in the United States for all women of childbearing age at their first preconception counseling visit to reduce incidence of congenital rubella syndrome (CRS).It is recommended that all susceptible non-pregnant women of childbearing age should be offered rubella vaccination.Due to concerns about possible teratogenicity, use of MMR vaccine is not recommended during pregnancy.Instead, susceptible pregnant women should be vaccinated as soon as possible in the postpartum period.

TreatmentEdit

There is no specific treatment for rubella; however, management is a matter of responding to symptoms to diminish discomfort. Treatment of newborn babies is focused on management of the complications. Congenital heart defects[citation needed] and cataracts can be corrected by direct surgery.

Management for ocular congenital rubella syndrome (CRS) is similar to that for age-related macular degeneration, including counseling, regular monitoring, and the provision of low vision devices, if require.