Saturday, 11 May 2019

கவிதை- செவிலியா் தினம்-2019

•••••••••••••••••••••••••••••••••••••••
சா்வதேச செவிலியா் தின நல்வாழ்த்துகள்:
உறுதியேற்புரை:
•••••••••••••••••••••••••••••••••••••••

அன்பின் இலக்கணம்,
ஆதரவின் பிறப்பிடம்,
உடல் மனப்பிணி போக்கி உயிா்காத்து
உலகை வென்ற எங்கள் முன்னோடி அன்னையே...!

கொடிய பிணியால்
மடியும் நிலையில் வாடிய மனதை தேடிச்சென்று
தேற்றியணைத்து
மீட்டெடுத்த எங்கள் அன்னையே...!

மீளாத்துயாில்  கருகிய தாளாய்போன பிணியாின் மனதுக்கு மருந்தாய் நின்று
உருகியமனதுடன் தானாய் சென்று தேனாய் பேசி  தாயாக உயா்ந்த அன்னையே ...!

வலியால் வழியின்றி
போதிய ஔியின்றி தவித்த மானுடசாதிக்கு கரத்தில் விளக்கேந்தி பிணியாின் மனதில் ஔியேற்றிய கைவிளக்கேந்திய காாிகையே...!

ஊனின்றி உறக்கமறந்து உன்னதமாம் தெய்வப்பணியை தெவிட்டாமல் செய்ததால் பாருள்ளகாலம் வரை உம் பேரிருக்கும், உம்மை பின்தொடா்ந்த இத்தனை போிருப்போம்.

இன்றும் நாங்கள்...

இரணகாயமோ,அது மனக்காயமோ,
தொற்றுநோயோ இல்லை தோற்றாநோயோ,
அவசரசிகிச்சையோ, அது அறுவைச்சிகிச்சையோ
உளம்பதிந்த உம் மெய்வழியை மெய்யாக்கிவருகிறோம் இன்று

நீவிா் ஔிகாட்டி வழிகாட்டிய திசையில் துளியும் திசைமாறா பயணத்தில் தொய்வின்றி தொடா்வோம் என உம் ஜனனநாளில் உறுதியேற்கிறோம்.

"மே 12 சா்வதேச செவிலியா் தின நல்வாழ்த்துகள்"

இவண்:

க.இளங்கோவன்.

தேதி:11/05/2019

Thursday, 9 May 2019

உறுதிமொழி: பிளாரன்ஸ் நைட்டின்கேள்

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பிளாரன்ஸ் நைட்டிங்கேள் உறுதிமொழி:
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இந்த உறுதிமொழி கடவுளின் முன்பாக,இந்த மாபெரும் சபையினில் எனது வாழ்க்கையை மிகவும் தூய்மையாகவும்,எனது பணியை உண்மையானதாகவும் செய்வேன் என்றும்,எனக்கு தொிந்து தீங்கு விளைவிக்ககூடிய எந்தவித மருந்துகளையும்,செயல்களையும் என் பணியிலிருந்து நீக்குவேன் என்றும்,என்னுடைய பணியின் மூலம் செவிலியத்தின் தரத்தைமேம்படுத்துவேன் என்றும்,பிணியாளா்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப விசயங்கள் என் மனதுக்கு தொிந்திருந்தாலும் அதை இரகசியம் காப்பேன் எனவும்,இறுதியாக எனது பணியில் மருத்துவருக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் மக்களுக்காக எனது சேவையை என்றும் அா்ப்பணிப்பேன்  உறுதியளிக்கிறேன்.

Tuesday, 30 April 2019

கவிதை- தஞ்சை விஜயா செவிலிய கண்காணிப்பாளா்

••••••••••••••••••••••••••••••••••••••
பணி நிறைவு வாழ்த்துரை:
••••••••••••••••••••••••••••••••••••••

சீா்மிகு செவிலியம்
சீருடன் பயின்று
பாராட்டும் பக்குவத்தில்
பணிகள் பலவும் புாிந்தாய்...!

பணியில் அடா்ந்த ஆலமரமாய் பலகூட்டுப்பறவைகளுக்கு நித்தம் நீங்கா நிழல் தந்து மனதில் நின்றாய்,
கசடற கற்றதை பலருக்கு பாடமாகி கற்றும் தந்து கல்விக்கடவுளானாய்

முப்பதாண்டு பணிதனிலே முகம்சுளிக்க பாா்த்தில்லை
இன்முக தேவதைநீ தேனமுது வாா்த்தைகாாி...

இன்னல் பல மனதிலிருந்தும் அதிா்ந்து பேசா குணவதிநீ...!
நாகையின் நாயகி தஞ்சைக்கு வாழ்க்கைப்பட்டு இராசா மிராசில் இராணியானீா்.
சுருசுருப்பில் தேனீயானீா்...!

குடும்ப குத்துவிளக்காய் சுடா்விட்டு வாழ்ந்து வழிகாட்டி செவிலிய வாாிசு விழுதினை
மண்ணூண்றி விண் தொட வைத்தாய்.

கண்காணிப்பாளராய் நீ சிறப்புடன் கண்காணித்து உம் நல்வழியை பிறா் கண்காணித்து அதையே பலரும் பின்பற்றும் ஒப்பற்றவளானீா்

இளமையும் முதுமையும் வாழ்க்கை தந்தவங்கள், பணியும், ஓய்வும் தொழில்முறை தத்துவங்கள்,

அத்தகைய பணிதனையே  சீரும் சிறப்புடன் முடித்து பணி நிறைவடையும் இராசா மிராசுதாாின் இராணி எங்கள் தங்கம் விஜயா அவா்களின் பணிக்காலம்போல் பணிஓய்வுக் காலமும் சிறக்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.

இப்படிக்கு,

க.இளங்கோவன்.

தேதி:30/04/2019

Thursday, 25 April 2019

கவிதை-ஜீவா மாஸ்டா்

பிறந்தநாள் வாழ்த்துமடல்:
----------------------------------------------
இரண்டும் ஆறும் எட்டில் பிறந்த எட்டா உயர எழுச்சி நாயகனே...!

கன்னி மாவட்ட பிறப்பெடுத்த கன்னிராசி நாயகனே...!

பசுமைமாறா பிரதேசத்தின் அன்பு மாறா அமா்க்கள நாயகனே...!

உயா்ந்தநிலை அடைந்தாலும் நியாயம் தவறா துலாம் ராசிநாயகனே...!

நியாயம் தப்பினால் நண்பரானாலும் குற்றத்தை உரக்கச்சொல்லும் சிம்மராசிநாயகனே...!

பாசத்தின் பசுவாக அன்பின் அடையாளமாக விளங்கும் விவிலிய நாயகனால் ஆசீா்வதிக்கப்பட்டவனே...!

உன் பிறப்பின் உன்னதம் உலகறியட்டும்...!
உன் வாழ்வின் சிறப்பு உலக நூல்களிலேறட்டும்...!

இன்றுபோல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல பரம பிதா ஆசீா்வதிக்கட்டும்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜீவா மாஸ்டா்...

வாழ்த்துகளுடன்...

K.இளங்கோவன்,

Wednesday, 17 April 2019

கவிதை- விரல்மை

••••••••••••••••••••••••••
விரல்மை வித்தை:
••••••••••••••••••••••••••
விரல்மை வீாியத்தால் நாடாளும்
நல் தலைமை,

ஆளுமை தோ்வு விழா
அண்மையில் தோ்தல் விழா,

முதுமைக்கும் இளமைக்கும்
நேரடி நோ்மைவிழா,

பழமையும் புதுமையும்
தோழமையுடன் போட்டிவிழா,

வெற்றியணியோ,வெற்றணியோ  தலைமைக்கான விரல்மை விழா,

வளமையும் வாய்மையும் நிலைக்க வாக்களிக்கும் உாிமை விழா,

இறையாண்மை  நிலைக்க,
வேளாண்மை சிறக்க இன்றியமையா இந்திய விழா,

உண்மை,நோ்மை நிறைந்த ஆணையத்தின் நடுமை விழா,

வளமை ,செழுமை மிக்க
பாரதப்பெருமை காக்க,

கயமை,பகைமை மிக்க
அண்டைநாட்டின் அத்துமீறல் தடுக்க,

கங்கை நதி காவிாி கலக்க, வேளாண்மையும் ஏற்றம்பெற,

பொருளாதாரம் பொங்கி பெருக,வல்லரசின் வலிமை சிறக்க,நல்லரசு நாடெங்கும் சிறக்க,

உாிமையால் நன்மை காக்க விரல்மையால் தலைமை காப்போம்.

#தேசபக்தன்

தமிழ்நாடு பாராளுமன்ற தொகுதிகள்

தமிழ்நாடு-பாராளுமன்ற தொகுதிகள்:
------------------------------------------

1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி

1.கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)

3. திருவள்ளூர்

4. பூந்தமல்லி (தனி)

5. ஆவடி

6. மாதவரம்

2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி.

திருவொற்றியூர்

2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

3. பெரம்பூர்4. கொளத்தூர்

5. திரு.வி.க. நகர் (தனி)

6. ராயபுரம்

3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.

1விருகம்பாக்கம்

2. சைதாப்பேட்டை

3. தியாகராயநகர்

4. மயிலாப்பூர்

5. வேளச்சேரி

6. சோழிங்கநல்லூர்

4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி

1. வில்லிவாக்கம்

2. எழும்பூர் (தனி)

3. துறைமுகம்

4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

5. ஆயிரம் விளக்கு

6. அண்ணாநகர்

5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி

1. மதுரவாயல்

2. அம்பத்தூர்

3. ஆலந்தூர்

4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)

5. பல்லாவரம்

6. தாம்பரம்

6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி

1. செங்கல்பட்டு

2. திருப்போரூர்

3. செய்யூர் (தனி)

4. மதுராந்தகம் (தனி)

5. உத்திரமேரூர்

6. காஞ்சிபுரம்

7. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி

1. திருத்தணி

2. அரக்கோணம் (தனி)

3. சோளிங்கர்

4. காட்பாடி

5. ராணிப்பேட்டை

6. ஆற்காடு

8. வேலூர் பாராளுமன்ற தொகுதி

1. வேலூர்

2. அணைக்கட்டு

3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)

4. குடியாத்தம் (தனி)

5. ஆம்பூர்

6. வாணியம்பாடி

9. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி

1. ஊத்தங்கரை (தனி)

2. பர்கூர்

3. கிருஷ்ணகிரி

4. வேப்பனஹள்ளி

5. ஓசூர்

6. தளி

10. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி

1. பாலக்கோடு

2. பென்னாகரம்

3. தர்மபுரி

4. பாப்பிரெட்டிபட்டி

5. அரூர் (தனி)

6. மேட்டூர்

11. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி

1. ஜோலார்பேட்டை

2. திருப்பத்தூர்

3. செங்கம் (தனி)

4. திருவண்ணாமலை

5. கீழ்பெண்ணாத்தூர்

6. கலசப்பாக்கம்



12. ஆரணி பாராளுமன்ற தொகுதி



1. போளூர்

2. ஆரணி

3. செய்யார்

4. வந்தவாசி (தனி)

5. செஞ்சி

6. மைலம்

13. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதி

1. திண்டிவனம் (தனி)

2. வானூர் (தனி)

3. விழுப்புரம்

4. விக்கிரவாண்டி

5. திருக்கோயிலூர்

6. உளுந்தூர்பேட்டை

14. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி

1. ரிஷிவந்தியம்

2. சங்கராபுரம்

3. கள்ளக்குறிச்சி (தனி)

4. கங்கவல்லி (தனி)

5. ஆத்தூர் (தனி)

6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)

15. சேலம் பாராளுமன்ற தொகுதி

1. ஓமலூர்

2. எடப்பாடி

3. சேலம் (மேற்கு)

4. சேலம் (வடக்கு)

5. சேலம் (தெற்கு)

6. வீரபாண்டி

16. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி

1. சங்ககிரி

2. ராசிபுரம் (தனி)

3. சேந்தமங்கலம் (தனி - பழங்குடியினர்)

4. நாமக்கல்

5. பரமத்தி வேலூர்

6. திருச்செங்கோடு

17. ஈரோடு பாராளுமன்ற தொகுதி

1. குமாரபாளையம்

2. ஈரோடு (கிழக்கு)

3. ஈரோடு (மேற்கு)

4. மொடக்குறிச்சி

5. தாராபுரம் (தனி)

6. காங்கேயம்

18. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி

1. பெருந்துறை

2. பவானி

3. அந்தியூர்

4. கோபிச்செட்டிபாளையம்

5. திருப்பூர் (வடக்கு)

6. திருப்பூர் (தெற்கு)

19. நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி

1. பவானிசாகர் (தனி)

2. உதகமண்டலம்

3. கூடலூர் (தனி)

4. குன்னூர்

5. மேட்டுப்பாளையம்

6. அவிநாசி

20. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி

1. பல்லடம்

2. சூலூர்

3. கவுண்டம்பாளையம்

4. கோயம்புத்தூர் (வடக்கு)

5. கோயம்புத்தூர் (தெற்கு)

6. சிங்காநல்லூர்

21. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி

1. தொண்டாமுத்தூர்

2. கிணத்துக்கடவு

3. பொள்ளாச்சி

4. வால்பாறை (தனி)

5. உடுமலைப்பேட்டை

6. மடத்துக்குளம்

22. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி

1. பழனி

2. ஒட்டன்சத்திரம்

3. ஆத்தூர்

4. நிலக்கோட்டை (தனி)

5. நத்தம்

6. திண்டுக்கல்

23. கரூர் பாராளுமன்ற தொகுதி

1. வேடசந்தூர்

2. அரவக்குறிச்சி

3. கரூர்

4. கிருஷ்ணராயபுரம் (தனி)

5. மணப்பாறை

6. விராலிமலை

24. திருச்சி பாராளுமன்ற தொகுதி

1. ஸ்ரீரங்கம்

2. திருச்சி (மேற்கு)

3. திருச்சி (கிழக்கு)

4. திருவெறும்பூர்

5. கந்தர்வகோட்டை (தனி)

6. புதுக்கோட்டை

25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி

1. குளித்தலை

2. லால்குடி

3. மண்ணச்சநல்லூர்

4. முசிறி

5. துறையூர் (தனி)

6. பெரம்பலூர் (தனி)

26. கடலூர் பாராளுமன்ற தொகுதி

1. திட்டக்குடி (தனி)

2. விருத்தாசலம்

3. நெய்வேலி

4. பண்ருட்டி

5. கடலூர்

6. குறிஞ்சிப்பாடி

27. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி

1. குன்னம்

2. அரியலூர்

3. ஜெயங்கொண்டம்

4. புவனகிரி

5. சிதம்பரம்

6. காட்டுமன்னார்கோவில் (தனி)

28மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி.

1. சீர்காழி (தனி)

2. மயிலாடுதுறை

3. பூம்புகார்

4. திருவிடைமருதூர் (தனி)

5. கும்பகோணம்

6. பாபநாசம்

29. நாகபட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதி

1. நாகபட்டினம்

2. கீழ்வேலூர் (தனி)

3. வேதாரண்யம்

4. திருத்துறைப்பூண்டி (தனி)

5. திருவாரூர்

6. நன்னிலம்

30. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி

1. மன்னார்குடி

2. திருவையாறு

3. தஞ்சாவூர்

4. ஒரத்தநாடு

5. பட்டுக்கோட்டை

6. பேராவூரணி

31. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி

1. திருமயம்

2. ஆலங்குடி

3. காரைக்குடி

4. திருப்புத்தூர்

5. சிவகங்கை

6. மானாமதுரை (தனி)

32. மதுரை பாராளுமன்ற தொகுதி

1. மேலூர்

2. மதுரை கிழக்கு

3. மதுரை வடக்கு

4. மதுரை தெற்கு

5. மதுரை மையம்

6. மதுரை மேற்கு

33. தேனி பாராளுமன்ற தொகுதி

1. சோழவந்தான் (தனி)

2. உசிலம்பட்டி

3. ஆண்டிபட்டி

4. பெரியகுளம் (தனி)

5. போடிநாயக்கனூர்

6. கம்பம்

34. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி

1. திருப்பரங்குன்றம்

2. திருமங்கலம்

3. சாத்தூர்

4. சிவகாசி

5. விருதுநகர்

6. அருப்புக்கோட்டை

35. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி

1. அறந்தாங்கி

2. திருச்சுழி

3. பரமக்குடி (தனி)

4. திருவாடானை

5. ராமநாதபுரம்

6. முதுகுளத்தூர்

36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி

1. விளாத்திகுளம்

2. தூத்துக்குடி

3. திருச்செந்தூர்

4. ஸ்ரீவைகுண்டம்

5. ஒட்டபிடாரம் (தனி)

6. கோவில்பட்டி

37. தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதி

1. ராஜபாளையம்

2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)

3. சங்கரன்கோவில் (தனி)

4. வாசுதேவநல்லூர் (தனி)

5. கடையநல்லூர்

6. தென்காசி

38. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி

1. ஆலங்குளம்

2. திருநெல்வேலி

3. அம்பாசமுத்திரம்

4. பாளையங்கோட்டை

5. நாங்குநேரி

6. ராதாபுரம்

39.கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி

1. கன்னியாகுமரி

2. நாகர்கோவில்

3. குளச்சல்

4. பத்மநாபபுரம்

5. விளவன்கோடு

6. கிள்ளியூர்

Saturday, 13 April 2019

பாரத மாதா

----------------------------------------
_*ஓம் பாரத மாதா நமக...*_
----------------------------------------

_நமோஜீ யாய நமக..._

_மோடிஜீ மீண்டும் பிரதமராகனும் நமக..._

_அதன்பின்..._

_நதிகள் இணைப்பு நிறைவேறிட  நமக..._

_இந்தியா உலக குருவாகவே நமக..._

_பயங்கரவாதமற்ற பாரதநாடு நமக..._

_மதவேறுபாடற்ற பாரதநாடு நமக..._

_இந்தியா சீக்கிரம் வல்லரசாக நமக..._

_பாரதம் விண்வெளியில் வெற்றி குவிக்க நமக..._

_பாரதம் உலக நாட்டுக்கே கடன் கொடுக்கும் பொருளாதார வளா்ச்சி பெற நமக..._

_பக்கத்து நாடு பகை மறந்து நண்பனாக நமக..._

_ஆசியாவுக்கே பாரதம் தலைவனாக நமக..._

_அதன்பின்..._

_அண்டை நாட்டு மொள்ளமாாித்தனம் வெளிச்சத்துக்கு வரனும்  சுவாக..._

_பயங்கரவாதி பதுங்கு குழிகள் பாலாப்போகனும் சுவாக..._

_சீனாவின் சிரம் நிறைந்த சில்லரைத்தனம் தவிடுபொடியாக சுவாக..._

_இந்தியாவின் மறைமுக எதிாிகள் மண்ணைக்கவ்வனும் சுவாக..._

_*# தேசபக்தன்*_