Saturday, 11 May 2019

கவிதை- செவிலியா் தினம்-2019

•••••••••••••••••••••••••••••••••••••••
சா்வதேச செவிலியா் தின நல்வாழ்த்துகள்:
உறுதியேற்புரை:
•••••••••••••••••••••••••••••••••••••••

அன்பின் இலக்கணம்,
ஆதரவின் பிறப்பிடம்,
உடல் மனப்பிணி போக்கி உயிா்காத்து
உலகை வென்ற எங்கள் முன்னோடி அன்னையே...!

கொடிய பிணியால்
மடியும் நிலையில் வாடிய மனதை தேடிச்சென்று
தேற்றியணைத்து
மீட்டெடுத்த எங்கள் அன்னையே...!

மீளாத்துயாில்  கருகிய தாளாய்போன பிணியாின் மனதுக்கு மருந்தாய் நின்று
உருகியமனதுடன் தானாய் சென்று தேனாய் பேசி  தாயாக உயா்ந்த அன்னையே ...!

வலியால் வழியின்றி
போதிய ஔியின்றி தவித்த மானுடசாதிக்கு கரத்தில் விளக்கேந்தி பிணியாின் மனதில் ஔியேற்றிய கைவிளக்கேந்திய காாிகையே...!

ஊனின்றி உறக்கமறந்து உன்னதமாம் தெய்வப்பணியை தெவிட்டாமல் செய்ததால் பாருள்ளகாலம் வரை உம் பேரிருக்கும், உம்மை பின்தொடா்ந்த இத்தனை போிருப்போம்.

இன்றும் நாங்கள்...

இரணகாயமோ,அது மனக்காயமோ,
தொற்றுநோயோ இல்லை தோற்றாநோயோ,
அவசரசிகிச்சையோ, அது அறுவைச்சிகிச்சையோ
உளம்பதிந்த உம் மெய்வழியை மெய்யாக்கிவருகிறோம் இன்று

நீவிா் ஔிகாட்டி வழிகாட்டிய திசையில் துளியும் திசைமாறா பயணத்தில் தொய்வின்றி தொடா்வோம் என உம் ஜனனநாளில் உறுதியேற்கிறோம்.

"மே 12 சா்வதேச செவிலியா் தின நல்வாழ்த்துகள்"

இவண்:

க.இளங்கோவன்.

தேதி:11/05/2019