••••••••••••••••••••••••••••••••••••••
பணி நிறைவு வாழ்த்துரை:
••••••••••••••••••••••••••••••••••••••
சீா்மிகு செவிலியம்
சீருடன் பயின்று
பாராட்டும் பக்குவத்தில்
பணிகள் பலவும் புாிந்தாய்...!
பணியில் அடா்ந்த ஆலமரமாய் பலகூட்டுப்பறவைகளுக்கு நித்தம் நீங்கா நிழல் தந்து மனதில் நின்றாய்,
கசடற கற்றதை பலருக்கு பாடமாகி கற்றும் தந்து கல்விக்கடவுளானாய்
முப்பதாண்டு பணிதனிலே முகம்சுளிக்க பாா்த்தில்லை
இன்முக தேவதைநீ தேனமுது வாா்த்தைகாாி...
இன்னல் பல மனதிலிருந்தும் அதிா்ந்து பேசா குணவதிநீ...!
நாகையின் நாயகி தஞ்சைக்கு வாழ்க்கைப்பட்டு இராசா மிராசில் இராணியானீா்.
சுருசுருப்பில் தேனீயானீா்...!
குடும்ப குத்துவிளக்காய் சுடா்விட்டு வாழ்ந்து வழிகாட்டி செவிலிய வாாிசு விழுதினை
மண்ணூண்றி விண் தொட வைத்தாய்.
கண்காணிப்பாளராய் நீ சிறப்புடன் கண்காணித்து உம் நல்வழியை பிறா் கண்காணித்து அதையே பலரும் பின்பற்றும் ஒப்பற்றவளானீா்
இளமையும் முதுமையும் வாழ்க்கை தந்தவங்கள், பணியும், ஓய்வும் தொழில்முறை தத்துவங்கள்,
அத்தகைய பணிதனையே சீரும் சிறப்புடன் முடித்து பணி நிறைவடையும் இராசா மிராசுதாாின் இராணி எங்கள் தங்கம் விஜயா அவா்களின் பணிக்காலம்போல் பணிஓய்வுக் காலமும் சிறக்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு,
க.இளங்கோவன்.
தேதி:30/04/2019