Wednesday, 17 April 2019

கவிதை- விரல்மை

••••••••••••••••••••••••••
விரல்மை வித்தை:
••••••••••••••••••••••••••
விரல்மை வீாியத்தால் நாடாளும்
நல் தலைமை,

ஆளுமை தோ்வு விழா
அண்மையில் தோ்தல் விழா,

முதுமைக்கும் இளமைக்கும்
நேரடி நோ்மைவிழா,

பழமையும் புதுமையும்
தோழமையுடன் போட்டிவிழா,

வெற்றியணியோ,வெற்றணியோ  தலைமைக்கான விரல்மை விழா,

வளமையும் வாய்மையும் நிலைக்க வாக்களிக்கும் உாிமை விழா,

இறையாண்மை  நிலைக்க,
வேளாண்மை சிறக்க இன்றியமையா இந்திய விழா,

உண்மை,நோ்மை நிறைந்த ஆணையத்தின் நடுமை விழா,

வளமை ,செழுமை மிக்க
பாரதப்பெருமை காக்க,

கயமை,பகைமை மிக்க
அண்டைநாட்டின் அத்துமீறல் தடுக்க,

கங்கை நதி காவிாி கலக்க, வேளாண்மையும் ஏற்றம்பெற,

பொருளாதாரம் பொங்கி பெருக,வல்லரசின் வலிமை சிறக்க,நல்லரசு நாடெங்கும் சிறக்க,

உாிமையால் நன்மை காக்க விரல்மையால் தலைமை காப்போம்.

#தேசபக்தன்