Thursday, 28 January 2021

கவிதை- ஜீவா அண்ணன் திருமண நாள் வாழ்த்துரை

•••••••••••••••••••••••••••••••••••••••
திருமணநாள் வாழ்த்துரை:
•••••••••••••••••••••••••••••••••••••••
ஆளும்பாதி,ஆடையும் பாதி.
ஆளின்றி ஆடையும் வீண்தான்.
ஆடையிலா ஆளும் வீண்தான்.

ஆண்டவனும் ஆடவனும் ஒன்றே.
ஏனெனில் ஆளானதும் ஊனுயிாில் அளித்தான்  பாதி இல்லத்தாளுக்கு நன்றே.

ஜீவன் பாதி,தேகமும் பாதி.
இங்கோ ஜீவாவுடன் திருமதி ஜீவாவும் பாதி.

இறைவரத்தால் இல்லறம் சிறந்து, தங்களின் நல்வாழ்க்கை சந்ததிகளுக்கும்,சமூகத்துக்கும் பாடமாக விளங்க,
ஈசனை வணங்கி மனதார வாழ்த்துகிறோம்.

வாழ்க வளமுடன்...

வாழ்த்துகளுடன்...
க.இளங்கோவன்.