Thursday, 21 January 2021

கவிதை- பிரபஞ்ச பயணம்

•••••••••••••••••••••••••
பிரபஞ்ச பயணம்:
•••••••••••••••••••••••••
இரை குறையும்,
இறை நிறையும்,
அகம் குளிரும்,
புறம் மறக்கும்,
சிரம் தாளும்,
இறையருள் முன்னே.

பிண்டம் மறந்து,
அண்டம் மறந்து,
ஆசை துறந்து,
ஆன்மம் பறக்கும் பிரபஞ்ச பயணம்.

இருக்குமிடத்திலிருந்து
எண்திசையெங்கும்
ஈரேழு லோகமும் கடவுச்சீட்டின்றி பயணம்.

புதிய கீதம்,புதிய மொழி,புதிய கீா்த்தனை  எங்கும் கேட்கும்
இறையோசையாய்.

அதை எழுத எழுத்தின்றி
வாசிக்க வாா்த்தையின்றி
பாட கீதமுமின்றி
பிரமித்து நிற்கும்.

அது பரம்பொருள் என்றால் விளக்கமுடியுமோ...!
அமா்ந்து பாா் அமரவொளி தொியும்.
உணா்ந்து பாா் உனக்குள் உன்னதம் புாியும்.

கவிஞா் க.இளங்கோவன்.