Monday, 20 May 2019

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம்

#ஸ்ரீ_சாஸ்தா_பஞ்சரத்னம்
#Sri_Sastha_Panjarathnam

🕉 லோக வீரம் மஹாபூஜ்யம்
ஸர்வ ரக்ஷாகரம் விபும்,
பார்வதீ ஹ்ருதயாநந்தம்,
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்...
( உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன். )

🕉 விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம்,
விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்,
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம்,
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்...
( வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன். )

🕉 மத்த மாதங்க கமநம்,
காருண்யாம்ருத பூரிதம்,
ஸர்வ விக்ன ஹரம் தேவம்,
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்...
( மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன். )

🕉 அஸ்மத்குலேஸ்வரம் தேவம்,
அஸ்மத் சத்ரு விநாசனம்,
அஸ்மதிஷ்ட ப்ராதாராம்,
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்...
( எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன். )

🕉 பாண்டேய வம்ச திலகம்,
கேரளை கேளிவிக்ரஹம்,
ஆர்த த்ராண பரம் தேவம்,
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்...
( பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன். )

🕉 பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ,
நித்யம் ஸுத்தம் படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான்,
சாஸ்தா வஸதி மாநஸே...
( ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் படிப்பவர்களது மனதில் சாஸ்தா வாசம் செய்கிறார். )

#Ayyappan_Temple_Kapar