*¤¤¤¤¤¤¤*
_*"அன்னை"*_
*¤¤¤¤¤¤¤*
_உயிா் தந்த உன்னதம்...!_
_உதிரத்தை அமிா்தமாக்கி ஊட்டிய உத்தமி...!_
_அன்பென்ற உணா்வூற்றின் உண்மை பாத்திரம்...!_
_பிறதிபலன் நோக்கா_
_உறவுகளின் உயா்வு...!_
_அன்பின் சேமிப்பறியா அமுதசுரபி...!_
_எத்தனை பிள்ளைகளானாலும் பாகம்பிாியா பாசத்தை பகிா்ந்தளிக்கும் வள்ளல்...!_
_அன்பை சோறாக்கி,பாசத்தை குழம்பாக்கி,அறிவை கூட்டாக்கி,என் உடலுயிா் வளா்த்த அன்னை என் தெய்வம்...!_
_ஏழையின் சிாிப்பில் இறைவன்போல,_
_என் அன்னையே எனக்கிறைவன்...!_
_பிறப்பெடுத்தபின் இறைசேர துடிக்கவேண்டியதில்லை..._
_ஈன்றெடுத்த அன்னையே என் இறை தூதா்...!_
_ஆலயம் தொழுவது சாலச்சிறந்ததெனினும் அதைவிட சிறந்தது_
_என் தாயின் மடி என்பதறிந்ததே அறிவின் அறிவு...!_
_இறைவன் எங்கிருப்பாா்,எப்படியிருப்பாா் நானறியேன்...!_
_இறைவடிவமே என் தாயின் வடிவம் என்பதை நானறிந்த தருணம் என் தாய் சென்றுள்ளாா் படைத்தவனிடம்...!_
_இன்றைய அன்னையா் தினத்தில் இவை என் அன்னைக்கு சமா்ப்பணம்._
_*"அனைவருக்கும் அன்னையா் தின வாழ்த்துகள்"*_
_*க.இளங்கோவன்.*_
_*12/05/2019*_