அச்சமோ அருவறுப்போ
அரங்கேற வாய்ப்பில்லை..!
உச்சமான உறுதிக்கு
உபயம் செய்த பணியிது..!
துச்சமோ துயரமோ
துவண்டுவிட வாய்ப்பில்லை..!
துள்ளியெழும் அலையாக
துணிச்சலான அணியிது..!
சகலப் பிணிகள்
சங்கமிக்கும் உடலை...
சலவை செய்யும்
சமத்துவச் சேவையிது..!
மரணப் பூக்கள்
மணக்கும் உலகில்...
மனிதம் காக்கும்
மருத்துவச் சேனையிது..!
வாழ்த்துகள் அண்ணா