Friday, 17 May 2019

நன்றியுரை (06/03/2019)

•••••••••••••••••••
நன்றியுரை
•••••••••••••••••••
தமிழக காவல் தெய்வமாம். மாண்புமிகு.இதய தெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்லாசியிலும்,

மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியிலும்,

மக்கள் மனம் வென்ற வெற்றி வேங்கை,

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையை பார் புகழ, பாரதம் புகழ தன்னிகரில்லா தன்னிறைவு அடைந்தும் இனியும் உயர்த்த தாகம் தனியா புதுமை விரும்பும் புதுகை மைந்தன்,

மாசிலா மாண்புமிகு மருத்துவர்,

கஜா புயலில் இளகிய மனதுடன் துயர் துடைத்த உன்னதன்,

ஏறு தழுவுதலின் கின்னஸ் நாயகன்,

செவிலியர்களின் நம்பிக்கை நட்சத்திரம்,

அடைமொழிக்கு அடங்கா மாண்புமிகு. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அண்ணன் அவர்களின் கருணையால் இன்று  செவிலியம் கேட்பதை செவிமடுத்து, துளியும் மறுக்கா வாரி வழங்கும் எங்கள் மாண்புமிகு மருத்துவ வள்ளலால் எங்கள் செவிலியம் இன்று செம்மையடைந்து ஒளிர்கிறது என்பதை எங்கும் சொல்வோம், எப்போதும் சொல்வோம்,காலம் மாறினாலும் என்றும் மறவோம்,நன்றி சொல்வோம்.

மாண்புமிகு. மருத்துவ கடலே, கடமை தவறா உம்மை வாழ்த்த வரிகளின்றி திணறுகிறோம்.
தங்கள் சாதனைளை பட்டியலிட பக்கங்கள் போதவில்லை ஐயா.

1.தமிழக மருத்துவ துறைக்கு நீவிர் தந்த புதுமை மகுடத்தை சொல்லவா...!

2.புதிய பிரிவுகளின் புதுமையை சொல்லவா...!

3.நுண் கதிர் பிரிவோ, புற்றுநோய் பிரிவோ, சிறு நீரக பிரிவோ, விபத்து காப்பு பிரிவோ, செயலி வடிவ இரத்த வங்கி பிரிவோ, இதய மாற்று அறுவை சிகிச்சை பிரிவோ, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவோ, மூளை நரம்பு முடக்குவாத பிரிவோ, அனைத்திலும் புதுமைபுகுத்தி அகில முன்னோடியாய் தமிழகத்தை தலை நிமிர வைத்ததை சொல்லவா, எதைச் சொல்ல...!

4.கஜாபுயலின் கோரதாண்டவத்தில் மக்களின் துயர் போக்கும் தூய பணியில் தூக்கம் மறந்து மக்களோடு மக்களாக சொந்த மண்ணில் மாதக்கணக்கில் ஆற்றிய களப்பணியை சொல்லவா...!

5.நிவாரணப் பணியில் மின் கசிவில் மூர்ச்சையான மின்வாரிய ஊழியரை தோளில் சுமந்து போனஉயிரை மீட்டெடுத்த மாசற்ற மனித நேயத்தை சொல்லவா...!

6.புயலினால் உடமையிழந்து, உணவின்றி தவித்த மக்களுக்கு அவர்களின் துயர் துடைக்க உணவை தானே உருவாக்கிய உண்மையை சொல்லவா...!

7.கஜாவின் போது களைப்பறியா களப்பணியை தன் துயில் மறந்து, தன்னலம் மறந்து, கணப்பொழுதில் செய்த கடமையுணர்வை சொல்லவா...!

8.தடைபட்ட தமிழர் வீர கலாச்சார ஜல்லிகட்டை தடை நீக்கிய தமிழக அரசின் அங்கமான எங்கள் தங்கம், சொந்த மண்ணாம் விராலிமலையில் 1353 காளைகளை களமிறக்கி கின்னஸ் வென்ற வெற்றி வேங்கை, பிரதமரின் பிரியமிகு. மாண்புமிகு மருத்துவர் எங்கள் அண்ணனின் வீர வரிகளை சொல்லவா...!

9.மதிப்புமிகு.சின்னதம்பி  கண்ணம்மாளின் அருந்தவப்புதல்வா,

10.சீர்மிகு செவிலியத்தை செழிப்படைய செய்தீர்.

11.புதிய பல செவிலியர் பணியிடங்கள் தந்தீர்.

12.எண்ணிக்கை கூட்டிய செவிலிய கண்காணிப்பாளர் பதவி உயர்வு தந்தீர்.

13.பலப் பல பதவி உயர்வு கலந்தாய்வு தந்தீர்.

14.150 ஆண்டுகள் பழமையான செவிலிய சீருடையை மாற்றி புதிய அரசாணை தந்தீர்.

15.மகப்பேறு பயின்று வாழ்விழந்த 134 ஆண் செவிலியர்களுக்கு புது வாழ்வு தந்தீர்.

16.அது மட்டுமா, இன்னும் எண்ணற்ற நாங்கள் கோரியவைகளையும், கோராதவைகளையும் தந்தருள அடித்தளமிட்டுள்ளீர்.

17.தாங்கள் எங்களுக்கு  வழங்கியதற்க்கும், வழங்கப் போவதற்க்கும் நன்றி சொல்ல இந்த யுகம் போதாது.

18.இருப்பினும், தாங்கள் செவிலியர் களுக்கு இதுவரை வழங்கி வரும் பேராதரவுக்கும், உதவி களுக்கும் ஒட்டுமொத்த தமிழக அரசு செவிலியமும், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கமும் தங்களை வணங்குகிறது ஐயா. மனமாந்த நன்றிகளை தங்களுக்கும், தமிழக அரசுக்கும் உரித்தாக்குகிறோம் ஐயா.

என்றென்றும் தங்கள் ஆணைக்கிணங்கும்  தமிழக அரசு ஒட்டுமொத்த செவிலியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்.