Wednesday, 23 September 2026

பணி ஓய்வுக்குப்பின் நடவடிக்கை...

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.

பணி நிறைவு என்பது ஒரு சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வருவதுபோலத்தான். பணி நிறைவுக்குப்பின் இருக்கும் ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் உங்கள் கையில். நீங்கள் விரும்பியதை உங்கள் விருப்பம்போல் செய்ய எந்த தடையும் இருக்காது. யாரிடமும் அனுமதி வேண்டி நிற்கவேண்டிய நிலை இருக்காது.

ஆனால் சில நினைக்கலாம். அலுவலகத்தில் பணியாற்றும்போது கிடைக்கின்ற மரியாதை நின்று போய்விடுமே என்று. ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். Out of sight is out of mind என்பார்கள்.

பணி நிறைவு பெற்றபின் நீங்கள் பணி புரிந்த இடத்திற்கு சென்று பாருங்கள். முதலில் சில நாட்கள் உங்களை சிரித்த முகத்தோடு வரவேற்கும் உங்கள் முன்னாள் நண்பர்களுக்கு பின்னர் நீங்கள் வேண்டா விருந்தாளியாகிவிடுவீர்கள். கூடியவரையில் நாம் பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது

எனக்குத் தெரிந்து ஒரு வங்கியில் வட்டார அலுவலகத்தில் பணி புரிந்த இருவர், பணி நிறைவுக்குப் பின் அருகில் இருந்த அவர்கள் பணியாற்றிய வங்கியின் கிளைக்கு வரைவு காசோலை எடுக்க எடுக்க சென்றபோது அதைத் தர வங்கியில் அதிகம் நேரம் எடுத்துக் கொண்டார்களாம்.

விரைவில் தரக்கூடாதா என கேட்டதற்கு, அங்கிருந்த ஊழியர்கள் உடனே வட்டார அலுவலகத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, பணி நிறைவு பெற்ற அலுவலர்கள் கிளைக்கு வந்து பணி செய்யவிடாமல் இடையூறு செய்வதாக புகார் செய்தார்களாம். இத்தனைக்கும் அந்த முன்னாள் அலுவலர்கள், அங்கு இருந்த ஊழியர்களுக்கு மிகவும் தெரிந்தவர்கள்.

அதைப் பார்த்த மனம் வெதும்பிய அந்த முன்னாள் அலுவலர்கள் இனி இந்த கிளைக்கே வரக்கூடாது என எண்ணி திரும்பிவிட்டார்களாம். இது தான் உண்மை நிலை.

பதவி ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், அவர் ஓய்வு பெரும் நாளில் நீதிமன்றத்தில் இருந்த 47 நீதிபதிகளில் 7நீதிபதிகள் மட்டுமே அவரை சந்தித்து வாழ்த்து சொன்னதாக சொல்லியிருந்தார்கள்.

ஒரு நேர்மையான நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமகனுக்கு மட்டும் தனி மரியாதை கிட்டுமா என்ன?

எனவே பணியில் இருப்பதால் மரியாதை கிடைக்கிறது என எண்ணவேண்டாம். வேடிக்கையாக சொல்வார்கள். ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின் செல்ல நாய்க்குட்டி இறந்தபோது அந்த ஊரே திரண்டுவந்ததாம் அஞ்சலி செலுத்த!

ஆனால் அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இறந்தபோது ஒருவர் கூட அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இந்த யதார்த்த நிலையை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பெற்ற மரியாதை உங்களுக்கு அல்ல அது உங்கள் பதவிக்குத்தான் என்பதை.

எனவே பணி நிறைவுக்கு உங்கள் மன நிலையைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அந்த நாள் நெருங்க நெருங்க இயல்பாக இருங்கள். கடைசி நாளன்று உணர்ச்சி வசப்படாதீர்கள்.

பணி நிறைவுக்குப்பின் என்ன செய்யவேண்டும்?

1. உடல் நலமே உண்மையான சொத்து. Health is wealth. என்பதை உணருங்கள். தலை இருந்தால் எத்தனை குல்லாக்கள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்பார்கள்.

இதுவரை புறக்கணித்த உடல் நலத்தை இனி பேணுங்கள்.தினம் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள். சிலர் நடைப்பயிற்சி என்ற பெயரில் நண்பர்களோடு பேசிக்கொண்டே செல்வார்கள். அது தவறு அல்ல. ஆனால் Walking தான் முக்கியமே தவிர Talking அல்ல.

2. நடைப்பயிற்சி செய்யமுடியாதவர்கள் கோயிலுக்கு சென்று பிரகாரத்தை சுற்றி வருவதைக்கூட செய்யலாம்.

3. தோட்டம் உள்ளவர்கள் புதிய பூச்செடிகள் நடுவதிலும், காய்கறிகளை பயிரிடுவதிலும் அவைகளைப் பராமரிப்பதிலும் நேரத்தை செலவிடலாம். பசுமையான செடிகள் வளர்வதையும், வண்ணப் பூக்களையும், நாம் பயிரிட்ட காய்கறிகளையும் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

4.  அளவோடு, நேரத்தோடு சாப்பிடுங்கள். அதுவும் இரவில் 7.30மணிக்கே சாப்பிட்டுவிடுவது நல்லது.

5. குறைந்தது 7 மணி நேரம் உறங்குங்கள்.

6. பல் மருத்துவரிடமும் பொது மருத்துவரிடமும் குறிப்பிட்ட இடைவெளியில் தவறாது சென்று பரிசோதனை செய்துகொள்ளவும். குறிப்பாக கண் பரிசோதனை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் , போன்றவைகளை கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ளவும்.

7. அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்து நேரத்தை வீணாக்காமல் அருகில் உள்ள நல்வாழ்வு மன்றங்களோடு (Welfare Club) இணைத்துக்கொண்டு சமூக சேவைகள் செய்யலாம்.

8.  முடிந்தால் வசதியற்றவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக பாடங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.

9. உறவினர்களையும் நண்பர்களையும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழலாம்.

10. தற்பெருமையையும் ஆணவத்தையும் (Ego) விட்டோழியுங்கள்.

11.  நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

12. யாருக்கும் தேவையில்லாமல் ஆலோசனையைவழங்காதீர்கள். ஏனெனில் கோரப்படாத ஆலோசனையை (Unsolicited advice) யாரும் விரும்புவதில்லை.

13. பண விஷயத்தில் முனைப்போடு இருங்கள். பணத்தை கண்டபடி செலவு செய்துவிட்டு பின் திண்டாடாதீர்கள்.

’கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்

எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை

இல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்

செல்லா(து) அவன்வாயிற் சொல்.’

என்ற ஔவைப் பாட்டியின் மூதுரையை நினைவில் கொள்ளுங்கள்.

பணி நிறைவில் கிடைக்கும் பணத்தை வங்கிகள் அல்லது அஞ்சலக மாத வருவாய் வரும் திட்டங்களில் முதலீடு செய்து நிம்மதியாய் வாழுங்கள். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் அதிக வட்டி வட்டி தருவதாக சொல்லும் தனியார் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். அதுபோல பங்கு வணிகத்தில் தீவிரமாக இறங்கி சேமித்த பணத்தை இழக்காதீர்கள்.

பாசம் கண்ணை மறைக்க, கையில் உள்ள பணத்தை பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு கண்ணீரோடு அல்லல் படவேண்டாம். நம் பிள்ளைகள் தான். அவர்களுக்கு கொடுக்காமல் யாருக்குக் கொடுக்கப்போகிறோம். ஆனால் அவைகளை நம் காலத்திற்குப் பிறகு கிடைக்க வழி செய்வோம்.

‘பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளே சொந்தமில்லே’, ‘பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா’ என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.

ஏனெனில் தங்களுடைய பணிக்கால கொடைகளை பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு பின்னால் கஷ்டப்பட்டவர்கள் பலர் உண்டு.

14. முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை தடுக்க அறிவாற்றல் சார்ந்த செயல்களான (Intellectual activities), புத்தகங்கள் படிப்பது குறுக்கெழுத்து புதிர்களில் கலந்துகொள்வது, இசைக்கருவிகளை இசைப்பது, தவறாமல் சமூகத்தொடர்பு (Social connections) கொண்டிருப்பது போன்றவைகளை செய்யலாம்.

ஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது கூட மனதை சுறுசுறுப்பாக (Mentally active) வைத்துக் கொள்ள உதவும்.

15. ‘பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போது, மூளையில் உள்ள திசுக்கள் சுறுசுறுப்பூட்டப்படுவதால் (Activate) அவைகள் அழிவது தடுக்கப்படுகிறது என்பதும், அதனால்முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது என்றும் அறிவியலார்கள் சொல்கிறார்கள்.

எனவே தினம் படுக்கப் போகுமுன் அன்று நடந்த நிகழ்வுகளை ஒரு முறை மனதில் நினைத்துப் பாருங்கள். இதுவும் ஒருவகையில் மனதில் நாட்குறிப்பு (Diary} எழுதுவது போலத்தான்.

16. கடைசியாக பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் சொன்னதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

Dead yesterday and unborn tomorrow

Why fear about them if today be sweet

எனவே வாழ்க்கையை துய்த்து மகிழுங்கள்!

Monday, 14 September 2026

TGNA.HISTORY

*தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்*

*Tamil Nadu Government Nurses’ Association – Government Recognised*

*வரலாற்றுக் குறிப்பு – 1920–2026*

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, அன்றைய *Madras Presidency* காலத்தில் அரசு செவிலியர்களின் நலன், பணிச்சூழல் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட ஒரு பழமையான செவிலியர் அமைப்பாகும்.

சங்கம் ஆரம்பகாலத்தில் *“Madras Government Nurses Association”* என்ற பெயரில் செயல்பட்டது.

பதிவு விவரம்

- பதிவு செய்யப்பட்ட ஆண்டு: *1920–21*
- *Registration No.: 5 / 1920–21*
- பதிவு செய்யப்பட்ட அமைப்பு: *Madras Presidency*
- இது சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலேயே பதிவு செய்யப்பட்ட அரசு செவிலியர் சங்கமாகும்.

அரசு அங்கீகாரம்

தமிழ்நாடு அரசு இந்தச் சங்கத்திற்கு *G.O. No. 716, P&AR Department, dated 12.12.1961* மூலம் அரசு அங்கீகாரம் வழங்கியதாக சங்கத்தின் வரலாற்றுத் தகவல்களிலும், நீதிமன்ற ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது

பின்னர் சங்கத்தின் பெயர் *“Tamil Nadu Nurses Government Association”* என மாற்றப்பட்டு, தற்போது *“Tamil Nadu Government Nurses’ Association – Government Recognised”* என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

*சங்கத்தின் முக்கிய நோக்கம்*

அரசு செவிலியர்களின்:

- பணிநிலை மற்றும் பணிச்சூழல் மேம்பாடு
- சேவை உரிமைகள் மற்றும் நலன்கள்
- ஊதியம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கோரிக்கைகள்
- பணிச்சுமை மற்றும் பணியிடப் பிரச்சினைகள்
- செவிலியர் தொழிலின் கண்ணியம் மற்றும் அங்கீகாரம்

ஆகியவற்றிற்காக தொடர்ந்து குரல் கொடுப்பதே சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

1920–21 முதல் 2026 வரை – ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்துடன், தமிழ்நாடு அரசு செவிலியர்களின் உரிமை மற்றும் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் அமைப்பாக தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் திகழ்கிறது.

Monday, 6 April 2026

உடல் ரகசியம்

யாரும் சொல்லாத உடல் ரகசியங்கள் — இதை தெரிஞ்சுக்கிட்டா வாழ்க்கையே மாறும்! 🧬⚡

நண்பர்களே,

டாக்டர் கிட்ட போவோம். மாத்திரை வாங்குவோம். சாப்பிடுவோம். மறுபடியும் அதே பிரச்சனை வருகிறது.

ஏன் தெரியுமா?

நாம் அறிகுறியை சரிசெய்கிறோம். காரணத்தை சரிசெய்வதில்லை! 😔

இதோ சில அதிர்ச்சியான உண்மைகளும் எளிய தீர்வுகளும் 👇

😮‍💨 மூச்சு விட சிரமப்படுகிறாயா (Breathlessness)?
➡️ மூக்கால் மட்டும் மூச்சு விடு! (Nose breathing only)

பெரும்பாலான மனிதர்கள் வாயால் மூச்சு விடுகிறார்கள். இது தவறு! மூக்கால் மூச்சு விடும்போது காற்று வடிகட்டப்படுகிறது, சூடாக்கப்படுகிறது, Nitric Oxide சுரக்கிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். நுரையீரல் வலுவடையும். தினமும் மூக்கால் மட்டும் மூச்சு விடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்!

🫃 வயிறு எப்போதும் பெரிதாக இருக்கிறதா (Belly fat)?
➡️ சாப்பிடும் நேரத்தை சரிசெய்! (Fix your eating window)

எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட எப்போது சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். காலை 8 மணிக்கு சாப்பிட தொடங்கி இரவு 8 மணிக்குள் முடி. இரவு தாமதமாக சாப்பிடுவதை நிறுத்து. இந்த ஒரு மாற்றமே வயிறு சுற்றளவை குறைக்கும்!

🧠 மூளை மழுங்கலாக இருக்கிறதா (Brain fog)?
➡️ குளிர்ந்த நீரில் குளி! (Cold shower)

வெதுவெதுப்பான நீரில் குளித்து முடிக்கும்போது 30 நொடி குளிர்ந்த நீரை விடு. இது Norepinephrine என்ற ஹார்மோனை 300% வரை அதிகரிக்கும். மூளை திடீரென விழிப்படையும். கவனிக்கும் திறன் கூடும். ஒரு கோப்பை காபியை விட இது நூறு மடங்கு சக்திவாய்ந்தது!

💔 இதயம் வேகமாக துடிக்கிறதா (Heart racing)?
➡️ இடது பக்கமாக படு! (Sleep on left side)

இரவில் இடது பக்கமாக படுத்து தூங்கு. இது இதயத்திற்கான அழுத்தத்தை குறைக்கும். செரிமானம் சீராகும். Acid reflux குறையும். நம் ஆயுர்வேதமும் இந்த வாமக்குக்சி தூக்கத்தை பல நூறு ஆண்டுகளாக பரிந்துரைக்கிறது!

🦷 பல் சொத்தையும் ஈறு பிரச்சனையும் வருகிறதா (Dental issues)?
➡️ எண்ணெய் கொப்பளி! (Oil pulling)

காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடு. 10 முதல் 15 நிமிடம் வாயில் சுழற்று. துப்பு. வாயில் உள்ள கிருமிகள் அழியும். ஈறு வலுவடையும். பல் வலி குறையும். இது நம் சித்தர்கள் காலத்திலிருந்து வரும் அற்புத மருத்துவம்!

👃 மூக்கு அடைப்பாக இருக்கிறதா (Blocked nose)?
➡️ மூச்சை நிறுத்தி தலையை அசை! (Breath hold + head nod)

மூச்சை உள்ளே இழுத்து பிடி. தலையை மேலும் கீழும் மெதுவாக அசை. மூச்சு தாங்காத வரை பிடி. விடு. மூக்கு 10 நொடியில் திறக்கும். இது மூக்கில் Nitric Oxide அளவை அதிகரிக்கும். எந்த மருந்தும் வேண்டாம்!

😓 அதிகமாக வியர்க்கிறதா (Excessive sweating)?
➡️ மெக்னீசியம் நிறைந்த உணவு சாப்பிடு! (Eat magnesium-rich food)

உடலில் மெக்னீசியம் குறைந்தால் நரம்பு மண்டலம் அதிக உணர்திறன் அடையும். அதிக வியர்வை, கால் பிடிப்பு, தூக்கமின்மை எல்லாம் வரும். பாதாம், வால்நட், இலை கீரைகள், வாழைப்பழம் — இவை தினமும் சாப்பிடு!

🌟 இன்றைய மிக முக்கியமான செய்தி:

உன் உடல் உனக்கு எதிரி அல்ல.
உன் உடல் உன் மிகப்பெரிய நண்பன்.

அது தினமும் உனக்காக போரிடுகிறது.
அது தினமும் உன்னை காக்கிறது.
அது தினமும் உன்னிடம் உதவி கேட்கிறது.

கொஞ்சம் கவனி. கொஞ்சம் கேள். கொஞ்சம் அன்பு செலுத்து. 🙏💛

📋 சுருக்கமாக நினைவில் வைத்துக்கொள்:

😮‍💨 மூச்சு சிரமம் → 👃 மூக்கால் மட்டும் மூச்சு விடு
🫃 வயிறு கொழுப்பு → ⏰ சாப்பிடும் நேரம் சரிசெய்
🧠 மூளை மழுங்கல் → 🚿 குளிர்ந்த நீர் குளியல்
💔 இதயம் வேகம் → 🛏️ இடது பக்கம் படு
🦷 பல் பிரச்சனை → 🥥 எண்ணெய் கொப்பளி
👃 மூக்கு அடைப்பு → 🌬️ மூச்சு நிறுத்தி தலை அசை
😓 அதிக வியர்வை → 🥜 மெக்னீசியம் உணவு

💬 இதில் உங்களுக்கு எந்த பிரச்சனை அதிகமாக வருகிறது? இந்த வழிகளை முயற்சி செய்வீர்களா? கமெண்டில் சொல்லுங்கள்! 👇

உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்றால் — Share செய்யுங்கள்! ❤️🙏

#உடல்_ரகசியங்கள் #இயற்கை_மருத்துவம் #உடல்நலம் #மனநலம் #ஆரோக்கியம் #தினசரி_ஊக்கம் #தமிழ் #Tamil #HealthTips #NaturalRemedies #Wellness #SelfCare #சித்த_மருத்துவம் #வாழ்க்கை_பாடம் #மருந்தில்லா_மருத்துவம்

Thursday, 2 April 2026

சுப ஹோரை.

உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் ஹோரை நேரம் எது தெரியுமா?

நற்காரியங்கள், புதிய முயற்சிகளைத் தொடங்குதல், மங்கல நிகழ்வுகள் போன்றவற்றைச் சுபகிரக ஹோரைகளில் ஆரம்பித்தால், நிச்சயம் நமக்குக் காரிய ஸித்தி ஏற்படும். அதேநேரம், அன்றாட வழக்கமான பணிகளுக்கும் ஹோரை வேளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை எனும் நேரம் பார்க்கப்படுகிறது. கிரகங்கள் நாள்தோறும் இரண்டரை நாழிகை அதாவது ஒரு மணி நேரம் ஒவ்வொரு ராசியிலும் தங்கி வலம் வரும். இதை அடிப்படையாகக் கொண்டு ஹோரை நேரம் கணிக்கப்படுகிறது. காலையில் சூரியன் உதயமாகும்போது அன்றைய தினத்தின் கிழமையே முதல் ஹோரையாகத் தொடங்கும்.

உதாரணத்துக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை எனில், அன்று காலை மணி 6 முதல் 7 வரை (சூரிய உதயம் காலை 6 மணி என்கிறபடிக்கு) சூரிய ஹோரை ஆகும். சூரிய ஹோரை முடிந்து... சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என முடிந்து மீண்டும் சூரியனில் இருந்து துவங்கும். திங்கட்கிழமை எனில் காலை 6 முதல் 7 மணி வரை சந்திர ஹோரை எனத் தொடங்கும்.

இந்த ஹோரைகள் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியவை சுப ஹோரைகள். சூரியன், செவ்வாய், சனி ஆகியவை அசுப ஹோரைகள்.

ஒவ்வொரு ராசிக்கும் ஏற்றம் தரும் ஹோரை வேளை குறித்தும் ஜோதிட வழிகாட்டல்கள் உண்டு. அதுபற்றிய பொதுவான நியதிகளைத் தெரிந்துகொள்வோமா?

மேஷம்: இந்த ராசிக்காரர்கள் சூரியன், சந்திரன் ஆகிய ஹோரை களில் சுபகாரியங்களைச் செய்யலாம். இவற்றுக்கு அடுத்தபடியாக குரு மற்றும் சுக்ர ஹோரைகள் அதிர்ஷ்டம் தருவதாக அமையும். இவர்கள் முறையே ஞாயிறு, திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், அந்த நாளுக்கு உரிய ஹோரை வேளையில் புதிய முயற்சிகளைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

ரிஷபம்: இந்த ராசிக்கு சுக்ர ஹோரையும், குரு ஹோரையும், செவ்வாய் ஹோரையும் உகந்தவை. செவ்வாய், வெள்ளி, வியாழன், ஆகிய நாள்கள் சுபநாள்களாக அமைந்திருக்க, குறிப்பிட்ட ஹோரையில் சுபகாரியங்களைத் தொடங்கலாம். குறிப்பிட்ட ஹோரைகளில் இவர்கள் புதுத் தொழில் தொடங்குவது, புதுக் கிளைகள் ஆரம்பிப்பது, மற்றும் உத்தியோகம் தொடர்பான முன் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

மிதுனம்: இந்த ராசி அன்பர்களுக்குப் பொதுவாக புதன், சனி, சுக்ர ஹோரைகள் சிறப்பைத் தருபவை ஆகும். இந்த ஹோரை வேளைகளில், மங்கல காரியங்கள், வேலை சார்ந்து புதிய முயற்சிகள், புதிய முதலீடு போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கடகம்: இந்த ராசிக்குப் பொதுவாக சந்திரன், சந்திரன், குரு சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். இந்த ஹோரைகளில் பணப் பரிமாற்றம், வாகனம், ஆபரணங்கள் வாங்குவது, தொழில் தொடங்குவது, பணியில் சேர்வது போன்ற வற்றை மேற்கொண்டால் சுபிட்சம் பெருகும்.

சிம்மம்: இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் ஹோரைகள் சூரியன், சந்திரன் மற்றும் குரு ஹோரைகள். இந்த வேளைகளில் இவர்கள், குலதெய்வத்தை வணங்கி சுப காரியங்களைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

கன்னி: இந்த ராசிக்குப் புதன், சுக்கிரன், சூரிய ஹோரைகள் நலன் தரும். இவை தவிர, சந்திர ஹோரையையும் பயன்படுத்தலாம். இந்த வேளைகளில் விநாயகர் மற்றும் மகாலட்சுமியை வணங்கி விட்டு, புதிய விஷயங்களில் ஈடுபடலாம்.

துலாம்: இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தரும் ஹோரைகள் செவ்வாய், சனி, குரு ஹோரைகள் ஆகும். செவ்வாய் மற்றும் சனி ஹோரையில் தளவாட உற்பத்தி, தொழிற்சாலை தொடங்குதலைச் செய்யலாம். குரு ஓரையில் ஆபரணங்கள் வாங்கலாம். மற்றபடி குரு ஹோரையில் புதுத் தொழில் தொடங்குதல், பத்திரப் பதிவு செய்தல் போன்ற முக்கியமான காரியங்களையும் செய்யலாம்.

விருச்சிகம்: இவர்களுக்குச் செவ்வாய், சனி, சுக்கிர ஹோரைகள் அதிர்ஷ்டம் தரும். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் சுக்ர ஹோரை வேளையில் மகாலட்சுமியை மனதார வணங்கிவிட்டு, புதிய முயற்சிகளில் இறங்கலாம். வீடு-மனை, வாகனம் வாங்குதல் நகை வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால் சுபிட்சம் பன் மடங்கு அதிகரிக்கும்.

தனுசு: குரு, சுக்கிரன், சூரிய ஹோரைகள் சிறப்பு சேர்க்கும். குறிப்பாக குரு ஹோரையில் பண பரிவர்த்தனை, புதிய ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளைச் செய்வது சிறப்பு. சுக்ர ஹோரையில் சுபமங்கல காரியங்களை மேற்கொள்ளலாம்.

மகரம்: இந்த ராசியினருக்கு இவர்கள் பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர ஓரைக் காலத்தில் சுபகாரியங்களைத் தொழில் நிமித்தமான பணிகளில் ஈடுபட்டால், நல்ல விளைவுகள் உண்டு. குறிப்பாக திருவோண நட்சத்திரக் காரர்களுக்குச் சந்திர ஓரையும் அவிட்டம் அன்பர்களுக்குச் சனி ஓரையும் விசேஷ பலன்களைத் தரும்.

கும்பம்: இவர்களுக்குப் புதன், சனி, குரு ஹோரைகள் சிறப்பு. வளர்பிறை காலங்களில் சந்திர ஹோரையும் நன்மை அளிக்கும். இந்த ஹோரை வேளைகளில் புதிய ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல், வேலைக்கான விண்ணப்பம் போடுவது முதலானவற்றை மேற்கொள்ளலாம். வீடு-மனை வாங்குவது விற்பது, தொழில் தொடர்பான முன்னேற்பாடுகளையும் செய்யலாம்.

மீனம்: சந்திரன், புதன் மற்றும் சுக்ர ஹோரை சிறப்புச் சேர்க்கும். இந்த ஹோரைகளில் புதுத் தொழில் தொடங்குவதற்கான அரசு அனுமதி கோருதல், வேலை மற்றும் படிப்புக்கான விண்ணப்பம் அளித்தல், முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தல் போன்ற அதிமுக்கிய விஷயங்களை மேற்காணும் ஓரைகளில் செய்வது சிறப்பு.

SAKTHI VIKATAN

Saturday, 21 February 2026

கவிதை- பால் கனகராஜ் சாருக்கு...

ஏழ்மையின் எளிய குடிலில் பிறந்த இளம் விடியல்,

ஊரின் மண்ணில் வளர்ந்தது ஓர் உறுதியான விழியல்.

அரசுப் பள்ளி வாசலில் கனவுகள் விதைத்தாா்,

அவமானம் கல்லாய் விழுந்தாலும் எழுந்து நின்றாா்.

வறுமை காற்றில் துடித்தாலும் மனம் தளரவில்லை,

வழியின்றி நின்ற போதும் நம்பிக்கை வாடவில்லை.

சட்டத்தின் செம்மைப் பாதை நோக்கி பயணம் செய்தாா்,

சிறிய நீதிமன்றத்தில்கூட முதல் உயர்நீதியில் நிலைநின்றாா்.

Madras High Court மண்டபத்தில் ஜூனியராக தன்னை செம்மையாக்கி,

அறிவால் ஆயுதம் பூண்டு நீதியின் விளக்கேற்றினாா்.

பின்னர் வழக்கறிஞர் உலகில் முன்னணியில் உயர்ந்து,
தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைமை ஏந்தினாா்.

Bar Council of Tamil Nadu and Puducherry மேடையில் மரியாதை பெற்றாா்.

சட்டத்தின் சீர்மையை காக்கும் சின்னமாக மாறினாா்.

இன்று Bharatiya Janata Party மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராக உயா்ந்து
மக்கள் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஜொலிக்கின்றார்.

தர்மம் செய்பவர், தாழ்மையால் உயர்ந்தவர்,
தன்னை சார்ந்தோர் நெஞ்சில் நித்தம் நிலைத்தவர்.

திரு. பால் கனகராஜ் ஐயா அவர்களே —
உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறோம் நாங்கள்.

உங்கள் வாழ்வு எங்கள் ஊக்கமாம்,

உங்கள் உயர்வு எங்கள் நம்பிக்கையாம்.

என்றும் உங்களால் வழி பெற்றோா் சங்கம்.

கவிதை- மணி அண்ணனுக்கு வாழ்த்துரை

மனமார்ந்த வாழ்த்துக்கள் 
மணி அண்ணா…!
எங்கள் மணிவண்ணா…!
எங்கள் அணி மன்னா…!

உன் முயற்சி மலைகளையும் மடக்கிடும் வல்லமை அண்ணா...!

உன் வழிகாட்டுதல் எங்களுக்கு ஒளிவிளக்காய் நிலைநிற்கும் நிலமை அண்ணா...!

வெற்றி உன் நடைபாதையில் மலா்ப்போா்வையாய் விரிகிறது அண்ணா...!

புலமை உன் சொற்களில் தீபமாக ஜொலிக்கிறது அண்ணா...!

நாம் நம்பும் நாவலா் நீயே அண்ணா,
உன் சாதனைச் சிகரம் மேலும் மேலும் உயரட்டும் அண்ணா...!

உன் பெயர் புகழின் பறவையாக எங்கும் பறக்கட்டும் அண்ணா...!
💐💐💐

அன்புடன்...
சங்க கவிஞா். க.இளங்கோவன்.

Thursday, 12 February 2026

முதுமை ஓர் வரம் கவிதை

*முதுமை ஓர் வரம்*

வாழ்க்கையின் வெள்ளி வெளிச்சம் அது!

அனுபவம் சேர்த்த பொக்கிஷம் அது!

ஆண்டுகள் தந்த பரிசும் அது!

சிரிப்பிலும், சோகத்திலும் செதுக்கப்பட்ட ஞானம் அது!

சிறு கதைகளில் நிறைந்திருக்கும் பெரிய பாடம் அது!

நரை முடியில் நம்பிக்கையின் நீள நிழல் அது!

நடந்த பாதையில் நினைவுகள் பூத்த மலர் அது!

பிள்ளைகளின் சிரிப்பில் புதுப் பிறவி காணும்,
பெருமிதம் தரும் பாசத்தின் பெரு நீரோடை அது!

உயிர் கற்றுக் கொடுத்த அமைதியின் அர்த்தம் அது!

முதுமை என்றுமே மனிதனுக்கு மகத்தான வரமே என்பது இந்த முதியவனின் கருத்தும் அதுவே....!!!

Tuesday, 28 January 2025

சர்க்கரை வியாதி புண்ணுக்கு ஆவாரம்பூ மருத்துவம்

சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான்😡

அவர்களுக்காக ஒரு பதிவு! 

விரலை வெட்ட வேண்டாம்:👌

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு 
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும், 

காலில் இருந்தால் 
காலை துண்டித்து விடுவதும், 

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது, 

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள், 

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨

இதற்கு கண்கண்ட மருந்து👀

ஆவாரம்_இலை 🌿🌿🌿🌿🌿🌿🌿

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின் 
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.! 
படித்தேன்...பகிர்ந்தேன்..🧡

Friday, 24 January 2025

நில அளவு FMB

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
 குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை 
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 
FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

 சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள் 
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

•             10 கோண் = 1 நுண்ணணு

•             10 நுண்ணணு = 1 அணு

•             8 அணு = 1 கதிர்த்துகள்

•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு

•             8 துசும்பு = 1 மயிர்நுனி

•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்

•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு

•             8 சிறு கடுகு = 1 எள்

•             8 எள் = 1 நெல்

•             8 நெல் = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம்

•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

•             4 காதம் = 1 யோசனை

•             வழியளவை

•             8 தோரை(நெல்) = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

•             2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்

•             4 குரோசம் = 1 யோசனை

•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை 

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை 

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர் 

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 

435 . 6 சதுர அடி          - 1 சென்ட் 

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட் 

100 சென்ட்                     - 1  ஏக்கர் 

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி
எனக்கு பகிர்ந்தவர்க்கு நன்றி

Tuesday, 21 January 2025

சாந்த சொரூபி - கவிதை

*********************
சாந்த சொரூபி,
*********************
இளமைக்கால நினைவினிலே,
இனியதோர் நிஜம் நிழலாடுகிறது.
நுண்ணிய அறிவும்,
முதிர்ந்த மனதும்,
சாந்த குணமும்,
தெய்வீக முகமும்,
சந்தன கலரும்,
சந்தேகமில்லா அன்பும் 
கலந்த கலவை
என் சாந்தியடி நீ...!

காலங்கள் கடந்தும்
கசக்காத நம் அன்பு,
காலங்கள் கடந்தும் வண்ணக் கோலங்களாய்
நம் நினைவுகள்.
83 லே  ஒரு கூட்டு பறவைகளாய்  எண் திசையினின்றும் கூடினாலும்,
கூட்டப்பறவைகளில் கூடப்பிறந்த  பறவை நீயடி...!

அகவைகள் பல கடந்தும், வாழ்க்கை எனும்
ஓடம் திசை மாற்றினாலும்
அள்ளக்குறையா அமிர்தம்  நிறைந்த அன்பு குடமடி நீ...!

தனக்கென்று ஒரு கூடு,
அதில் ஓர் குடும்பம்,
அருமையான வாழ்க்கைத்துணை,
அழகிய குழந்தைகள்,
அன்புடனே வளர்த்து
ஆராதித்து, ஆலமரமாய்
வளர்ந்து நிற்கும் 
ஆல மரமடி நீ...!

தன்னலம் பாராது
தயை கொண்ட
மனதினாலே
சுனக்கமின்றி இன்றளவும் துளி கூட பிரியா மனம்கொண்ட
தங்க குடமடி நீ...!

உன் பணி முதிர்வு உன் பணிக்கு மட்டுமே.
நம் நட்பு என்றும் இவ்வாழ்க்கை மட்டுமன்றி
ஏழேழு தலைமுறைக்கும் தொடரும்
தலைமுறையடி நீ...!

இனி உள்ளத்தையும் உடலையும் உன்னிப்பாய் கவனி.
உடனுக்குடன் உறவுகளையும் கவனி.
சாியான உறக்கத்தையும், உடற்பயிற்சியையும் உன் தின வாழ்க்கை பட்டியலாக்கு.
உன் மீத வாழ்க்கையும் மற்றவர்களுக்கு பொக்கிஷமாக எல்லாம் வல்ல ஈசனை வணங்கி வாழ்த்துகிறேன் தாயே...!


அன்புடன்...
உன் அன்புத்தோழி,
K.வளா்மதி,
தேதி: 22/01/2025

Thursday, 16 January 2025

பன்னீா் மரத்தின் நன்மைகள்

வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

பன்னீர் மரங்கள், உயரமாக வளரும் இந்த மரங்கள், பரந்து விரிந்த கிளைகளுடன், கரும் பச்சை நிறத்தில் சற்றே அகன்ற இலைகளுடன், உருவத்தில் நாதஸ்வரத்தை ஒத்த, நீண்ட நறுமணமுடைய வெள்ளை நிறத்தில் எழிலுடன் விளங்கும் மலர்களுடன், காட்சியளிக்கும்.

தமிழகத்தில் காண்பதற்கு மிக அரிதாகி விட்ட பன்னீர் மரங்கள், இலை, பூக்கள், மற்றும் மரம், வேர் இவற்றின் மூலம், மனிதர்க்கு பலன்கள் தருபவை. பன்னீர் மரத்தை அதன் தோற்றத்தைக் கொண்டு அடையாளம் காண முடியாத மனிதர்கள் கூட, பன்னீர் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலத்தில், அவ்விடங்களில் பரவும், அவற்றின் வசீகர நறுமணத்தின் மூலம், வெகு எளிதாக, அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
வெள்ளை நிறத்தில், அளவில் சற்றே நீண்ட மலர்கள், தரும் வாசனை, மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் அளிக்கும். பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர் மறை எண்ணங்கள் விலகி, மனதில் தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும். பன்னீர் மலர்கள் உடலுக்கும் மனதுக்கும் சக்தியை அளிக்கும்.
Reasons why we need to grow Indian cork tree and it's medicinal benefits 
Image source
பொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில் இருந்தாலே, பெண்களுக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் நீங்கி விடும், என்கின்றன சாத்திரங்கள்.
மேலும், மலர்கள் பூக்கும் காலங்களில், மரத்தினடியில் பூ மெத்தை போல பரவி, அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும், பன்னீர் மலர்கள், இயற்கையின் அருட் கொடை என்றே, சொல்லலாம்.
தற்காலம் கட்டப்படும் வீடுகளின் முன்புறம், வாஸ்து என்ற காரணத்துக்காக, வீடுகளுக்கு சுபிட்சம் தருபவையாக, பன்னீர் மரங்கள் நட்டு வளர்க்கப் படுகின்றன. அதைப்போல சிலர், இந்த மரங்கள் விபத்தை தடுக்கும் தன்மை உடையவை என்று கூறியும், வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.
தெருக்களில், சாலையோரங்களில், நெடுஞ்சாலைகளில் இந்த மரத்தை பரவலாக வளர்க்க, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
பன்னீர் மலர்கள், மனிதர்களின் மனதை அமைதிப் படுத்தும் தன்மை மிக்கதால், அரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்திலும், வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பயன் படுகின்றன. சித்த மருத்துவத்தில் பன்னீர் மலர்கள், பித்த மருந்துகளில் இணை மருந்தாக, சேர்க்கப் படுகின்றன.

பித்தம் தணியும் :
பன்னீர் மலர்களை காய்ச்சி பருகி வர, உடல் நல பாதிப்பால், வாந்தி எடுப்பது நிற்கும். பன்னீர் மலர்களைக் கொண்டு, காய்ச்சும் நீரை பருகி வரும்போது, உடல் சூடு நீங்கி, தொண்டை வரட்சியைப் போக்கி, உடலின் பித்த பாதிப்புகளை சரி செய்து, நாவின் சுவையின்மையை நீக்கி, உணவுகளின் சுவை அறிய, வைக்கும்.
இரவில் மலரும் இயல்புடைய பன்னீர் மலர்களை நாடி, பறவைகளும், வண்டுகளும், தேனீக்களும், இரவில் இந்த மரத்தைச் சுற்றி வந்து, பன்னீர் மலர்களின் தேனை உண்ணுமாம்.

சுவாச பாதிப்புகள் நீங்கும் :
காய்ந்த பன்னீர் மலர்களை சிலர், சாம்பிராணி புகையில், இட்டு அந்த வாசனை மூலம், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர்.
பன்னீர் மரத்தின் கிளைகள் கொண்ட மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால், மருந்துகள் சேமிக்கப்படும் புட்டிகளில், காற்றை புக விடாமல் தடுத்து காக்க, புட்டிகளின் வாய்ப் பகுதியில் வைக்கப்படும் கார்க் எனும் தக்கை தயாரிக்க பயனாகிறது.

வயிற்றுப் போக்கு குணமாகும் :
பன்னீர் மரப் பட்டைகளை நீரிலிட்டு, மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் சுண்டியதும் பருகி வர, பேதி எனும் வயிற்றுக் கழிச்சல் பாதிப்பு குணமாகும்.

பன்னீர் மரத்தின் வேர்கள், உடல் நச்சை போக்கும் தன்மை மிக்கது, ஜுரத்தை போக்கி, மனிதர்களின் நுரையீரலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் மிக்கதாக, பன்னீர் மரத்தின் வேரை, நீரிலிட்டு காய்ச்சி பருகும் குடி நீர், விளங்குகிறது.
கும்பகோணம், திருவையாறு, சீர்காழி போன்ற ஆன்மீக இடங்களின் அருகே உள்ள பல கோவில்களில் தல மரமாக, பன்னீர் மரங்கள் திகழ்கின்றன.

பிரசாதம் :
அனைத்திலும் சிறப்பாக, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வழங்கப்படும் பன்னீர் இலை திருநீற்றுப் பிரசாதம், பக்தர்களிடையே, மிகுந்த பிரசித்தம், பக்தர்களின் மனக் குறைகள் மட்டுமல்லாமல், அவர்களின் உடல் குறைகளும் அந்த பன்னீர் இலை திருநீரை உட் கொள்ள நீங்கும், என்ற நம்பிக்கை முருக பக்தர்களுக்கு உண்டு.
அத்வைத தத்துவ போதனைகளை உலகுக்கு முதலில் அளித்து, மனிதர்களை நல்வழிப்படுத்திய ஆதி சங்கரர், ஒரு சமயம், இவரின் சமூக சீர்திருத்த கருத்துக்கு எதிர்ப்பாளர்களின் சதிகளின் பாதிப்பால், உடல் வியாதி உண்டாகி அதைப் போக்க, திருச்செந்தூர் முருகன் கோவிலில், திருமுருகனின் அதிகாலை விஸ்வரூப தரிசனம் காணப் பெற்று, பன்னீர் இலையில் வைத்து தரப்பட்ட திருநீற்று பிரசாதத்தின் மூலம், ஆதி சங்கரரின் உடல் பாதிப்புகள் நீங்கி, நலம் பெற்றார் என்பர்.
இன்றும் திருச்செந்தூர் முருகனின் அதி காலை விஸ்வரூப தரிசனத்தை, பெற வரும் பக்தர்களுக்கு எல்லாம், பன்னீர் இலை திருநீற்று பிரசாதமே, வழங்கப்பட்டு வருகிறது. முருகனுக்கு உகந்த மரமாக, பன்னீர் மரமும், பூஜிக்க ஏற்ற மலராகவும் பன்னீர் மலர்களும் விளங்குகின்றன.
இந்த பன்னீர் இலை திருநீற்றுப் பிரசாதத்தை, பக்தர்கள் வீடுகளில் வைத்துக் கொண்டு, வியாதிகள், மனத் துன்பங்கள் நேரும் சமயங்களில், முருகனை வேண்டி, நெற்றியில் இட்டுக் கொள்வர்.
தொன்மையான தருமை ஆதீனம் போன்ற சைவத் திரு மடங்களிலும், சன்னிதானங்கள் எனும் ஆதீனகர்த்தர்கள் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும் போது, திருநீற்றுப் பிரசாதங்களை,. பன்னீர் இலைகளிலேயே வைத்து வழங்குகின்றனர்.

கட்டி வீக்கம் :
பன்னீர் இலை காண்பதற்கு, முருகனின் வேல் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும், பன்னீர் இலை மருத்துவ வகையிலும், உடலுக்கு நன்மைகள் அளிக்கக்கூடியது. உடல் வியாதிகள் தீர, பன்னீர் இலையில் வைத்து தரப்பட்ட திருநீற்றை உட்கொண்டு, பன்னீர் இலைகளையும் உட்கொள்வர். ஆன்மீகத்தில் சிறந்த இலையாக விளங்கும் பன்னீர் இலைகள், சித்த மருத்துவத்தில், உடலில் உள்ள வீக்கங்களை போக்கக் கூடியவையாக, அறியப்படுகின்றன. வீக்கங்களின் மேல் பன்னீர் இலைகளை வைத்து கட்டி வர, வீக்கங்கள் அகலும்.
அம்பாளை விஷேசமாக துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி எனும் மூன்றுவிதமான திருக்கோலங்களில் வழிபடும் நவ ராத்திரி விழாநாட்களின் எட்டாவது நாளில், கல்வி கேள்விகளுக்கு அருள் பாலிக்கும் சரஸ்வதி தேவியை, தாமரைப்பூ கோலமிட்டு, ரோஜாப்பூ மற்றும் பன்னீர் இலைகளைக்கொண்ட மாலையைச் சூட்டி, இனிப்பு பாயசம் படைத்து வணங்க வேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

பன்னீர் திரவியம் எதிலிருந்து கிடைக்கிறது?
கடைகளில் கிடைக்கும் பன்னீர் எனும் வாசனை திரவியம், நறுமணத்திற்காக சந்தனத்தோடு கலந்து பயன்படுத்தப்படுகிறது.
கோவில்களில், சமய சடங்குகளில், அபிசேகங்களுக்கு பயன்படுகிறது. அந்த பன்னீர், இந்த பன்னீர் மரத்திலிருந்தோ அல்லது பன்னீர் பூக்களிலிருந்தோ எடுக்கப்படுவதில்லை, மாறாக, அவை ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கப்படுபவை ஆகும்.

Wednesday, 15 January 2025

மகா கும்பமேளா 2025

உலகமே கொண்டாடும்...
*மஹா கும்பமேளா!* 🙏 

இதன் தனிச்சிறப்புகள் என்னென்ன?

*அமிர்தத்தை* பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது... 

பல்வேறு தெய்வீக தன்மை கொண்ட பொருட்களை தொடர்ந்து அமிர்தம் கிடைத்தது. 

அது அசுரர்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதற்காக... 
மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அமிர்த கலசத்தை ( *கும்பம்* ) எடுத்துச் சென்றார். 

அப்போது அமிர்தத்தின் சில துளிகள் பூமியில் சிந்தின! 

அவைகள்... 

1. *'பிரயாக்ராஜ்'* என்றழைக்கப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும்... 
 *'திரிவேணி சங்கமம்!*

2. *உஜ்ஜயினி* 

3. *ஹரித்துவார்*

4. *நாசிக்*

இதன் நினைவாக கொண்டாடப்படுவதே கும்மேளா ஆகும்.  

இந்த நான்கு இடங்களிலும் கும்பமேளா வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்று வருகிறது. 

இப்போது... 
திரிவேணி சங்கமத்தில் சிறப்புடன் நடந்து வருகிறது.

https://whatsapp.com/channel/0029VamfHu1IHphRGwQOQB0P 

மொத்தம் நான்கு வகையான கும்பமேளாக்கள் உள்ளன. 

1. *ஆர்த் கும்பமேளா* 
6 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது. 
இது ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜில் நடத்தப்படும்.

2. *பூர்ண கும்பமேளா*  
 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை... 
ஹரித்வார், பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜைனி 
ஆகிய நான்கு இடங்களிலும் நடத்தப்படும்.

3. *மக் கும்பமேளா* 
இது ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். 

இது பிரயாக்ராஜில் மட்டுமே நடத்தப்படும். 

இதை சோட்டா கும்பமேளா என்றும் சொல்லுவதுண்டு.

4. *மகா கும்பமேளா*
இது தான் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது. 

12 பூர்ண கும்பமேளாக்களுக்கு பிறகு நடத்தப்படும். 

*இது பிரயாக்ராஜில் மட்டுமே நடத்தப்படும்.*

கும்ப மேளாவின் போது கங்கையில் தலை முழுகினால்... 
*அமிர்தத்தில் மூழ்கியதற்கு சமம்!* 🙏

இது பற்றி... 

*சத்குரு :-*

இவ்வுடலில் 72 சதவிகிதத்திற்கும் மேல் நீராக இருப்பதால், 

சூரிய சுழற்சியில் ஒரு குறிப்பிட்டநேரத்தில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நாம் இருக்கும்போது, 

நம் உடலுக்கு அதிகபட்சமான பலன் கிடைக்கிறது. 

கும்பமேளாவில், 
ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் பொருத்தமான சாதனா செய்தபடி இருந்தால்... 
உடலையும் மனதின் அமைப்பையும், சக்தி நிலையையும் அதனால் மாற்றியமைக்க முடியும். 

*அனைத்திற்கும் மேலாக உங்களுக்குள் அதிகப்படியான ஆன்மீக முன்னேற்றம் நிகழும்."*
என்கிறார். 

அதிலும் இப்போது நடக்கவிருக்கும் கும்பமேளா... 

*சாதாரண திருவிழா அல்ல!*

144 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும்  கோள்களின்... 
*அற்புதமான அமைப்பு நிலையில் நடக்கிறது!* 🍁

சிவபெருமானின் மடத்து யோகிஜி, உத்திர பிரதேசத்தை ஆளும் தருணம்... 
அந்த சிவமடத்தின் மஹந்த் ஸ்ரீ விஷ்ணுவுக்கு நடத்தும் மேளா விழா இது! 

உலகின் அட்லாண்டிக், பசிபிக், ஆர்டிக் சமுத்திரங்களெல்லாம்... 

இந்து மகா சமுத்திரத்தில் சங்கமாக போகும் நிகழ்வு இந்த மஹா கும்ப மேளா!

தினமும் 90 லட்சம் பேரென்று 40 கோடி மக்கள் வரவிருக்கும் மெகா நிகழ்வு! 

ஆனால், 
முதல் நாளிலேயே ஒன்றரை கோடி பேர்கள் புனித நீராடி உள்ளனர்! 

இந்த நிகழ்வுக்கு செல்ல 
*13, 000 ரயில்கள்!*
மற்றும் 
*250 விமானங்கள்* இயங்கும்!

சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.‌‌

மக்கள் தங்குவதற்கு 
*'மஹாகும்ப நகர்'* 
என்ற புது நகரே சிருஷ்டிக்க பட்டிருக்கிறது.

நகரில்... 
*5 லட்சம் கார்கள்* 
நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

நகரை 25 பகுதிகளாக பிரித்து போக்குவரத்து வழிகள் செய்யப் பட்டிருக்கிறது.
 
24 மணி நேர மின்சாரம், 
தடையில்லா குடிநீர், 
125 ஆம்புலன்ஸ்கள், 
56 காவல் நிலையங்கள், 30, 000 காமெராக்கள்,  

மற்றும் 
நெரிசலான பகுதிகளை கண்டு ரூட் மாற்றிக் கொள்ள... 
100 *AI* பொருத்திய கணினி காமெராக்கள்,
தனி இணையதள ஆப்.  

மேலும், 
உலகெங்குமிருந்து வரும் மக்களுக்கு உதவ பன்மொழிகள் அறிந்த 100 வழிகாட்டிகள்! 
 
இவை   அனைத்தையும் கண்காணித்து மக்களுக்கு உதவ 50, 000 காவலர்கள் மற்றும் 
மருத்துவ வசதிகள்.

1954 ல் நடந்த விபத்தில் நூற்றுகணக்கானோர்  மாண்டது போல நடக்காமலிருக்க... 
ஒவ்வொரு அடியும் கண்காணிக்க பட்டு வருகிறது. 

*'ஒரே ஒரு அசம்பாவிதம்கூட நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'*
என்பது 
 அந்த கோரக்நாத் மஹந்த்தின் கட்டளை! 

இத்துடன் எந்த நிலையையும் சமாளிக்க தேசிய பாதுகாப்பு  படையும்... 
தேசிய பேரிடர் படையும் தயார் நிலையில் திரிவேணி சங்கமத்தை சூழ்ந்துள்ளது! 
(கண்ணுக்கு தெரியாமல்...)
அதாவது, 
மக்களோடு மக்களாக... 
சாதாரண உடையில்!

பாரதம் மட்டுமல்லாமல் உலகெங்குமிருந்து வந்துள்ள புகழ் பெற்ற கலைஞர்கள், நிகழ்ச்சிகள் நடத்தி பக்தர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.  

பஜனைகள், பாடல்கள் புகழ் பெற்றவர்களால் பாடப்பட்டு பிரயாகை நகரே பக்தி கடலில் மூழ்கி கொண்டிருக்கிறது.
  
இன்னொரு பக்கம் ஓவியர்கள் 'உலக ரெகார்ட்' பண்னும் விதமாக சுவரோவியம் வரைந்துள்ளார்கள்! 

நதி கரையோரம் 12 கிலோ மீட்டருக்கு... 
ஏற்கனவே அழிந்த காடுகளை இந்த மகா கும்பமேளாவுக்காக... 
*வல்லுனர்கள் உதவியுடன் மீண்டும் உருவாக்கப் பட்டிருக்கிறது!*

இந்த கும்ப மேளா முடியும் போது... 
*குறைந்த பட்சம் 4 உலக  சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும்!* 🎯

1. உலகின் மிகப்பெரிய மின்சார வாகனங்கள் அணி வகுப்பு 

2. உலகின் மிக பெரிய நதி சுத்திகரிப்பு! 
 
3. 8 மணி நேரத்தில் நடந்த மிகப்பெரிய கையால் செய்யப்பட்ட அச்சு வேலை! 
 
4. ஒரே நேரத்தில் நடந்த மிகப்பெரிய sweeping வேலை (10, 000 பேர்) 

இந்த சாதனைகளெல்லாம் ஒன்றுமே இல்லை என்னுமளவில் இன்னொன்றும் நடந்திருக்கும்... 

என்னவெனில், 
*சனாதனத்தை கடைபிடிக்கும் இந்துக்கள் ஒவ்வொருவரும்...* 

*வாரணாசி, அயோத்தி, பிரயாகை முழுகல் முடித்து...*
*பக்தி மழையில் நனைந்து,* 
*ஜென்ம சாபல்யமடைந்து...* *வாழ்த்தி, ஆசிர்வதித்து செல்வார்களே...* 

*அந்த 'மானசீக சக்தி' பாரதத்தை இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் கவசமாக காக்கும்!* 🙏 
 
உண்மைதானே?

ராமாயணத்தில்... 
ராமன், ராவணனுடன் யுத்தம் செய்வதை வானிலிருந்து முப்பத்து  முக்கோடி மக்களும் பார்த்தார்களாம். 

கல்கியும், சாண்டில்யனும்...
'பெரிய யுத்தங்களை, நட்சத்திரங்கள் கூட கண்கொட்டாமல் பார்த்தாக...'
எழுதி இருகிறார்கள்.

12,670 கோடி செலவு செய்து... 
2,00,000 கோடி பொருளாதார பரிவர்த்தனை நடக்கவிருக்கும் கும்பமேளாவை... 

*இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது!* 👍

144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு... 

நாமும் புனித நீராடினால் நம்முடைய பாவங்கள் நீங்கி,
*மோட்சம் கிடைக்கும்* 🙏 

பிரயாக்ராஜ் செல்ல முடியாதவர்கள்... 

தங்கள் பகுதியில் உள்ள புனித நதிகள், 
திரிவேணி சங்கமங்களில் புனித நீராடி, 
*மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பலனை பெறலாம்.* 🙏 

*எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் பெறுவோம்!* 🙏 

*ஓம் நமசிவாய* 🙏

Monday, 6 January 2025

குடந்தைக்குழந்தை- கவிதை

••••••••••••••••••••••••••••••
குடந்தைக்குழந்தை
•••••••••••••••••••••••••••••
செழித்த மண்ணில் துள்ளிக்குதித்து,
குடந்தைக்காவிாியில் தாவிக்குதித்து,
முக்கனி நிழலில் மூழ்கிப்படித்து,
முன்னொருகால தவவலிமையால்
குடந்தை மண்ணில் ஓா் மருத்துவக்குழந்தை  சாந்தமூா்த்தி,

மகத்துவம் நிறைந்த மருத்துவம் பயின்று, மக்கள் மனம் கவா்ந்த காந்த மூா்த்தி.!

எளியவருக்கிறங்கும் அாிய மனதுடன்,
அள்ளக்குறையா அமுதசுரபியாம்
அன்னை சிவகாமியின்  நகலாய் பிறந்த விமலாதேவியின் கா(த)வலன் ஆன விமலாமூா்த்தி...!

புனிதக்குடந்தையின் பொறுமைக்கடலே
உம் கருணைக்கடலால்
பலருக்கும் நீா் கருணாமூா்த்தி,

மனிதநேய இலக்கணம் பொதிந்த
தலைக்கணமில்லா
மருத்துவ மூா்த்தி,

காலத்தின் கோலத்தால் துணையை இழந்தும் அன்பையும்,நம்பிக்கையும் இழக்காத வைரமூா்த்தி,

பூலோக கடமையை குறைவின்றி முடித்து மூன்று பாலகா்களையும் இமயம்போல் உயா்த்தி
தனியாளாய் தள்ளாடாமல் இன்றும் வாழும் இமயமூா்த்தி,

அகவை 60 ல் ஷஷ்டியப்த பூா்த்தியடைந்து,
70 ல் பீம ரத சாந்தி கடந்து, 80 ல் சதாபிஷேகமும் கடந்து 100 ல் கனகாபிஷேகம் கடந்தும் எங்களை வாழவைத்து, ஆசீா்வதிக்க வேண்டுமாய் எம்பெருமான் குடந்தை காசி விஷ்வநாதரை மனதுருக வேண்டி வணங்குகிறேன்.

எங்கள் மனம் நிறைந்த மருத்துவரே,
உம் மகளான, மருமகள் இந்த காளியம்மாளின்
மனம்நிறைந்த வணக்கங்கள்.

அன்புடன்...
உங்கள் அன்பு மகள்,
S.காளியம்மாள்.

Thursday, 2 January 2025

திருப்பூாில் மூட்டு வலி சிகிச்சை நிலையம்

நண்பர் ஒருவர் உறவினருக்கு முதுகு தண்டுவட பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார் பல நாட்களாக பல மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று எந்த முன்னேற்றமும் இல்லாமல் கடுமையான வலி இதனால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்*  *கேரளா சென்று ஆயுர்வேதிக் ட்ரீட்மென்ட் பார்க்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து ரயில் மூலம் எர்ணாகுளம் ஆயுர்வேதிக் மருத்துவமனைக்கு செல்ல புறப்பட்டு சென்றோம் இந்த நிலையில் ரயில் நிலையத்தில் இவர் சிரமப்பட்டு நடந்து வருவதை பார்த்த ஒருவர் இது குறித்து விசாரித்தார் அவரிடம் எங்கள் பிரச்சினையை சொல்லி கேரளாவுக்கு செல்ல இருப்பதை கூறினோம். அவர் சொன்னார்
*இது போன்ற முதுகு தண்டுவட பிரச்சினைகளை திருப்பூரில் உள்ள MR  நேச்சுரல் கேர்  சென்ட்ரில் மிக இலகுவாக மருந்து மாத்திரைகள் ஏதும் இன்றி ஒரு மணி நேரத்தில் குணப்படுத்தி விடுகிறார்கள் என்ற தகவலை சொன்னார் அவரிடம் cell phone நம்பர் பெற்றுக்கொண்டு உடனடியாக அங்கிருந்து போன் செய்து பேசினோம் அழைத்து வாருங்கள் ஒரு மணி நேரத்தில் சரி செய்து விடலாம் என்று உறுதிபட கூறினார்கள் இதனால் எங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி புறப்பட்டோம்"*

*இங்கு சென்று விசாரித்த போது பெரும்பாலும் அலோபதி மருத்துவத்தால் பல நாட்கள் சிகிச்சை எடுத்தும் சரி ஆகாத நிலையில் உள்ளவர்களும் வருகின்றார்கள் என்பதையும் அறிந்து கொண்டோம்*

*எங்கள் நண்பருக்கு சிகிச்சை துவங்கிய ஒரு மணி நேரத்தில் பரிபூரணமாக குணம் பெற்று மிகவும் மகிழ்ச்சியாக வெளியே வந்தார் எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது இது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியப்பட்டோம்*

 *சிகிச்சை குறித்து  மருத்துவர் சொன்ன பதில் ,இது முந்தைய கால பாட்டி வைத்திய முறையில், உடலில் நரம்பு மண்டலங்களில் ஏற்படும் பிரச்சனைகள் முதுகு தண்டுவடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு செய்து சரி செய்து  வந்தார்களோ அதே பாணியை பின்பற்றி நவீன முறையில் நாங்கள் சிகிச்சை அளிக்கின்றோம் இதனால் முதுகு தண்டுவட பிரச்சினைகள் ,கழுத்து திருப்ப முடியாத பிரச்சனைகள், L4,L5, பிரச்சனைகள் அனைத்தும் மிகவும் சுலபமாக சரி செய்து விடுகிறோம் என்றார்*

*என் நண்பருக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்தும் தீர்க்க முடியாத இந்த பிரச்சனைகளை வெறும் 1500 ரூபாயில் பரிபூரணமாக குணப்படுத்தியது எங்களை வியப்படைய செய்தது*

*மேலும் இங்கு எவ்வளவு நாள்பட்ட மூட்டு வலிகளாக இருந்தாலும் 48 மணி நேரத்தில் நிவாரணம் அளிப்பதாகவும்,  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லை சிறந்த முறையில் குணப்படுத்தி தருவதாகவும் சொல்கிறார்கள்*

*யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள்  முதுகு தண்டுவட பிரச்சனைகளில்  இருந்தால் இங்கு அனுப்புங்கள் பூரண குணம் பெற்று  வாழட்டும்.*

*தொடர்புக்கு* 
*79044 40917*

*#Address*
*MR Natural care* 
*86/3 kangayam main road Tirupur*

: *இந்த தகவல் பலருக்கும் பயனளிக்கும் என்பதனால் பகிர்கிறேன்...*

Saturday, 23 March 2024

சோட கலை

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்க உதவும்
சோடசக்கலை நேரம்!

எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே  இருக்கின்றனர் ?

எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?

அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், 
கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்
கொள்கின்றனர்.

அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்
கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போகும்
சோடசகலை நேரம்!

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.

பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது. 

அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .

சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 
15திதிகள் உள்ளன. 

திதிகள் என்றால் கலைகள் என்றும் அழைக்கப்படும். 

16 வதாக ஒரு கலை இருக்கின்றது.

அதுதான் சோடச கலை!

இந்த சோடசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,
செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள்  என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.

தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். 

இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.
 
இதை அறிந்தது முதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,
என நமது வாழ்க்கைப்பாதை திசைமாறி
விடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். 

இவர்தான் இந்த சோடசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.

சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்
முழுவதும் பரவுகிறது.

திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.

இந்த 16 வது கலையை சித்தர்களும்,
முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த  ஒன்றையும் பெற முடிகிறது.

இந்த சோடச
கலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். 

அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.

அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் அமாவாசை முடிந்து பிரதமை திதி ஆரம்பமான ஒருமணி நேரம்  11.20 மணி வரை நீங்கள் தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.

இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 
5நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை கழுதை,புலி,முயல்,
மான்,பாம்பு, நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை,கழுதை,
கோவேறுக்கழுதை,
எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனுள்ளும்  சூட்சுமமாக அதிரும்.

அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும்.

 கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.

பலவாக இருக்கக்கூடாது.

ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். 

மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது 
சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.

சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.

இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. 

மனவலிமையைப் பொறுத்தது.

திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,
ஒளியாகவோ 
அருள் வழங்குகிறார்.

தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். 

தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.

வெறும் தரையில் உட்காரக்கூடாது. 

வயிறு காலியாக இருக்க வேண்டும். 

சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) 

நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.

உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. 

மனதின் கவனம் புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.

வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.

மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.

அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் 
கண்களை மூடி இருந்தால்போதும்.

இந்த தியான நேரத்தில்  கீழே உள்ள மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.

*1.ஓம் ரீங் சிவ சிவ*
*2.ஓம் ரீங் அங் உங்*
*3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்*
*4.ஓம் சிவ சிவ ஓம்*

இந்த தியான நேரத்தில் 
பட்டினியாக இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. 

இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

Saturday, 17 June 2023

தந்தையா் தின வாழ்த்துகள்:

•••••••••••••••••••••••••••••••••••••••••••••
தந்தையா் தின வாழ்த்துகள்:
••••••••••••••••••••••••••••••••••••••••••••

வலி நிறைந்த வாழ்க்கையில்
வேலியிட்டு  காத்த மாற்றான் வீட்டு மங்கையை மணமுடித்து, அன்பினால் அவளை அன்னையாக்கிய தந்தையே...!

நீ  அன்பில் நிறைத்த உன்னவள் அன்னையாகி  போனதும் ஆா்ப்பாித்தது உன் மனது...

அவளின் மறுபிறப்பெய்தும் ஒப்பிலா  மாதொரு வலியை உன் அன்பினால் தாங்கினாயே...!

வந்து பிறப்பெடுத்த சிசு ஆணா? பெண்ணா? அறியும் ஆவலில் பாிதவித்து நின்னாயே...!

பாலினம் எதுவாயினும் பெற்ற நீயே பொறுப்பென உணா்ந்து, தந்தை என்ற சம்பளமில்லா பதவி உயா்வு அடைந்தாய்...

அடைந்ததை ஆரவாரத்துடன் ஏற்று அதுகணமுதல் சுயநலமின்றி குடும்ப நலம் காக்க அரும்பாடு பட்டாய்...

பாலன் வளா்ந்து மாற்றமின்றி உன் உணா்வை பிரதிபலிக்கும்போது, புாிந்தது ஒரு தந்தையின் முழு உணா்வு.

விடைதொியா குடும்ப சூத்திரத்தை விரும்பியே ஏற்று அனுபவம் பெறும் அனைத்து தந்தைகளுக்கும் இது சமா்ப்பணம்...

க.இளங்கோவன்.
 18/06/2023

Thursday, 30 March 2023

ஆண்கள் செய்யக்கூடாத 15 செயல்கள்:

ஆண்கள் செய்யக்கூடாத 15 செயல்கள்: 

தப்பித்தவறி கூட இப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள்!

 ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது,பிரேதத்தின் பின் போகுதல்,முடிவெட்டுதல்,மலை ஏறுதல்,சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல்,வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது,
மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்
நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை
1,கன்றுக்குட்டி,மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது
2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது
3,நிலையில் அமரக்கூடாது
4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது
6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது
7,சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது
8,நெருப்பை வாயினால் ஊதக்கூடாது
9,அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது
10,துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்
11,ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது,கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்,
12,ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது,உதறக்கூடாது
13,பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை, கோவிலுக்குப் போக்ககூடாது
கூடாத சில விஷயங்கள்!
பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும்,தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது! அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும்
மற்றும் அக்கினி, சூரியன், சந்திரன்,வில்வமரம்,பசு,தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது!
மற்றும் பாம்புப்புற்றின் அருகிலும்,எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது,
முக்கிய எச்ச்ரிக்கை! மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது, அது மிகப்பெரிய தோஷமாகும்!

Saturday, 25 March 2023

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
https://www.facebook.com/groups/305917699863621/
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!