Monday, 6 January 2025

குடந்தைக்குழந்தை- கவிதை

••••••••••••••••••••••••••••••
குடந்தைக்குழந்தை
•••••••••••••••••••••••••••••
செழித்த மண்ணில் துள்ளிக்குதித்து,
குடந்தைக்காவிாியில் தாவிக்குதித்து,
முக்கனி நிழலில் மூழ்கிப்படித்து,
முன்னொருகால தவவலிமையால்
குடந்தை மண்ணில் ஓா் மருத்துவக்குழந்தை  சாந்தமூா்த்தி,

மகத்துவம் நிறைந்த மருத்துவம் பயின்று, மக்கள் மனம் கவா்ந்த காந்த மூா்த்தி.!

எளியவருக்கிறங்கும் அாிய மனதுடன்,
அள்ளக்குறையா அமுதசுரபியாம்
அன்னை சிவகாமியின்  நகலாய் பிறந்த விமலாதேவியின் கா(த)வலன் ஆன விமலாமூா்த்தி...!

புனிதக்குடந்தையின் பொறுமைக்கடலே
உம் கருணைக்கடலால்
பலருக்கும் நீா் கருணாமூா்த்தி,

மனிதநேய இலக்கணம் பொதிந்த
தலைக்கணமில்லா
மருத்துவ மூா்த்தி,

காலத்தின் கோலத்தால் துணையை இழந்தும் அன்பையும்,நம்பிக்கையும் இழக்காத வைரமூா்த்தி,

பூலோக கடமையை குறைவின்றி முடித்து மூன்று பாலகா்களையும் இமயம்போல் உயா்த்தி
தனியாளாய் தள்ளாடாமல் இன்றும் வாழும் இமயமூா்த்தி,

அகவை 60 ல் ஷஷ்டியப்த பூா்த்தியடைந்து,
70 ல் பீம ரத சாந்தி கடந்து, 80 ல் சதாபிஷேகமும் கடந்து 100 ல் கனகாபிஷேகம் கடந்தும் எங்களை வாழவைத்து, ஆசீா்வதிக்க வேண்டுமாய் எம்பெருமான் குடந்தை காசி விஷ்வநாதரை மனதுருக வேண்டி வணங்குகிறேன்.

எங்கள் மனம் நிறைந்த மருத்துவரே,
உம் மகளான, மருமகள் இந்த காளியம்மாளின்
மனம்நிறைந்த வணக்கங்கள்.

அன்புடன்...
உங்கள் அன்பு மகள்,
S.காளியம்மாள்.