Tuesday, 21 January 2025

சாந்த சொரூபி - கவிதை

*********************
சாந்த சொரூபி,
*********************
இளமைக்கால நினைவினிலே,
இனியதோர் நிஜம் நிழலாடுகிறது.
நுண்ணிய அறிவும்,
முதிர்ந்த மனதும்,
சாந்த குணமும்,
தெய்வீக முகமும்,
சந்தன கலரும்,
சந்தேகமில்லா அன்பும் 
கலந்த கலவை
என் சாந்தியடி நீ...!

காலங்கள் கடந்தும்
கசக்காத நம் அன்பு,
காலங்கள் கடந்தும் வண்ணக் கோலங்களாய்
நம் நினைவுகள்.
83 லே  ஒரு கூட்டு பறவைகளாய்  எண் திசையினின்றும் கூடினாலும்,
கூட்டப்பறவைகளில் கூடப்பிறந்த  பறவை நீயடி...!

அகவைகள் பல கடந்தும், வாழ்க்கை எனும்
ஓடம் திசை மாற்றினாலும்
அள்ளக்குறையா அமிர்தம்  நிறைந்த அன்பு குடமடி நீ...!

தனக்கென்று ஒரு கூடு,
அதில் ஓர் குடும்பம்,
அருமையான வாழ்க்கைத்துணை,
அழகிய குழந்தைகள்,
அன்புடனே வளர்த்து
ஆராதித்து, ஆலமரமாய்
வளர்ந்து நிற்கும் 
ஆல மரமடி நீ...!

தன்னலம் பாராது
தயை கொண்ட
மனதினாலே
சுனக்கமின்றி இன்றளவும் துளி கூட பிரியா மனம்கொண்ட
தங்க குடமடி நீ...!

உன் பணி முதிர்வு உன் பணிக்கு மட்டுமே.
நம் நட்பு என்றும் இவ்வாழ்க்கை மட்டுமன்றி
ஏழேழு தலைமுறைக்கும் தொடரும்
தலைமுறையடி நீ...!

இனி உள்ளத்தையும் உடலையும் உன்னிப்பாய் கவனி.
உடனுக்குடன் உறவுகளையும் கவனி.
சாியான உறக்கத்தையும், உடற்பயிற்சியையும் உன் தின வாழ்க்கை பட்டியலாக்கு.
உன் மீத வாழ்க்கையும் மற்றவர்களுக்கு பொக்கிஷமாக எல்லாம் வல்ல ஈசனை வணங்கி வாழ்த்துகிறேன் தாயே...!


அன்புடன்...
உன் அன்புத்தோழி,
K.வளா்மதி,
தேதி: 22/01/2025