°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பழைய சோறு- புதுக்கவிதை:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பழைய சோறு அது பழம்பெரும் சோறு...
நீரதன் புகழை
இன்நினைவகற்றாதீா்...
பழையசோறுடன் பட்ட மிளகா, பாா்த்ததும் சுரந்துருகும் உமிழுநீரு...!
சின்னவெங்காயம் சிறுக சோ்த்து சீராய்கடித்து உறிஞ்சிகுடிக்க புத்துயிரும் பிறக்குமே...!
ஓசியாய் கிடைத்த பட்டிகாட்டு ஊறல் சோறு,இன்று பட்டணத்தில் கட்டணத்துடன் ஆச்சாியம்...!
ஏழையின் கஞ்சியாம் கம்பகஞ்சியும் கேப்பகூழும் சாலை வண்டியில் இன்று ஆடிக்காாில் வந்தருந்தும் நோய்தீக்கும் பணக்காரகஞ்சியாய்...
புதுசுபுதுசாய் உலகமயமாதலில் பழையன புதியதாய் பழைய சோறு இன்று புதிய சோறாய் மாறி அதிசயக்கும் அமிா்தமானதோ...!!!
க.இளங்கோவன்
தேதி:07/04/2019