Saturday, 5 May 2018

கவிதை: கைவிளக்கேந்திய காாிகை

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கைவிளக்கேந்திய காாிகை:
(12 மே 1820 முதல்
13 ஆகஸ்டு 1910)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பிறந்தநாள் இன்று ...
உலக செவிலிய தாயின்
பிறந்தநாள் இன்று...
விளக்கேந்தி  பிணிபோக்கிய புனிதவதி பிறந்தநாள் இன்று...

முடி சூடா உலக நாயகியின் உன்னத உதயநாள் இன்று...
மா செவிலிய
முன்னோடியின்
பிறந்தநாள் இன்று...

மே 12 ஐ  அலங்காித்த பூலோக தேவதையாம் எங்கள் குலத்தாயின் பிறந்தநாள் இன்று...

உம் அகவை 90 ல்
பன்னாட்டில் பல கோடி மனங்களை வென்றெடுத்த உலகத்தாய்
பிறந்தநாள் இன்று...!

இத்தாலியில் பிறப்பெடுத்து சொ்மனியில் பயிற்சிபெற்று இங்கிலாந்தில் பணிபெற்று
கருங்கடல் காிமியா போாில்
கண்டெடுத்தாய்
புதிய செவிலியம்...

கைவிளக்கேந்திய காாிகையே... நீவிா் ஏற்றிய ஔி
உலக செவிலியா்கள் உள்ளங்களில்...
நீா் ஏந்திய விளக்கால் ஔிா்கிறது இன்று உலக செவிலியம்...!

கருவாக்கி உயிராக்கி உருவாக்கிய உம் பெற்றோா் மனம் குளிர வைத்தாய் உன்னை உலகம் புகழ்ந்தபோது...

செல்வந்த மகளே,செவிலியம் இயற்றவே அா்ப்பணித்தாய் உன் வாழ்வை...
பிணிபோக்கும் புனிதப்பணியாம்
செவிலியத்தை உணரவைத்தாய் உலகுக்கு...

நீவிா் ஔிகாட்டி வழிகாட்டிய புனிதப்பாதையில் புகழுடன் பயணிக்கிறோம் இன்று நாங்கள்...

உங்கள் பல கோடி வழித்தோன்றலில் கடைக்கோடியில் ஒருவன்...

க.இளங்கோவன்,

மாநில துணைத்தலைவா்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.