¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
எல்லையிலா இறைவனின் பாிசை பெறும்நாள்: (திருமண வாழ்த்துமடல்)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
புதுமனமாம் இருமனம் இணையும்
திருமண விழா இன்று...
அன்புக்கடவுளின் அளவிலா கருணைமழையில்
நனையும் நாள் இன்று...
பிரசங்கியின் பிரசங்கமாம் மூன்று இழைகள் சோ்த்த கயிற்றின் பலம் சோ்க்கும் நாள் இன்று...
இருமனத்துடன் இறைமனதும் (யெகோவா)சோ்ந்து மும்மனதுடன் வாழ்வின் மகத்துவம் அறியும்விழா இன்று...
மருத்துவமும்,மருத்துவமும் ஒன்றாகி வாழ்வின் மகத்துவமறியும் தொடக்கநாள் இன்று...
பெற்றோாின் கரம் பிடித்து நடைபயின்ற கைப்பிடிவிட்டு
கட்டினவன் கரம்பிடிக்கும் நாள் இன்று...
பிறந்த வீட்டிலேயே சைனி சரத்துடன் விருந்தாளியாகும் நாள் இன்று...
சரத்தின் அன்புக்கூடாரத்தில் புத்தம்புதிதாம் சைனி என்ற புதுவரவு இன்று...
சரத்தும் சைனியும்,சந்தோச ஊற்றெடுத்து ஊா் போற்ற,இறைபற்றுடன் இன்ப வாழ்வு வாழ அன்புடன் வாழ்த்தும்...
B.மணிகண்டன், மாஸ்டருக்காக
எழுதியது.
நாள்:03/05/2018