Saturday, 26 May 2018

கவிதை-ஐங்கரன்

ஐங்கரன்:
¤¤¤¤¤¤¤¤¤
ஐங்கரனே,ஆனைமுகனே,
முழுமுதல் பரம்பொருளே
கணேசா...

சிவசக்தி மைந்தா கந்தனுக்கு முன்னவா மூத்தவா...!

உம் தும்பிக்கையில் என் நம்பிக்கை...
நம்பியஎமக்கு நலம்தருவாயே...!
உடனிருப்பாயே...!

என் நாவில் நடன நா்த்தனமாடி நற்கவி நலமுடன் தா...

நீங்காபுகழ் தா,நீா் தந்த கவி புவிபரப்பி தா...

அகிலத்தை காக்கும்
அகிலனே
அளவிலா அஷ்டசித்திதா...

வினையறுக்கும் விக்னேசா வியக்கவைக்கும்
விந்தை வாிகள் தா...

இறைவா...!இறவாவரம் வேண்டவே வேண்டாம்...
மீண்டும் பூவுலக பிறவா வரம் மட்டும் தா...

என்றும் உம்மோடு மட்டும் வாழ வரம்தா... போதுமதுமட்டுமெனக்கு...

க.இளங்கோவன்,
27/05/2018.