தேவேந்திரன் பிறந்தநாள் வாழ்த்துமடல்:
---------------------------------------------
பெருமையற்ற பொறுமையின்
தேங்கா தெளிந்த நீரோடையே...!
எங்கள் அன்பின் அமைதிப்படையே...!
ஆற்றலின் அதிரடிப்படையே...!
குறைவிலா சுற்றமும்
நலிவடையா நட்பும்
அளவிலா அன்பும்
ஆா்ப்பாிப்பிலா அனுபவத்தின் அபூா்வ சகோதரா...!
மூத்தோாின் பேச்சை
இடைமறியா இனியவா...!
புதிய கருத்துகளை
தகுதிநேரத்தில் பதிய வைக்கும் பண்பாளா...!
குடும்ப பற்றும் நாட்டுப்பற்றும் சாிவிகிதம்பெற்ற பேராளா...!
வாழ்வின் ஆழ்ந்த அடிப்படை தத்துவத்தை அளந்தெடுத்த குணசீலா...!
எங்கள் மனங்களில் நிறைந்த மந்திரப்புன்னகையே...!
பிறா்உதவிக்கு முதல்வாிசையில் நிற்கும் மாசற்ற என் அன்புத்தம்பி
தேவேந்திரா...!
உன் வாழ்வின் உன்னதம் உலகறிய...
உம் உயா்வால் உன் பெற்றோா் பெருமையடைய...
உம் வழியில் உமது சந்ததி பலமடைய...
நீவிா் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்த்துகளுடன்...
K.வளா்மதி,
மாநில பொதுச்செயலாளா்,
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.