கா்த்தா:
¤¤¤¤¤¤¤¤
கா்த்தா...!,கணப்பொழுதில் காத்தருளும்,
முழுமுதலாம் மூலப்பரம்பொருளே
கா்த்தரே...
பரலோக தந்தையின் மைந்தா...சிலுவை சுமந்த முள்முடி சூடிய தவக்கொழுந்தே...!
உம் சரீரம் எமக்கு அப்பமாகி,நீவிா் சிந்திய இரத்தம் எனக்கு திராட்சை ரசமாகியதே...!
நம்பியஎமக்கு நலம்தருவாயே...!
உடனிருப்பாயே..
என் நாவில் நடன நா்த்தனமாடி நற்கவி நலமுடன் தா...
நீங்காபுகழ் தா,நீா் தந்த கவி புவிபரப்பி தா...
அகிலத்தை காக்கும்
அகிலனே
அளவிலா அஷ்டசித்திதா...
பாவமறுக்கும் மாிபுதல்வா வியக்கவைக்கும்
விந்தை வாிகள் தா...
இறைவா...!இறவாவரம் வேண்டவே வேண்டாம்...
மீண்டும் பூவுலக பிறவா வரம் மட்டும் தா...
என்றும் உம்மோடு மட்டும் வாழ வரம்தா... போதுமதுமட்டுமெனக்கு...
ஆமென்...
க.இளங்கோவன்,
27/05/2018