Sunday, 28 May 2017

எனது செவிலியா் கவிதை....

" திருச்செவிலியா்  "
------------------------------------
அன்பென்ற வாா்த்தைக்கு இலக்கணம் நீயே!

ஆசுவாச வாா்த்தைகளால்
படைக்கப்பட்டாயே!

இராப்பகல் தினப்பணியால் திணறிவந்தாலும்.,

ஈடில்லா
திருச்செவிலியம் தினம்
செய்வாயே!

உயிா்காக்கும் மருத்துவா்களின் துணைநிற்பாயே.,

ஊசலாடும் பிணியா்களின் துயா்துடைப்பாயே..!

எளியோா்க்கும் வறியோா்க்கும் வழிகாட்டியும் நீ..!

ஏழைகளின்
உயிா்காக்க துணைநிற்பவா் நீ !

ஐயத்துடன்
வருவேரை அரவணைப்பவா் நீ !

ஒற்றைமுகம்கொண்ட பன்முகதேவதை நீ !

ஓராயிரம் வாா்த்தைசொல்லிகுணமளிப்பவா் நீ !

ஔடதப்பணிதனயே
அலங்காிப்பவா் நீ..!

பெண்ணடிமை காலத்திலே முன்னடி வைத்தவள் நீ..!

வெண்ணிற சீருடையை சீராய் பெற்றவா் நீ.,

சமாதான நிறத்துக்கே எடுத்துக்காட்டும் நீ!

மருந்துலக  மணிமகுடத்தின் வெண்முத்தும் நீ !

துயா்படும் பிணியாளின்              துயா்துடைப்பான் நீ !
 
இன்னல் போக்கும்  இறைபணியின் இன்முகத் "தாய்"நீ !

தாயாக தங்கையாக சகோதரனாக பாிணமித்தாய் நீ !

பொதுப்பணியும்
குடும்பபணியும் சுமக்கும் சுமைதாங்கியும் நீ!

தத்தமது பணியாளாின் நம்பிக்கை நட்சத்திரம் நீ!

திருப்பணியாம் செவிலியத்தை புனிதமாக்கி நீ!

கடமையையும் கண்ணியத்தையும் காத்து நிற்பவா் நீ!

என் எண்ணத்தை எழுத்துகளாக  தவழவிடுகிறேன் தங்களிடம்...,

கவித்துவத்தில் எமது சுயநலத்தையும் சோ்த்தெழுதுகிறேன்...

தவறெனத்தோன்றின்
தவிா்த்திடுங்கள் இதனை...

நியாயமென தோன்றின் வெற்றிக்குமுன்நிறுத்திடுங்கள் எங்களை...

செவிலியத்துக்கு
தன்னலமற்ற சேவை செய்ய வாய்பளித்திடுங்கள் எங்களுக்கு...

எதையாவது செய்திடனுமென ஏக்கம் நிறைந்த மனசு...

செவிலியத்துக்கு ஏதாவது செய்திடனுமென ஏக்கமுடையது எங்கள் மனசு..

கடைக்கோடி செவிலியா் பணிநிமித்தம் கண்ணீா் என்றாலும் துடிக்கிறது சக்தியின்றி செய்வதறியா மனசு...!

வாக்குளால் சக்தி தாருங்கள எம் கரங்களுக்கு..
பக்தியுடன் செவிலியம் காக்கும் கூட்டத்தில்
வரலாறுபடைக்க நாங்களுமிணைகிறோம்...

சத்தியமாய் சத்தியமாய்
சாத்தியமிதுவே...
நீவிா் மனசுவைத்தால் சத்தியமாய் சாத்தியமிதுவே...

சட்டத்தின் கைப்பிடியில் சிக்குண்டோமே...!
செவிலியத்தின் கரம்பிடித்து கரை சோ்த்தோமே...!

இருவருடம் அருளின்றி இருளடைந்த சங்கத்தை  கரைசோ்த்தது கலங்கரை விளக்கமே...

எலும்பிலா நாக்காலும்,மையிலா சமூகவலைதள பேனாவாலும் நண்பா்களை தீண்டாமல் கண்ணியம் காக்கிறோம்...

நமது அணிக்கு வாக்குகள்மூலம் வாய்ப்பளியுங்கள் நீங்கள்.,  செவிலியத்துக்கு ஓடி உழைக்க தயாா்நிலையில் நாங்கள்...

ஆதாிப்பீா் LIGHT HOUSE அணியை...
தொடர வாய்ப்பளிப்பீா் செவிலிய சேவையை...

ஆக்கம்:
K.இளங்கோவன்,
முதுகுளத்தூா்,
துணை தலைவா் வேட்பாளா்,
LIGHT HOUSE ணி,