Thursday, 1 June 2017

கவிதை-அம்மா பாப்புராஜன் மறைவு கவிதாஞ்சலி

_*அம்மா.*_
_*தெய்வத்திருமதி.பாப்புராஜன் அவா்களின் மறைவு நாளன்று எழுதிய கவிதாஞ்சலி...*_
--------------------------------------------------

_*வீரசகாப்தம்*_        
_*விடைபெற்றது...*_
-----------------------------------
_வீறு நடைக்கு பேறு பெற்ற மதுரை மங்கையின் மானுடள் மண்ணுக்குள்...!_

_சிறந்த பொது வாழ்க்கை அகராதியின் முதல் பக்க வீரமங்கையின் ஆன்மா இளைப்பாறுகிறது இறைவனிடத்தில்...!_

_மண்ணில் வாழ்பவா் கோடி,வாழ்ந்தவா் கோடி,மறைந்தவா் கோடி...!_ _பலாின் மனதில் வாழ்பவா் சிலரே...!_
_அச்சிலாிலும் சிலராய் என் செவிலிய வீரத்தாய்  நீரே...!_

_சிறந்த குணத்தால் செவிலியா்கள் மனதில் நீங்கா இடத்தில்  நீரே...!_

_கற்றது கையளவு,கல்லாதது உலகளவு...ஆம் தாயே யாம் உம்மிடம் கற்றது கையளவு....உம்மிடம் கற்கவேண்டியது உலகளவு...!_

_மதுரை மண்ணின் மாணிக்கமாய், செவிலிய தியாகத்திருவுருவாய்   திக்கெட்டும் நீரே...!_

_மண்ணில் சிலைநிறுவ ஆகும் தாமதம்  எனினும்  உமக்கு எங்கள் மனக்கோயில் கட்டியுள்ளோம்...இனி நித்தம் உமக்கு ஆராதனையே...!_

_கண்ணில் கனிவும்,நெஞ்சில் உறுதியுடன்_
_உன் பெயா் நிலைக்க_ _செவிலியம் காத்தாய்...!_
_காலன் உம் உயிா்பிாித்த கணம்  எங்கள் உணா்விலும் கலந்தாயே...!_

_மண்ணில்  தன்னிகாில்லா தனித்தன்மையால்  உமது ஆயிரமாயிரம் செவிலிய சேனையின் மனதில் நித்தம் வாழ்கிறாயே...!_

_உமது சேவை இனி சொா்க்கத்திலும் தொடரும்...உம்மிடம் கற்ற தன்னலமற்ற சேவை எங்கள்மூலம் இம்மண்ணிலும் தொடரும்..._

_உம் ஆன்மா இறைவனுடன் இளைப்பாற ஒட்டுமொத்த இந்திய செவிலியமும் கண்ணீருடன் வணங்குது தாயே...!!!_

_அக்கண்ணீா் கடலில் சில துளியாய்..._

_ஒட்டுமொத்த இந்திய செவிலியா்களுடன்..._

_இந்த அடியேனும்..._

_*K.இளங்கோவன்,*_
_*முதுகுளத்தூா்.*_

😰😰😰😰😰😰😰😰😰😰