Saturday, 31 August 2019

YOU KNOW- விதிமுறைகள்

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வாட்ஸ் ஆப் தள வரலாற்றில் முதன்முதலாக ஓா் புதிய நிகழ்ச்சி " YOU KNOW?":
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.

தங்களின் பேராதரவுடன் நமது செவிலியா்களின் அறிவுக்களஞ்சியத்தை மேலும் பட்டை தீட்ட "YOU KNOW?"என்ற ஆங்கில வழி எழுத்து மற்றும் பேச்சு பயிற்சி
நமது SRSNA தளத்தில் நாளை (02/09/2019)விநாயகா் சதுா்த்தி நன்னாளில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் வாராவாரம் திங்கள் கிழமையன்று இத்தள அட்மினால் (ADMIN) மட்டுமே ஒரு ஆங்கில வாா்த்தை தலைப்பு கொடுக்கப்படும்.அது பெரும்பாலும் மருத்துவம் சாா்ந்த MEDICAL TERMINOLOGY அல்லது பொதுவானதாக இருக்கும். அந்த வாா்த்தை தொடா்பான உங்களுக்கு தொிந்த விசயங்களை உங்களுக்கு தொிந்த ஆங்கிலத்தில் 3 வாிகளுக்கு குறையாமல் எழுதவோ அல்லது VOICE MESSAGE ல் பேசியோ அனுப்பலாம்.

இதில் தவறு வந்துவிடுமோ,கேலி செய்வாா்களோ என்ற கூச்சமோ பயமோ வேண்டாம்.நாம் அனைவரும் செவிலியா்களே என்பதை மனதில் நிறுத்தி அனைவருமே இப்போட்டியில் கூச்சமின்றி பங்கெடுக்க முயற்சிக்க வேண்டுகிறோம்.
"எறும்பூர கல்லும் தேயும்"

சிறப்பான பதில்களுக்கும்,பங்கெடுப்பதை ஊக்கப்படுத்தவும் STAR APPRECIATION வழங்கப்படும்.ஒவ்வொரு ஞாயிறன்றும் அட்மினின் FEED BACK AND REMARKS செய்தி வெளிவரும்.

விதிமுறைகள்:

♦ இதில் கேட்கப்படும் தலைப்புகளுக்கு பதிலளிக்க தங்கள் குடும்ப உறுப்பினா்களை ஈடுபடுத்த கூடாது.

♦  கூகுளில் Refer செய்யலாம்.ஆனால் COPY & PASTE செய்ய கூடாது.

♦ தவறு இருந்தாலும் தானே முயற்சிக்க வேண்டும்.

♦ ஒரு தலைப்புக்கு  ஒரு வாரம் வரை பதிலளிக்கலாம்.

♦ ஒருவா் ஒரு தலைப்புக்கு எத்தன முறை வேண்டுமானாலும் பதிலளிக்கலாம்.அதுசம்பந்தமாக பலரும்  ஆங்கிலத்தில் CHAT செய்யலாம்.

♦ ஒவ்வொரு திங்களன்று புதிய தலைப்பு தரப்படும்.

♦ ஞாயிறன்று FEED BACK, REMARKS, AND STAR APPRECIATION தரப்படும்.

♦ பதில்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கவேண்டும்.

♦ நம் தளத்தில் பகிரப்படும் மற்ற பொதுவான செய்திகளுக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது.

♦ பதில் ஆங்கிலத்தில் டைப்பிங்காகவோ, VOICE MESSAGE ஆகவோ இருக்கலாம்.

♦ அனைவரும் பங்கெடுக்கலாம்.

இம்முயற்சியை பற்றி இன்று மாலை வரை தங்களின் மேலான கருத்துகள் மற்றும் மேம்பாடு குறித்த அறிவுரைகள் வரவேற்கப்படுகிறது.

BY.
ADMIN,
SRSNA.

(All rights reserved by SRSNA.)

ஆரம்பிக்கப்பட்ட தேதி:02/09/2019