Tuesday, 13 August 2019

தமிழ்நாடு மற்றும் தேசிய சுகாதார திட்டங்கள் 2019

••••••••••••••••••••••••••••••••••••••••••••
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்:
••••••••••••••••••••••••••••••••••••••••••••
தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.

மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களும்,தமிழக சுகாதார துறை உயா் அலுவலா்களும் தமிழகம் முழுவதுமுள்ள பல மருத்துவமனைகளுக்கு தற்போது திடீா் விஜயம் செய்துவருகின்றனா்.அதுசமயம் அங்கு பணிபுாியும பல்வேறு பணியாளா்களிடம் நமது சுகாதார துறை சாா்ந்த கேள்விகளை கேட்கின்றனா்.குறிப்பாக தமிழக அரசு மற்றும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களைப்பற்றி கேள்வி எழுப்புகின்றனா்.

இதுசம்பந்தமாக நமது செவிலியா்களுக்கு அறிவுறுத்த விரும்புவது யாதெனில் தமிழக அரசு மற்றும் தேசிய சுகாதார சிறப்பு திட்டங்களின்  செயல்பாடுகளை நன்கு தொிந்து வைத்துக்கொள்ள முயற்சிக்கவும்.அதற்காகவே முக்கியமான சில தமிழக மற்றும் தேசிய சுகாதார திட்டங்களைப்பற்றி கீழே தொிவித்துள்ளோம். படித்து பயன்பெற வேண்டுகிறோம்.

தமிழக அரசின் சுகாதார திட்டங்களான...

♦ அம்மா குழந்தைகள் நல பாிசு பெட்டகம்.

♦ அம்மா மகப்பேறு சஞ்சீவினி பெட்டகம்.

♦ (NICU) பச்சிளம் குழந்தைகள் பராமாிப்பு மையம்.

♦ (CEmONC) ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமாிப்பு மையம்.

♦ (CENTER OF EXCELLENCE) தாய்,சேய் நல ஒப்புயா்வு மையம்.

♦ அம்மா குழந்தைகள் நல பாிசுப்பெட்டகம் (ABC KIT) மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான உடனடி பிறப்புச்சான்றிதழ் வழங்குதல்,

♦ விலையில்லா சானிடாி நாப்கின் வழங்கும் திட்டம்.

♦ சாலை விபத்துகளின் இறப்பு விகிதங்களை குறைக்க TAEI திட்டம்.

♦ அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் திட்டம்.

♦ அவசர மருத்துவ உதவிக்கு 104 ஆம்புலன்ஸ் திட்டம்.

♦  தாய்,சேய் நல உதவிக்கு 102 ஆம்புலன்ஸ் திட்டம்.

♦ அம்மா முழு உடல் பாிசோதனை திட்டம்.

மற்றும் தேசிய சுகாதார திட்டங்களான...

♦ Dr.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்.

♦ தொற்றா நோய்ப்பிாிவு (NCD) திட்டத்தின் கீழ்....

I.புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் கட்டுப்பாட்டு தேசியதிட்டம்
தமிழ்நாட்டின் மக்கள் நலன்களை மேன்படுத்துவதற்காக வும்,ஏழை மற்றும் பின்தங்கியவர்களுக்காகவும் உருவாக்கபட்டது தான் இந்த தொற்றாத நோய்கள் பிரிவு.

II.தொற்றாத நோயால் ஏற்படும் மரணங்களை தடுப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் வரும் நோயாளிகளுக்கு தொற்றாத நோய்க்கான பரிசோதனையும் மற்றும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் தொற்றாத நோய்க்கான தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

III.18 வயது மேற்பட்டவர்களுக்கு சா்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் கண்டறியும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

IV. 30 வயது மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்று நோய் கண்டயறியும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

♦ (RBSK) தேசிய குழந்தைகள் நல்வாழ்வுத்திட்டத்தின கீழ் 1 முதல் 19 வயது வரை உள்ள வளாிளம் குழந்தைகளுக்கான பிறவிக்குறைபாடு கண்டறிதல், வளா்ச்சி குறைபாடுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள், மற்றும் நோய்கள் கண்டறிதல்,

♦ வாராந்திர இரும்புச்சத்து மாத்திரை வழங்கும் திட்டம்.

♦ தேசிய குடற்புழு நீக்கத்திட்டம்.

♦ 6 முதல் 60 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு
வைட்டமின் - A  திரவம் வழங்கும் திட்டம்.

♦ தேசிய பிறப்பு,இறப்பு பதிவு முறை.

♦ தேசிய தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம்.

♦ வளாிளம் பருவத்தினா் உடல்,மனவள ஆலோசனை வழங்கும்
புதுயுகம் திட்டம்.

♦ தேசிய கொசு ஒழிப்பு, காய்ச்சல் தடுப்பு ,சிகிச்சை  மற்றும் நலக்கல்வி மையங்கள் திட்டம்.

மற்றும் பல தமிழக அரசு மற்றும் தேசிய சுகாதார திட்டங்களைப்பற்றியும்,அதன் செயல்பாடுகள் பற்றியும் நன்கு அறிந்துவைத்துக்கொள்ளும்படி நமது செவிலிய சொந்தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

                   நன்றி