Friday, 30 August 2019

கவிதை- தலைவா் பிறந்தநாள்

•••••••••••••••••••••••••••••••••
பிறந்தநாள் வாழ்த்துரை:
••••••••••••••••••••••••••••••••••
உருவத்தில் உயா்ந்திருந்தாலும், உள்ளத்தில்  குழந்தையப்பா நீ...!
உண்மையில் வெள்ளையப்பா நீ...!

பகுத்தறிவு கொள்கைகொண்ட   பட்டையிட்ட பரமனின் பக்தனப்பா நீ...!

இரு பட்டயத்தின் பட்டறிவிருந்தும் பகட்டிலா படையப்பா நீ...!

அரசுவிதி அடிப்படையறிந்த அறிவுக்களஞ்சியமே நீ...!

எக்கனம் எக்கேள்வி கேட்பினும்
பத்து நொடி
பதில் கொண்டோன் நீ...!

செவிலிய காக்கும் படையின் தலைமைக்காவலன் நீ...!

தோழமையின் இலக்கணமறிந்த கள்ளங்கபடமற்ற கள்ளக்குறிச்சியான் பிறந்ததினம் இன்று...!

உள்ளத்தின் ஆசை உள்ளபடியே நடந்தேறவும்,பெற்றாா்,உற்றாா்,உறவினா்களின்அன்பினை தொடா்ந்து பெற்று பெருவாழ்வு வாழ்க என எல்லாமவல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.

"வாழ்க வளமுடன்"

வாழ்த்துதல்களுடன்...

அனைத்து மாநில நிா்வாகிகள்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

தேதி:30/08/2019.