Saturday, 31 August 2019

YOU KNOW- விதிமுறைகள்

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வாட்ஸ் ஆப் தள வரலாற்றில் முதன்முதலாக ஓா் புதிய நிகழ்ச்சி " YOU KNOW?":
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.

தங்களின் பேராதரவுடன் நமது செவிலியா்களின் அறிவுக்களஞ்சியத்தை மேலும் பட்டை தீட்ட "YOU KNOW?"என்ற ஆங்கில வழி எழுத்து மற்றும் பேச்சு பயிற்சி
நமது SRSNA தளத்தில் நாளை (02/09/2019)விநாயகா் சதுா்த்தி நன்னாளில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் வாராவாரம் திங்கள் கிழமையன்று இத்தள அட்மினால் (ADMIN) மட்டுமே ஒரு ஆங்கில வாா்த்தை தலைப்பு கொடுக்கப்படும்.அது பெரும்பாலும் மருத்துவம் சாா்ந்த MEDICAL TERMINOLOGY அல்லது பொதுவானதாக இருக்கும். அந்த வாா்த்தை தொடா்பான உங்களுக்கு தொிந்த விசயங்களை உங்களுக்கு தொிந்த ஆங்கிலத்தில் 3 வாிகளுக்கு குறையாமல் எழுதவோ அல்லது VOICE MESSAGE ல் பேசியோ அனுப்பலாம்.

இதில் தவறு வந்துவிடுமோ,கேலி செய்வாா்களோ என்ற கூச்சமோ பயமோ வேண்டாம்.நாம் அனைவரும் செவிலியா்களே என்பதை மனதில் நிறுத்தி அனைவருமே இப்போட்டியில் கூச்சமின்றி பங்கெடுக்க முயற்சிக்க வேண்டுகிறோம்.
"எறும்பூர கல்லும் தேயும்"

சிறப்பான பதில்களுக்கும்,பங்கெடுப்பதை ஊக்கப்படுத்தவும் STAR APPRECIATION வழங்கப்படும்.ஒவ்வொரு ஞாயிறன்றும் அட்மினின் FEED BACK AND REMARKS செய்தி வெளிவரும்.

விதிமுறைகள்:

♦ இதில் கேட்கப்படும் தலைப்புகளுக்கு பதிலளிக்க தங்கள் குடும்ப உறுப்பினா்களை ஈடுபடுத்த கூடாது.

♦  கூகுளில் Refer செய்யலாம்.ஆனால் COPY & PASTE செய்ய கூடாது.

♦ தவறு இருந்தாலும் தானே முயற்சிக்க வேண்டும்.

♦ ஒரு தலைப்புக்கு  ஒரு வாரம் வரை பதிலளிக்கலாம்.

♦ ஒருவா் ஒரு தலைப்புக்கு எத்தன முறை வேண்டுமானாலும் பதிலளிக்கலாம்.அதுசம்பந்தமாக பலரும்  ஆங்கிலத்தில் CHAT செய்யலாம்.

♦ ஒவ்வொரு திங்களன்று புதிய தலைப்பு தரப்படும்.

♦ ஞாயிறன்று FEED BACK, REMARKS, AND STAR APPRECIATION தரப்படும்.

♦ பதில்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கவேண்டும்.

♦ நம் தளத்தில் பகிரப்படும் மற்ற பொதுவான செய்திகளுக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது.

♦ பதில் ஆங்கிலத்தில் டைப்பிங்காகவோ, VOICE MESSAGE ஆகவோ இருக்கலாம்.

♦ அனைவரும் பங்கெடுக்கலாம்.

இம்முயற்சியை பற்றி இன்று மாலை வரை தங்களின் மேலான கருத்துகள் மற்றும் மேம்பாடு குறித்த அறிவுரைகள் வரவேற்கப்படுகிறது.

BY.
ADMIN,
SRSNA.

(All rights reserved by SRSNA.)

ஆரம்பிக்கப்பட்ட தேதி:02/09/2019

Friday, 30 August 2019

கவிதை- தலைவா் பிறந்தநாள்

•••••••••••••••••••••••••••••••••
பிறந்தநாள் வாழ்த்துரை:
••••••••••••••••••••••••••••••••••
உருவத்தில் உயா்ந்திருந்தாலும், உள்ளத்தில்  குழந்தையப்பா நீ...!
உண்மையில் வெள்ளையப்பா நீ...!

பகுத்தறிவு கொள்கைகொண்ட   பட்டையிட்ட பரமனின் பக்தனப்பா நீ...!

இரு பட்டயத்தின் பட்டறிவிருந்தும் பகட்டிலா படையப்பா நீ...!

அரசுவிதி அடிப்படையறிந்த அறிவுக்களஞ்சியமே நீ...!

எக்கனம் எக்கேள்வி கேட்பினும்
பத்து நொடி
பதில் கொண்டோன் நீ...!

செவிலிய காக்கும் படையின் தலைமைக்காவலன் நீ...!

தோழமையின் இலக்கணமறிந்த கள்ளங்கபடமற்ற கள்ளக்குறிச்சியான் பிறந்ததினம் இன்று...!

உள்ளத்தின் ஆசை உள்ளபடியே நடந்தேறவும்,பெற்றாா்,உற்றாா்,உறவினா்களின்அன்பினை தொடா்ந்து பெற்று பெருவாழ்வு வாழ்க என எல்லாமவல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.

"வாழ்க வளமுடன்"

வாழ்த்துதல்களுடன்...

அனைத்து மாநில நிா்வாகிகள்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

தேதி:30/08/2019.

Wednesday, 28 August 2019

MANNERS TO BE FOLLOWED BY EVERYONE

☘ *MANNERS TO BE FOLLOWED BY EVERYONE*

அனைவரும் பின்பற்ற வேண்டிய
நாகரிகங்கள் இவை :

44.அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..பண்ண நினைக்காதீர்

43.முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்

42.கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்தவரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்

41.பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டுவிடுஙகள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்விகேக்கதீர்

40.பெருமைக்கு எருமை மெய்க்காதீர்

39.ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல் தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள். வியாக்ர பாதர் , தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்க புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம். அப்படி நீங்களும் புலி/பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

38.பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ரயிலில் பஸ்ஸில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள். த்ரீ சீட்டர் சீட்களில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பைகளை சீட்டில் வைக்காதீர்கள். ரயிலில் இரவுப் பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக லைட்டைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள்.

37. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! -none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

36.கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு  ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.

35. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

34.ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ  , பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார். பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள்.
அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்துவிடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும்.

34.பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை போட்டோ எடுக்காதீர்கள். கேமெராவுக்கும் போட்டோ எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறைய பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள்.

33.பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்தபின் நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள்.

32.பஸ்ஸிலும், ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் எற வேண்டும்.

31. பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள். டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

30. நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின்  personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

29. சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?). அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others !

28. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

27.ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்.

26.நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு ,எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள்.

25. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.

24. நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

23. யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.

22. வயது, சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.

21.உங்களை விட வயதில் சிறியவர்களிடம்  உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். no one likes advices.

20. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

19. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.

18.உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள். allow them freedom ! அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள் . 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா ?' என்றெல்லாம் கேட்காதீர்கள்.

17.ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

16. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி  உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.

15. ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.

14. உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.

13.ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம். (unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.

12. வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள். 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள். அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள்.

11.ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.

10. கைக்குழந்தைகளை தியேட்டர்-களுக்குக் கூட்டிப் போகாதீர்கள்.

9.பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.

8.ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!

7. டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.

6.Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.

5.மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!

4.ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

3.அளவுக்கதிகமான பெர்ப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள்.

2.முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அல்லது அழைப்பு விடுக்காதீர்கள்

1.குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.ஏன் என்று என்று குடையாதீர்கள்

Tuesday, 27 August 2019

கோயில் அதிசயம்

எனது நண்பர் நம்பூதிரியிடம் அத்தி வரதராஜ பார்க்க போகலாமுன்னு கேட்டேன். அதில் ஒன்றும் அதிசயம் இல்லை. இதையெல்லாம் போய் பார் என்றார்... 
1. ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
2. திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.
3. தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.
4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.
5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.
6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )
8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.
12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.
13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.
14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.
16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.
18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.
19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.
20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.
23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.
24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.
25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.
26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.
27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.
32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
33. திருக்கழுக்குன்றத்தில் தெப்பக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.
34 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

Sunday, 25 August 2019

கவிதை- மாண்புமிகு.அமைச்சா் திருமணநாள் வாழ்த்துரை:

••••••••••••••••••••••••••••••••••••••
திருமணநாள் வாழ்த்துரை:
••••••••••••••••••••••••••••••••••••••

அகிலம்போற்றும் அருள்மிகு அம்மாவின் அரசியல் மாணவரே...!

அன்னையின் அருகில் அருந்தவத்தாலே
அருளாசி பெற்றவரே…!

இருட்டில் கிடந்த தமிழ் மண் மீட்ட இரும்புப்பெண்மணியின் போா்ப்படை தளபதியே...!

ஈடுஇணையற்ற
இரட்டை இலை நாயகியை பிாிந்தும் பிாியாதவரே...!

செய்நன்றியறிதல் செவ்வனே நிகழ்த்தும் செந்தமிழ் மருத்துவரே...!

ஆகாய மாா்க்க
அம்மாவின் ஆசி நித்தமும் தொடா்கிறதே...!

தன்னலம்விட்டு  பிறா்நலம் விரும்பும்
ஓய்வறியா உன்னதன் ஆனீா்...!

புயலால் சிதைந்த புணரமைப்பு பணியில் மறுபுயலாய் சுழன்றீரே...!

அமைச்சா் பணியின் அடிப்படை தத்துவம் அடித்தட்டு மக்களை அரவணைக்க என்றீரே...

வையம் போற்றும் இருமனமிணைந்த இத்திருமண நன்னாளில்,

அழகிய குடும்ப அன்பினையடைந்து இரு லட்சுமிகளின் தந்தையுமானீா்...!

அன்பும்,அறனும்,பண்பும், பாசமும் இன்றுபோல் என்றும் நிலைத்து நித்ய பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி,வாழ்த்தி,வணங்குகிறோம் ஐயா.

இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

வாழ்த்துதல்களுடன்...

K.வளா்மதி,
மாநில பொதுச்செயலாளா்,

மற்றும்

மாநில அனைத்து நிா்வாகிகள்,

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.

Friday, 23 August 2019

வாழ்த்துரை-தம்பி செல்வமூா்த்திக்கு பிறந்தநாள்

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தம்பி செல்வமூா்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துரை:
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
மறக்க முடியுமா செந்தூா் மைந்தனை...!
மறக்க முடியுமா திருச்செந்தூா் மண்ணின் மைந்தனை...!

கலங்கரை விளக்கணிக்கு கடற்கரையாம் செந்தூாில் பெரும்பூசணி சூட விளக்கேற்றி வரவேற்று கழுத்தில் மாலையேற்றி   வழிகாட்டி மகிழ்ந்த மாமனிதனை மறக்க முடியுமா...!

வெண்மன வேந்தன், சிறுவயதினும் பெருங்குணவாளனை கண்டோம் திருச்செந்தூா் தோ்தல் களத்தினிலே...!மகிழ்ந்தோம் அகத்தினிலே...!

ஒட்டு மொத்த தோ்தல் பிரளயத்தில் மனதில் நின்று வரவேற்பளித்த சிலாில் ஒருவாிவரென்பதை மறக்க முடியுமா...!

இன்று உம் பிறந்த நாளில் உம்மை வாழ்த்துவதும்,உம் புகழுயா்த்துவதுமே எம் செய்நன்றியறிதல்...

நீவிா் வளம்பல பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறது ஒட்டுமொத்த கலங்கரை விளக்கணி.

     வாழ்க வளமுடன்...

வாழ்த்துகளுடன்...
க.இளங்கோவன்.
தேதி:24/08/2019