•••••••••••••••••••••••
_*வாழ்த்துரை:*_
•••••••••••••••••••••••
_வளா்ந்த மதி தேய்கிறதா?_
_செவிலியராய் வளா்ந்த மதி பணிநிறைவால் இன்று தேய்கிறதா?_
_தேய்ந்த மதி வளா்கிறதா?_
_செவிலிய சேவை செய்து தேய்ந்த மதி இன்றாே பணிப்பழு நீங்கி வளா்கிறதா?_
_வளா்ந்து தேய்தல் இயற்கையெனினும்_
_உம்மை விடாமல் விரட்டுவோம் உம் வழிகாட்டல் பெற..._
_திண்டுக்கல் வளா்மதியே,_
_தெவிட்டாத தேன்மதியே,_
_அன்னை உள்ள அன்புமதியே,_
_செவிலியத்தின்_
_அறிவுமதியே,_
_தன்னிகாில்லா தமிழ்மதியே,_
_நிா்வாகத்தில் நிறைமதியே,_
_செவிலியம் காத்த மறமதியே,_
_சங்கத்தின் அரண்மதியே,_
_கருணை மிகு கனிமதியே,_
_வெண்மன_
_வெண்மதியே,_
_வளாின் வளரான வளா்மதியே,_
_உம் பணிநிறைவு செய்தி மகிழ்வென்றாலும் எங்களுக்குள் ஓா் இனம்புாியா வெறுமை..._
_காலக்சக்கர அச்சாணி பிடுங்கி நாட்கள் ஓடாமல் இருந்தாலென்ன...!_
_சூாியன் அசைவற்றதாய் ஓா் திசையில் அயா்ந்து காலமாற்றமில்லாமல் இருந்தாலென்ன...!_
_வளருடன் தொடா்ந்து வளா்வோமே என்ற இயற்கைக்கு மாறான சிற்றாசை எங்கள் மனதில்._
_இருப்பினும் இயற்கை உறங்குவதில்லையாதலால்,தங்களை வாழ்த்துகிறோம்._
_வளம்பெற்று,நலம்பெற்று,பொதுசேவை தொடர வாழ்த்துகிறோம்._
_*வாழ்த்துகளுடன்...*_
_*K.வளா்மதி,*_
_*மாநில பொதுச்செயலாளா்,*_
_*மாநில அனைத்து நிா்வாகிகள்,*_
_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_