இந்து மதம் பற்றி யாராவது கேட்டால் மற்றும் தெரியாதவர்களுக்கு நமது இந்து மதத்தின் பெருமையை உணர்த்துங்கள்.
1,ஹிந்து மதம் என்றால் என்ன?
பதில் :இந்து மதம் என்பது மதம் என்பதையும் தாண்டி அது ஒரு வாழ்வியல் நுட்பங்கள் வாய்ந்தவை தான் இந்துமதம். அற்புதம், ஆனந்தம்,அதிசயம்,அறிவியல் இவை அனைத்தும் அடங்கியது தான் தம் இந்து மதம்.
2,ஹிந்து மதம் எப்போது தோன்றியது?
பதில்: எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போது துவங்கியது இந்துமதம்.
3,ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?
பதில் : ஒரே தெய்வம் என்று ஏன்இருக்க வேண்டும்.எல்லையில்லாஇறையை நமது புரிதலுக்கேற்பபுரிந்து கொள்கிறோம். அந்தபுரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும்நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மை உள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது.
4,சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?
பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கயியலா அங்கம். மனத்துய்மையுடன் உண்மையாக செய்யும் வழிபாடு தான் மிக முக்கியமான ஒன்று.
5,புராணங்கள் உண்மையா? பொய்யா?
பதில் : உண்மை.அதற்க்கு சாட்சியாக இந்தியாவில் பல ஆயிரம் பழமை வாய்ந்த ஆலயங்கள் உண்டு. குறிப்பாக பஞ்ச பாண்டவர்கள் வந்து வணங்கிய ஆலயம் குஜராத்தில் கடலுக்குள் இன்றும் உள்ளது.
புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.
6,புண்ணியம் – பாவம் என்பது என்ன?
பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.மகாபாரதம் கூறுகிறது ॥ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வாசைவாவதார்யதாம் |ப்ரோபகார: புண்யாய, பாபாயபரபீடனம் ||“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மைசெய்தல் புண்ணியம். பிறருக்குதீமை செய்தல் பாவம்”
7,தர்மம் என்பது எது?
பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின்,கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.
8,ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்?தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?
பதில் : நல்லது, கெட்டது குறித்த Myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும்பிரபஞ்சத்தின் அங்கங்களே. இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன.இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்தபிறவியிலே தமது தீயசெயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.
9,ஜோதிடம் உண்மையா?
பதில் : உண்மைதான் என்றுஅனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள்.அதற்க்கு பெரிய உதாரணம் விஞ்ஞானம் இல்லாமால் இருந்த காலகட்டத்தில் சுமார் பல ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த இந்து கோவில்களில் இருக்கும் நவகிரக சிலைகளை ஜோதிடம் உண்மை என்று சொல்வதற்கு பெரிய உதாரணம்.
10,“சாமி” வந்து விட்டது என்றுஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?
பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப்பொறுத்து இருக்கிறது.
11,தீமிதித்தல்,அலகு குத்தி காவடிஎடுத்தல் போன்றவை தேவைதானா?
பதில் : மற்றவர்களை தீயில்..தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது!
12,ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?
பதில் : இயல்பானவர்கள் என்று அர்த்தம்.
#சிவசித்தர் #shivasiddhar