*சகல துறைகளிலும் சரித்திரம் படைத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் உலகின் 6 மாபெரும் பொருளாதார நாடுகள் பட்டியலுக்கு முன்னேறிய இந்தியா.!*
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019–2020 ஆம் நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்த சில முக்கிய அம்சங்களை இனி காணலாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது
இந்தியாவின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவது என்பது சாத்தியமானது
1.8 லட்சம் கோடி டாலர் என்கிற மதிப்பில் இருந்து 2.7 லட்சம் கோடி டாலாராக இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது
மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும்.
உலகின் 6வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தற்போது திகழ்ந்து வருகிறது
வளர்ச்சியை உறுதிப்படுத்த சீரமைப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டியுள்ளது
3 லட்சம் கோடி டாலர் எனும் அளவை நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் கடக்கும்
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீடு அதிகப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்
சாமான்ய மக்களின் நலனை கருத்தில் கொண்டே மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது
மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் சாமான்ய மனிதனின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது
தொழில்துறை சார்ந்த கொள்கை முடிவுகள் உடனுக்கு உடன் எடுக்கப்படுகின்றன
சாலை போக்குவரத்தை மேம்படுத்துவது என்பது வளர்ச்சிக்கு மிக அடிப்படையான ஒரு அம்சம்
சாலை போக்குவரத்தை போலவே உள் நாட்டு நீர் வழிப்போக்குவரத்து வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்
உடான் திட்டம் மூலமாக சிறிய நகரங்களும் விமான சேவையை பெற்று வருகின்றன
போக்குவரத்தை மேம்படுத்தியன் மூலம் கிராம மற்றும் நகரங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைத்துள்ளோம்
போக்குவரத்து துறை:
விமான போக்குவரத்து துறையில் இந்தியா முதலீடு செய்யும்
300 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
தற்போது 657 கி.மீ தொலைவு மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன
விமான போக்குவரத்து துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும்
மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மூன்று ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு
மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் மானியம் வழங்கப்படும்
சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த ஆற்றுவழி போக்குவரத்து மேம்படுத்தப்படும்
நாடு முழுவதும் பயணம் செய்ய ஒருங்கிணைந்த கட்டண முறையில் பயண அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்
கங்கை நதியில் சரக்கு போக்குவரத்தை நான்கு மடங்கு அதிகமாக்க நடவடிக்கை
ஒரே நாடு ஒரே மின்தடம் எனும் திட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கான மின் விநியோகத்தை வேகப்படுத்த முடியும்
அனைத்து தடங்களும் மின்மயமாக்கப்பட்டு ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள நடவடிக்கை
அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் வீடு என்பது தான் மத்திய அரசின் தாரக மந்திரம்
வர்த்தகம்:
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு நடப்பாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு
வர்த்தகர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்
நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது
வருடத்திற்கு ரூ.1.5 கோடி வர்த்தகம் மேற்கொள்ளும் வணிகர்கள் 3 கோடி பேருக்கு ஓய்வூதிய திட்டம்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களுக்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கொடுக்கும் திட்டம்
வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் ஆரோக்கியமான நிலையில் இந்தியாவிற்கு கிடைத்து வருகிறது
காப்பீட்டு துறையில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்
துடிப்பான குஜராத் எனும் தொழில் வளர்ச்சி திட்டம் நாடு முழுமைக்கும் முன்னோடியாக கொள்ளப்படும்
நாடு முழுவதும் தொழில் நிறுவனங்களை தொடங்க உலக முதலீட்டாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்படும்
விண்வெளித்துறை:
இந்தியா விண்வெளித்துறையில் மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது
விண்வெளி வாய்ப்புகளை வர்த்தக ரீதியில் பயன்படுத்திக் கொள்ள இந்தியா முன்னுரிமை கொடுக்கும்
விண்வெளி வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்த இஸ்ரோவின் கீழ் செயல்படும் புதிய நிறுவனம் உருவாக்கப்படும்
உள்நாட்டு உற்பத்தி 7 சதவீத வளர்ச்சிக்கு உறுதி தரும் பட்ஜெட்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியால் 40 ஆயிரம் புள்ளிகளை தொட்டு உச்சத்தில் சென்செக்ஸ் !!
பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீத்தாராமன்! ஒரே நாடு .. ஒரேமாதிரியான மின் விநியோகம்!! மக்களவை உறுப்பினர்கள் கைதட்டி கரகோஷம் !!