ஆரோக்கியமான வெற்றிலை ரசம் !!!
பல்வேறு மகத்துவம் கொண்ட வெற்றிலையை ரசம்
வைத்துப் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்?
தேவையான பொருட்கள்
வெற்றிலை - 5,
நெய் - 2 ஸ்பூன்,
கடுகு - கால் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
சீரகம் - 1 ஸ்பூன்,
மிளகு - கால் ஸ்பூன்,
பூண்டு - 5 பல், தக்காளி - 1,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்,
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எலுமிச்சை பழச்சாறு - 2 ஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது.
செய்முறை
காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, தக்காளி, வெற்றிலை ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியை நீர்விட்டுக் கரைத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் சேர்த்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் விட்டு, கடுகு போட்டு தாளித்துக் கொண்டு புளி ரசத்தை விட்டு சிறிது கொதிக்கவிட வேண்டும். பின் அரைத்த வெற்றிலை விழுதைச் சேர்க்கவும். தேவையான உப்பும் சேர்க்கவும். நன்றாக கொதி வந்தவுடன் இறக்கி எலுமிச்சைப்பழச்சாறை விட்டால் சுவையான, வெற்றிலை ரசம் தயார்.
வெற்றிலை ரசத்தினை குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். வாரத்துக்கு மூன்று முறை சாப்பிடலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், அல்சர் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்னை கொண்ட வர்களுக்கு வெற்றிலை ரசம் பெரிதும் உதவி செய்யும். பார்வை பிரச்னையைப் போக்கும் திறன் கொண்டது. சாதத்தில் பிசைந்து சாப்பிட மட்டுமல்ல; சூப்புபோலவும் அருந்த ஏற்ற பானம் இது.
தொண்டை கட்டு, இருமல், போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாக பயனளிக்கும். நம் உடலில் உள்ள தோல் நோய்களுக்கு அடிப்படை காரணம் துவர்ப்பு சுவை குறைவதாகும் இந்த துவர்ப்பு சுவை நிறைந்த வெற்றிலையை நாம் எடுத்துக்கொள்ளும் போது பல்வேறு தோல்நோய்களும் குறைகிறது.
வெற்றிலை ரசத்தினை எடுத்துக்கொள்வதன் மூலம் குரல் வளம் இனிமையானதாக மாறும். மொத்தத்தில் ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரமாக வெற்றிலை ரசம் இருக்கும்.